உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மே.வங்கத்தில் ஓட்டு இயந்திரத்தை குளத்தில் வீசிய வன்முறையாளர்கள்

மே.வங்கத்தில் ஓட்டு இயந்திரத்தை குளத்தில் வீசிய வன்முறையாளர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: கடைசி கட்ட தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறை வெடித்தது. வன்முறையாளர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். வேறொரு இடத்தில் ஓட்டுச்சாவடியை சூறையாடிய வன்முறையாளர்கள் மின்னணு ஓட்டு இயந்திரத்தை தூக்கிச் சென்று குளத்தில் வீசினர். லோக்சபாவுக்கு கடைசி கட்ட தேர்தல் இன்று(ஜூன் 1 ) நடக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் 9 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. திரிணமுல் காங்கிரசின் அபிஷேக் பானர்ஜி, பா.ஜ.,வின் ரேகா பாத்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுஜன் சக்கரவர்த்தி ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவார்கள்.மாநிலத்தில் சில பகுதிகளில் வன்முறை வெடித்தது. ஜாதவ்பூர் தொகுதிக்கு உட்பட்ட சதுலியா பகுதியில் மோதல் வெடித்தது. மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் ஐஎஸ்எப் கட்சியினர் மோதிக் கொண்டனர். அப்போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. அதில், ஐஎஸ்எப் தொண்டர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. தெற்கு 24 பார்கனஸ் மாவட்டத்தின் குல்தலி ஓட்டுச்சாவடிக்குள் செல்ல சில தேர்தல் முகவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த கும்பல் ஒன்று, அத்துமீறி உள்ளே நுழைந்து, மின்னணு ஓட்டு இயந்திரத்தை தூக்கிச் சென்று குளத்தில் வீசினர். இதனால், கோபமடைந்த உள்ளூர் வாசிகள் விவிபேட் இயந்திரத்தை சேதப்படுத்தினர்.நேற்று பஷீர்ஹட் தொகுதிக்கு உட்பட்ட சந்தேஷ்காலியில் பதற்றம் ஏற்பட்டது. திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் போலீசார் மிரட்டுவதாக உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

RAMAKRISHNAN NATESAN
ஜூன் 01, 2024 19:50

மத்தியில் நல்லாட்சி தொடர்ந்தாலும் கூட தமிழகம், கேரளம், மேற்குவங்கம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் மாற்றம் வர வாய்ப்பில்லை ..... காரணம் மத அடிப்படைவாதிகள், சீன, பாகிஸ்தானிய அடிவருடிகள், தேசவிரோதிகளால் மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள் ....


அசோகன்
ஜூன் 01, 2024 16:15

காஷ்மீரை மீட்ட மோடி மேற்கு வங்கதை மற்றொரு காஷ்மீர் ஆகுவதை தடுக்காமல் இருக்கிறது வருத்தம் அளிக்கிறது .......


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 01, 2024 19:47

தென்னிந்தியாவில் தமிழகமும், கேரளமும் கூட காஷ்மீர் போலத்தான் ...


Kumar Kumzi
ஜூன் 01, 2024 15:59

ரவுடியின் ஆட்சியில் வேறு எதை எதிர் பார்க்க முடியும் வேலையாக இருக்க கூடும்


Lion Drsekar
ஜூன் 01, 2024 14:59

இரயில் பணமாக ருந்தாலும், ஒழுங்காக வரிகட்டுவதாக இருந்தாலும், இரயில் டிக்கட் எடுத்து முறையாக பயணம் செய்வதாக இருந்தாலும், எல்லாவற்றிலும் மிகவும் கட்டுப்பாட்டுடன் ஒரு எடுத்துக்காட்டாக நாம் திகழ்கிறோம் என்பதில் நமக்கு பெருமை . வந்தே மாதரம்


Anbuselvan
ஜூன் 01, 2024 14:37

மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் கேலி கூத்தாகி வருகிறது. ஜனாதிபதி ஆட்சிதான் இதற்கு தற்காலிக தீர்வு. ஜூன் 4 க்கு பிறகு இதை எதிர் பார்க்கலாம். அது அரசியல் அணைப்பு சட்டத்திற்கு எதிராக மாநிலத்தில் சட்டம் இயற்றும் மாநிலங்களுக்கு எச்சரிள்கையாக அமையும்.


Santhakumar Srinivasalu
ஜூன் 01, 2024 13:42

356 ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைத்து ஜனநாயகத்தை காப்பது ஒரே வழி!


chennai sivakumar
ஜூன் 01, 2024 13:41

நேராக துப்பாக்கி சூடு. அப்புறம் ஒரு பய வாலை ஆட்ட மாட்டான். இதன் தொடர்ச்சியாக ஜனாதிபதி ஆட்சி அடுத்த தேர்தல் வரை. பிறகு பாருங்கள் நடப்பதை.


Ashok
ஜூன் 01, 2024 13:35

politics ????


ganapathy
ஜூன் 01, 2024 13:15

ஜனாதிபதி ஆட்சிதான் தீர்வு


Kannan Sethu
ஜூன் 01, 2024 13:08

நடப்பது அராஜகம் அடங்காத தீவிரவாதம் முன்னேற்றத்திற்கு முனையாத கூட்டம்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை