உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாம்பு கடியால் பலியான நபர்! சடலத்துடன் அதே பாம்பை உயிருடன் எரித்த ஊர் மக்கள்

பாம்பு கடியால் பலியான நபர்! சடலத்துடன் அதே பாம்பை உயிருடன் எரித்த ஊர் மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோர்பா; சத்தீஸ்கர் மாநிலத்தில் பாம்பு கடியால் பலியானவரின் சடலத்துடன் அதே பாம்பை பிடித்து உயிருடன் மக்கள் எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இது பற்றிய விவரம் வருமாறு; கோர்பா மாவட்டத்தில் பைகாமர் கிராமத்தைச் சேர்ந்தவர் திகேஸ்வர் ரத்தியா. வழக்கம் போல் உறங்குவதற்காக தமது படுக்கையை தயார் செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எங்கிருந்தோ வந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது.உடலில் வேகமாக விஷம் ஏறவே இதை அறிந்த அங்குள்ளோர் திகேஸ்வர் ரத்தியாவை உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவரை மருத்துவர்கள் காப்பாற்ற போராடினர். எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் போக திகேஸ்வர் ரத்தியா உயிரிழந்தார்.பிரேத பரிசோதனைக்கு பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பாம்பு கடித்து உயிரிழப்பு ஏற்பட்டதை அறிந்த ஊர் மக்கள் அடுத்து செய்த காரியம் தான் வினோதமானது. அந்த பாம்பை தேடிப்பிடித்த அவர்கள், திகேஸ்வர் ரத்தியாவின் சடலத்துடன் சேர்த்து எரிக்க முடிவு செய்தனர். அதற்காக பாம்பை ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் போட்டு வைத்தனர். வீட்டில் இருந்து இறுதிச்சடங்குக்காக சடலத்துடன் உறவினர்கள், கிராம மக்கள் ஊர்வலமாக சுடுகாட்டுக்குச் சென்றனர். அப்போது பிளாஸ்டிக் பக்கெட்டில் இருந்த பாம்பையும் உடன் கொண்டு சென்றனர். கட்டை ஒன்றுடன் பாம்பை நன்றாக கட்டி, சடலம் எரியும் போது சிதையில் தூக்கி போட்டு எரித்தனர்.ஊரில் உள்ள மற்றவர்களையும் இதே பாம்பு கடித்துவிட்டால் என்ன செய்வது? அதற்காக தான் இப்படி செய்தோம் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அரசு உயரதிகாரிகள் கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

subramanian
செப் 23, 2024 21:37

பாம்பை நாம் தெய்வமாக வழிபட்டு வருகிறோம். இயற்கையின் படைப்பில் எல்லாம் வாழ தகுதி இருக்கிறது. வேறு பாம்பு அந்த கிராமத்தில் வராதா?


KRISHNAN R
செப் 23, 2024 21:02

இங்கு பல நம்பிக்கைகள் உள்ளன. இரண்டும். விதிப்படி என்று நினைப்பதை. தவிர வழி இல்லை


அப்பாவி
செப் 23, 2024 19:24

காண்டவ வனத்தை எரித்த போது லக்ஷக்கணக்கான பாம்புகள் எரிந்து செத்தன. அந்த இடத்தில்தான் காட்டை அழிச்சு இந்திர பிரஸ்தத்தைக் கட்டுனாங்கன்னு மகாபாரதம் சொல்லுது. தன் அப்பாவான பரிஷத்தை தக்ஷகன் கடிச்சதால, ஜெனெமேஜெயன் சர்ப்பயாகம் பண்ணி தக்ஷகனைத் தவிர மாத எல்லா பாம்புகளையும் கொன்றதாக மகாபாரதம் சொல்லுது. அதனால இந்த ஒருபாம்பை கொல்வதால் பெரிய நஷ்டமில்லை. திரும்ப நிறைய வந்துரும்.


அப்பாவி
செப் 23, 2024 16:59

படத்துல ரெண்டு மூணு பாம்புகள்.இருக்கே. அந்த கொலகார பாம்பை எப்புடி கண்டு பிடிச்சாங்க? பாம்பு கடிச்சிட்டு தலை மறைவாயிடுமே.


Barakat Ali
செப் 23, 2024 20:10

உண்மைதான் ... தலைமறைவான பாம்பு அடுத்ததா உன்னைத்தான் போட வருதாம் ....


KRISHNAN R
செப் 24, 2024 09:25

ஒரு ஊரில் ஒரு ஆசிரியர் இருந்தார். வகுப்பில் மாணவர் பேசினால்,,, அந்த திசையில் உள்ள நான்கு மாணவர்களை கூப்பிட்டு அடிப்பார்.. அதில் உண்மையாக பேசியவன் யார் என்று தெரிந்து விடும்.. அது போல தான் இதுவும்


sundarsvpr
செப் 23, 2024 16:13

பாம்புகளை கொன்று உயிர் வாழலாம் என்று நினைத்தால் தாங்களும் வாழவேண்டும் என்று பாம்புகள் ஏன் இறைவனை வேண்டக்கூடாது. சாவினை நிர்ணயனம் செய்வது ஆண்டவன். மனிதன் தவறு செய்தால் இறைவனிடம் மன்னிப்பு கேட்கலாம். பாம்பிற்கு இந்த சலுகை ஏன் இல்லை.? இதற்கு ஒரு வழி ஆண்டவன் தனுக்குத்தானே பாம்புகளின் நிமித்தம் மன்னிப்பு கோரவேண்டும்.


கோவிந்தராசு
செப் 23, 2024 16:07

இது ல எங்க அதிர்சி பாம்ப கொல்வது வழக்கமானதுதான்