உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வினாத்தாள் கசிவதாக பொய் தகவல் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை

வினாத்தாள் கசிவதாக பொய் தகவல் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை

புதுடில்லி: மத்திய கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த, 8ல் துவங்கி, வரும் ஏப்ரல் 4 வரை நாடு முழுதும் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தேர்வின் போது, வினாத்தாள்கள் லீக் ஆனதாக தகவல்கள் பரப்பப்பட்டு, தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் பீதி கிளப்பப்படுகிறது.அதுபோல, நடப்பு ஆண்டின், சி.பி.எஸ்.இ., தேர்வுகளின் வினாத்தாள்கள் கசிந்துள்ளதாக, சில தகவல்கள், சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. இது குறித்து சி.பி.எஸ்.இ., கல்வி வாரிய செயலர் ஹிமான்சு குப்தா கூறியதாவது:சமூக ஊடகங்கள் வாயிலாக தான், வினாத்தாள்கள் கசிவடைந்ததாக போலி தகவல்கள் பரப்பப்படுகின்றன. அந்த ஊடகங்களை பயன்படுத்தி, பொய்யான தகவல்களை பரப்புவோரை கண்காணிக்கிறோம். தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் தேவையற்ற பீதியை கிளப்பும், இத்தகைய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.வினாத்தாள் லீக் ஆனதாக வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம். இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் வெளியாகும் தகவல்களையே அனைத்து தரப்பினரும் நம்ப வேண்டும். தவறான தகவல்களை வேண்டுமென்றே பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !