உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில்வே பணி ராஜினாமா: வினேஷ் போகத் அறிவிப்பு; காங்., கட்சியில் இணைகிறார்!

ரயில்வே பணி ராஜினாமா: வினேஷ் போகத் அறிவிப்பு; காங்., கட்சியில் இணைகிறார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ரயில்வே பணியை ராஜிமானா செய்தார். அவர், 'ரயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியது மறக்க முடியாது' என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு, அக்., 5ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அக்., 8ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள 66 வேட்பாளர்களின் பெயர்களை, காங்., மேலிடம் இறுதி செய்து விட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nuwh33rv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று முடிவு செய்துள்ள காங்கிரஸ் கட்சி, பா.ஜ.,வுக்கு எதிரான பிரபலங்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது. அதற்கு வசதியாக, ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ், முன்னாள் வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் கிடைத்துள்ளனர்.

காங்கிரசில் இணைகிறாரா?

காங்கிரஸ் அழைப்பின்பேரில், சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை, பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் ஆகியோர் டில்லியில் சந்தித்து பேசினர். அப்போது முதலே, இருவரும் ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ராஜினாமா

இந்த சூழலில் தான், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனது ரயில்வே பணியை ராஜிமானா செய்தார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்திய ரயில்வேயில் சேவையாற்றியது என் வாழ்வில் மறக்கமுடியாத மற்றும் பெருமையான தருணம். ரயில்வே துறையில் இருந்து விலகி கொள்ள முடிவு செய்தேன். ராஜினாமா கடிதத்தை இந்திய ரயில்வேயின் திறமையான அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளேன். தேசத்திற்கு சேவை செய்ய ரயில்வே எனக்கு வழங்கிய இந்த வாய்ப்பிற்காக, இந்திய ரயில்வே குடும்பத்தினருக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்' என பதிவிட்டுள்ளார். அடுத்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rajarajan
செப் 06, 2024 16:10

என்னடா இன்னும் ஒன்னும் நடக்கலையேன்னு நெனச்சேன். நடத்திட்டங்க. இனி உங்களுக்கு வரப்போகும் ஏழரையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதுசரி, ஒலிம்பிக் கமிட்டி எடுத்த முடிவுக்கு, காங்கிரஸ் வெற்றி மாலையை வாங்கித்தருமா என்ன ? இல்ல இதுல பா.ஜ.க. மேல என்ன கோபம் ?


RAMAKRISHNAN NATESAN
செப் 07, 2024 09:20

அவரது மாநிலம் காரணம் ......


nagendhiran
செப் 06, 2024 15:57

ஆடு கசாப்புகாரனைதான் நம்பும்?


Nagarajan D
செப் 06, 2024 15:37

இதுகள் காங்கிரஸ் சாக்கடையில் விழவில்லை என்றால் தான் அதிசயம்


Kumar Kumzi
செப் 06, 2024 15:18

இதுக்கு தானே பிஜேபிக்கு எதிராக அநியாயமாக போராட்டம் பண்ணுன அதற்கு தான் ஒலிம்பிக் போட்டியில் ஒனக்கு சரியான தண்டனை கிடைத்தது


R.MURALIKRISHNAN
செப் 06, 2024 15:15

காசுக்கு நான் அடிமை. நாட்டுக்கு ?


S Ramkumar
செப் 06, 2024 14:52

ஆடு மெதுவாக வெளியே வந்து விட்டது.


Jai Sankar Natarajan
செப் 06, 2024 14:23

ஒழிஞ்ச சரி அரசு பதவியில் இருந்து


A Viswanathan
செப் 06, 2024 16:33

இனி இவர்கள் மட்டும் தான் பாக்கி மக்களுக்கு சேவை செய்வதற்கு அதுவும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக.


முக்கிய வீடியோ