உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 78 ஆண்டுகளுக்கு பின் மின்சாரம் கிடைத்த கிராமம்

78 ஆண்டுகளுக்கு பின் மின்சாரம் கிடைத்த கிராமம்

கோட்டா : நாடு சுதந்திரம் அடைந்து, 78 ஆண்டுகளுக்குப் பின், ராஜஸ்தானின் மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு மின்சாரம் கிடைத்திருக்கிறது.ராஜஸ்தானில் பரன் மாவட்டத்தில், பழங்குடியினர் வாழும் மலைக்கிராமத்தில், நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தே மின்சார வசதி வழங்கப்படவில்லை. இங்கு, 40 வீடுகள் உள்ளன. சஹாரியா பழங்குடியினத்தை சேர்ந்த 200 பேர் வசிக்கின்றனர். மின்சாரம் இல்லாதது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மக்கள் முறையிட்டனர்.இதையடுத்து, பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் பிரதமர் ஜன்மான் திட்டத்தின் கீழ் அந்த கிராமத்துக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ரோஹிதாஷ்வ சிங் தோமர் கூறினார். இதையடுத்து,​பரன் மாவட்டம் 100 சதவீத மின்சார இணைப்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sasidharan
ஜூலை 12, 2025 12:53

இது வரை ஆட்சி செய்தவர்களின் தவறு. ஓட்டு வங்கி மட்டுமே பிரதானம் என்று இருந்து விட்டார்கள் உள்ளூர் அரசியல்வாதிகள்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 12, 2025 09:05

என்னது >>>> நாம இன்னும் வல்லரசு ஆகலையா >>>>


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 12, 2025 09:00

பிஜேபியும் , காங்கிரசும் ஒருவரை ஒருவர் குத்தம் சொல்லியே மக்களை திசை திருப்புங்க .....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 12, 2025 08:44

என்னது >>>> இந்தியா இன்னும் வல்லரச்சு ஆகலையா >>>>


Kudandhaiyaar
ஜூலை 12, 2025 10:58

இல்லை. கேப்டன் விஜயகாந்த் தான் மறைந்துவிட்டார். ஆகவே வல்லரசு ஆக முடியாது இப்பொழுது


Vasan
ஜூலை 12, 2025 07:28

Government should compensate those neglected people, for betrayed them, by denying electricity for their home all these years. 10 years of free electricity and free LED bulbs.


Seekayyes
ஜூலை 12, 2025 07:09

வெட்ககேடு இது கொண்டாடப்பட வேண்டிய செய்தியாக எனக்கு தெரியவில்லை. இந்த நாடு சுதந்திரம் கடந்த 78 வருடங்கள் வீண்ணடிக்கப்பட்டதாக எண்ணுகிறேன். இன்னும் எத்தனை மலைகிராமங்கள் விடப்பட்டுள்ளது தெரியவில்லை


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 12, 2025 07:08

அதாவது கிராமத்திற்கு மின்வசதி வேண்டும் என்று லெட்டர் கொடுக்க 77 ஆண்டுகள் ஆகியுள்ளது. குறைந்தது 11 அரசுகள் ஆட்சியில் இருந்துள்ளன. நல்ல வளர்ச்சி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை