உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைச்சர் காரை 1 கி.மீ., விரட்டி சென்று டின் கட்டிய கிராம மக்கள்

அமைச்சர் காரை 1 கி.மீ., விரட்டி சென்று டின் கட்டிய கிராம மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில், துக்கம் விசாரிக்க வந்த அமைச்சரின் கான்வாயில் வந்த கார்களை, 1 கிலோ மீட்டர் துாரம் விரட்டி சென்று கிராம மக்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஜோகிபூர் மாலவன் கிராமத்தில், கடந்த வாரம் நடந்த சாலை விபத்தில் 9 பேர் பலியாகினர். அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து துக்கம் விசாரிப்பதற்காக, ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த, கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஷரவண் குமார், அந்த கிராமத்திற்கு நேற்று முன்தினம் சென்றார். அந்த தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச் சருடன் காரில் சென்றார். அங்கு சென்றதும் அமைச்சரை கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர். 'சம்பவம் நடந்து இவ்வளவு நாளான பின் ஏன் வந்தீர்கள்? விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காதது ஏன்?' என, அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர். மேலும் அமைச்சர் உள்ளிட்ட அரசியல்வாதிகளை அவர்கள் விரட்டி தாக்க துவங்கினர். இதனால் பீதிஅடைந்த அமைச்சர் உள்ளிட்டோர் கார்களில் தப்பி சென்றனர். அமைச்சருடன் சென்ற கார்களை கிராம மக்கள் 1 கி.மீ., விரட்டி சென்று தாக்கினர். அதிர்ஷ்டவசமாக இதில் அமைச்சர் காயமின்றி தப்பினார். அமைச்சரின் பாதுகாவலர் காயம் அடைந்தார். அவர் ஹில்சா பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இந்நிலையில், அந்த கிராமத்தில் போலீசார் பாதுகாப்பை பலப் படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பாரத புதல்வன்
ஆக 29, 2025 15:32

தமிழகத்தில் இது போன்ற சம்பவம் நிச்சியம் நடக்கும்....


Abdul Rahim
செப் 01, 2025 19:17

பாவம் ரொம்ப எரியுதோ அண்ணனுக்கு ஒரு ஐஸ் மோர் பார்சல்ல்ல்ல்ல்ல்


அறிவழகன்
ஆக 29, 2025 08:41

எடு ரா ஸ்டிக்கர் ஒட்டுடா . நம்ம daleevaru அங்கே போய் எழுச்சி உரை ஆற்றினார். ஒடனே புரட்சி வெடித்தது...இது எப்டி இருக்கு..?


Ramesh Sargam
ஆக 29, 2025 08:24

தமிழகத்திலும் இந்த நிலை சீக்கிரம் வரும். வரவேண்டும்.


nisar ahmad
ஆக 29, 2025 13:47

பஜக ஆதிமுக ஆட்சியமைந்தால் ஒருவேலை இங்கும் நடக்கும்.


Abdul Rahim
செப் 01, 2025 19:15

மத்திய அமைச்சர்கள் வரும்போதுதானே


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 29, 2025 06:52

செய்தியாளருக்கு ரொம்பத்தான் குசும்பு. அவங்க விரட்டி விரட்டி அடித்து துவைத்தது நம்ம திராவிட முதல் அமைச்சரைத்தானே? நேரடியாக சொல்லாமல், இப்படி சுற்றி வளைத்து... ஹ ஹ ஹா


Abdul Rahim
செப் 01, 2025 19:14

ஐயோ வழியுது துடைச்சிக்கோங்க சார் ...


Mani . V
ஆக 29, 2025 04:32

பீஹார் மக்களுக்கு இருக்கும் ரோஷமும், தைரியமும் தமிழக மக்களுக்கு இல்லையென்னும் பொழுது வேதனைதான் மிஞ்சுகிறது.


raja
ஆக 29, 2025 06:18

அவனுவோ வடகன்ஸ் பாணி பூரி பீடா வாயனுவோ... தமிழன் நாகரீகம் அடைந்தவன் என்று தமிழனின் கையாலாகாத ரோசம் கெட்ட தனத்தை சப்பைக்கட்டு கட்ட ரூவா 200 குடும்ப கொத்தடிமைகள் ஊளை இட வருவானுவோ பாருங்க...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை