உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வக்பு மசோதா சட்டத்திருத்தங்கள்; ஒப்புதல் அளித்தது பார்லி கூட்டுக்குழு!

வக்பு மசோதா சட்டத்திருத்தங்கள்; ஒப்புதல் அளித்தது பார்லி கூட்டுக்குழு!

புதுடில்லி: வக்பு மசோதா தொடர்பாக, 14 சட்டத்திருத்தங்களுக்கு பார்லி கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது.வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை லோக்சபாவில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா, பார்லி., கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kqew0dtx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று (ஜன.,27) பார்லிமென்ட் வளாகத்தில் வக்பு சட்ட திருத்த மசோதா மீதான கூட்டுக் குழுவின் கூட்டம், குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தி.மு.க., எம்.பி.,க்கள் ஆ.ராசா, அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.குழுவின் அறிக்கையை அவசரப்படுத்தக் கூடாது என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். பின்னர் கூட்டுக்குழு கூடி ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், வக்பு மசோதா தொடர்பாக, 14 சட்டத்திருந்தங்களுக்கு பார்லி கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது.ஏற்கனவே, கடந்த ஜனவரி 24ம் தேதி நடந்த கூட்டத்தில், விதிமுறை மீறி கோஷம் எழுப்பிய தி.மு.க., எம்.பி., ஆ.ராசா உட்பட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பார்லி., கூட்டுக்குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் செயல்பாடு அதிருப்தி அளிப்பதாக, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

மோகன்ராஜ்
ஜன 27, 2025 23:20

வேறு ஏதாவது ஒரு நாட்டில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள நாட்டில் வக்பு போர்டு என்று ஒன்று இருக்கிறதா காங்கிரஸ்காரன் இந்துக்களுக்காக செய்த மிகப்பெரிய சதி என்பதை தவிர வேறு என்ன சொல்வது


sankaranarayanan
ஜன 27, 2025 21:02

பிரிட்டிஷ் காலணி ஆதிக்கம் இந்தியாவில் குழப்பம் விளைவிக்க, சண்டை உருவாக்க 1913ல் உருவாக்கப்பட்டது. அதே பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் நாட்டில் இதே சட்டத்தை உருவாக்கவில்லை ஆனால் அந்நிய நாட்டில் அவர்களை பிளவுபடுத்தி ஆளுவதெற்கென்றே ஏற்படுத்திய பிரிவினை சட்டம் இதனால் ஆதாயமடைந்தது அப்போது ஆண்ட பிரிட்டிஷ்கார்கள் மட்டுந்தான் நாம நாட்டியிற்கு உகந்ததல்ல


என்றும் இந்தியன்
ஜன 27, 2025 17:13

வக்பு வாரிய சொத்துக்களை நேர்மையாக பயன்படுத்தினாலே கணிசமான முஸ்லிம்களை வறுமைக்கோட்டிலிருந்து வெளியே கொண்டு வந்த முடியும். செய்யுமா இந்த வக்பு வாரியம் அப்படி செய்திருந்தால் 22 கோடி முஸ்லிம்களில் 20 கோடி முஸ்லிம்கள் இன்னும் ஏன் ஏழையாகவே இருக்கின்றார்கள், தீவிரவாத குழுக்களை நாடி வேலைக்கு ஏன் செல்கின்றனர்???பணத்துக்காகத்தானே. வக்பு வாரியம் என்று ஏற்படுத்தியது யார்???முஸ்லீம் நேரு 1954ல் ஏற்படுத்தியது. வக்பு போர்டின் பணி என்ன???பணக்கார முஸ்லிம்கள் தானமாக அல்லாஹ்வின் மீது கொண்ட மதிப்பினால் பணம் நிலம் என்று கொடுத்தனர். அதை வக்பு போர்டு சரியாக நிர்வகித்ததா இல்லவே இல்லை இமாம் அமீன் .......அவர்களுக்கு பணம் நிலம் தானாமாக் வழங்கி அவர்களை பணக்காரர்கள் லிஸ்டிலிருந்து மேன் மேலும் பணக்காரர்கள் ஆனது தான் அவர்கள் செய்த ஒரே வேலை மற்றும் ஒரு இடத்திற்கு செல்வார்களாம் அது வக்பு சொத்து என்பார்களாம் அது வக்பு சொத்து ஆகிவிடுமாம். என்ன கதை இது அவ்வளவு உரிமையா அவர்களுக்கு. வேடிக்கை இப்படி இந்து ஆரியம் என்று இந்துக்கள் 91% இருந்தும் ஏன் கொண்டு வரவில்லை இந்த முஸ்லீம் நேரு


Dharmavaan
ஜன 27, 2025 18:31

அப்போது ஏன் யாரும் இந்த சட்டத்தை எதிர்க்கவில்லை


Barakat Ali
ஜன 27, 2025 14:37

இஸ்லாத்திலிருந்து வெளியேறுபவர்களும் இருக்கிறார்கள் .... அவர்களின் எண்ணிக்கை குறித்த சரியான தரவுகள் இல்லை .....


ஆரூர் ரங்
ஜன 27, 2025 16:10

அரபி, உருது பெயர் தாங்கும் பலருக்கும் மதக் கோட்பாடுகளுக்கும் சம்பந்தமில்லை. ஆனாலும் உலகம் அவ்வளவு மோசமாக இல்லை.


Ganapathy
ஜன 27, 2025 14:30

இவனுங்க முஸ்லீம்களின் சொத்தையும் திருடுறானுங்க.


Kasimani Baskaran
ஜன 27, 2025 14:19

வக்ப் வாரியத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் கோர்ட்டுக்கு சென்று வழக்குப்போட வேண்டும். 50 ஆண்டு சென்றபின் தீர்ப்பு வரும். உளுத்துப்போன கோர்ட்டை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.


Suppan
ஜன 27, 2025 14:10

இவர்களுக்கு இஸ்லாமிய வாக்குவங்கி பறிபோய்விடும் என்ற பயம். முடிந்தவரை தடுத்து நாள் கடத்துவோம் என்ற மனப்பான்மைதான்.


GMM
ஜன 27, 2025 13:58

இஸ்லாமியருக்கு மட்டும் வக்பு வாரியம் பிரிட்டிஷ் காலணி ஆதிக்கம் இந்தியாவில் குழப்பம் விளைவிக்க, சண்டை உருவாக்க 1913ல் உருவாக்கப்பட்டது. பல முகலாயர் ஆக்கிரமித்து ஆண்டபோது, வாரியம் இல்லை. உலகில் வேறு எங்கும் உள்ளதா? திருத்தம் கூடாது. வாரியம் கலைக்க வேண்டும். நிலம் அபகரிப்பு செய்ய உதவும். காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர் இல்லை என்றாலும், ஒரு மாநில விடாமல் மாநில வக்பு வாரியம் தனியாக அமைத்துள்ளது. பாக்கில் இந்து சிறுபான்மை வாரியம் உள்ளதா? தவறான சட்டத்தை வாக்கு வங்கி உருவாக்க திமுக, காங்கிரஸ் ஆதரிப்பது தவறு. தவறான சட்டத்தை நீதிமன்றம் எப்படி அனுமதிக்கிறது. ?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 13:14

வக்ஃப் ஒட்டுமொத்தமாக தடைசெய்யப்பட்ட வேண்டும் .....


RAMAKRISHNAN NATESAN
ஜன 27, 2025 13:22

இஸ்லாமியரது வாக்குகளை பல தொகுதிகளில் பெற்றுவரும் பாஜக அரசு அதைச் செய்யாது .....


குமரன்
ஜன 27, 2025 12:58

எதிர் கட்சி தலைவர்கள் மக்களின் நலனைவிட தங்கள் ஓட்டு வங்கியே முக்கியம் என்பது தான் அவலம்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 14:41

ஹிந்துக்கள் ஒட்டுமொத்தமாக அனைவரும் பாஜகவுக்கு வாக்களிப்பதில்லை .... அரசின் திறமை, செயல்பாட்டையும் பார்க்கிறோம் ..... ஆனால் காங்கிரஸ், திமுக, த்ருணாமூல் ஆகிய கட்சிகளுக்கு மத அடிப்படையில் வாக்குகள் குவிகின்றன .... இது தொடர்ந்தால் என்ன ஆகும் என்று சிந்தித்துப்பாருங்கள் ....


முக்கிய வீடியோ