உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய சட்டம் மூலம் மன்னர்கள் காலத்துக்கு செல்கிறோம்: ராகுல்

புதிய சட்டம் மூலம் மன்னர்கள் காலத்துக்கு செல்கிறோம்: ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருக்கும் முதல்வர், அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படும் சட்டமசோதா குறித்து லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியுள்ளார். அவர் பேசியதாவது; பாஜ முன்மொழியும் புதிய சட்டத்தின் மூலம், நாம் இடைக்காலத்திற்கு (15ம் நூற்றாண்டு காலகட்டம்) திரும்பிச் செல்கிறோம். அப்போது, மன்னர்கள் தங்களின் விருப்பப்படி யாரையும் நீக்க முடியும். ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு எந்த அர்த்தமும் இல்லை. உங்கள் முகம் அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே, அமலாக்கத்துறையிடம் ஒரு வழக்கை போடச் சொல்கிறார். பின்னர் ஒரு ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் 30 நாட்களுக்குள் அழிக்கப்படுகிறார். மேலும், நாம் ஏன் ஒரு புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. துணை ஜனாதிபதி ஏன் ராஜினாமா செய்தார் என்பது பற்றி ஒரு பெரிய கதை உள்ளது. உங்களில் சிலருக்கு இது தெரிந்திருக்கலாம். சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதேபோல, தற்போது, அவர் ஒளிந்து கொண்டிருப்பற்கு பின்பும் ஒரு கதை உள்ளது. துணை ஜனாதிபதி ஏன் ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார்? ராஜ்யசபாவில் பல சவால்களை எதிர்கொண்ட அவர் திடீரென மவுனமாகிவிட்டார். இதுதான் நாம் வாழும் காலம்.பீஹாரில் ஒரு நெருப்பு பற்றி எரிவதை நான் காண்கிறேன். அந்த தீயை நிறுத்த முடியாது என்பதால், அனைத்து மூத்த தலைவர்களையும் , இந்த நெருப்பை காண நான் அழைக்கிறேன். பீஹாரில் ஒரு 4 வயது குழந்தை 'ஓட்டு திருட்டு ஓட்டு திருட்டு' என்று கோஷமிடுகிறது. அவர்கள் மஹாராஷ்டிரா, ஹரியானாவை (தேர்தல்கள்) திருடி விட்டனர். அவர்கள் பீஹார், மேற்கு வங்கம் மற்றும் அசாம் தேர்தல்களையும் திருடுவார்கள். ஆனால், இப்போது அந்த நெருப்பு பீஹாரில் பரவியுள்ளது, இவ்வாறு கூறினார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

R.Varadarajan
ஆக 22, 2025 16:36

வாழையடி வாழையாக ஒரே குடும்பம் அறுபது வருடங்களாக் ஆட்சி செய்தது, இன்றும் அதே குடைம்பத்திலிருந்மு மூவர் நாடாளுமன்ற உளுப்பினர்களாக இருப்பது அரண பரம்பரை இன்றும் தொடர்வதற்கான சான்றுதானே


hariharan
ஆக 21, 2025 13:10

நேரு தொடங்கி பப்பு, தங்கச்சி ப்ரியங்கா வாத்ரா வரை காங்கிரஸில் மன்னராட்சி இல்லாமல் ... ஆட்சியா? இவர் சொல்வதற்கு என்ன தகுதி இருக்கிறது?


oviya vijay
ஆக 21, 2025 13:09

இந்துக்கள் இடங்கள் அனைத்தும் வக்ஃபு இடம் என ஓட்டு திருட்டு கும்பல் கூவும்.


பேசும் தமிழன்
ஆக 21, 2025 08:58

.. வரும் தேர்தலில் ஏற்படப் போகும் தோல்விக்கு இப்போதே காரணம் சொல்ல ஆரம்பித்து விட்டார்..... பப்பு இந்திய மக்கள் உன்னையும் உன் போலி காந்தி கும்பலையும் நம்ப தயாராக இல்லை.... . வேண்டுமானால் உன் அபிமான பாகிஸ்தான் அல்லது இத்தாலியில் முயற்சி செய்து பார்க்கலாம்...... அங்கே உங்களுக்கு வளமான எதிர்காலம் காத்து கொண்டு இருக்கிறது..... ஆனால் இந்தியாவில் வாய்பில்லை ராசா.... வாய்ப்பே இல்லை.


R SRINIVASAN
ஆக 21, 2025 07:50

அவர் மறுபடியும் தேர்தலில் மறுபடியும் போட்டியிடலாம். இது சாதாரண பாமரனுக்கு கூட தெரியும். இன்னும் தான் இந்தியாவின் பிரதமராக முடியும் என்று கனவு காண்கிறார். காங்கிரஸ்க்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து இந்த இத்தாலிய குரூப்பை வெளியேத்ரிவிட்டு ஒரு இந்தியரை தலைமை பதவிக்கு நியமியுங்கள். இல்லாவிட்டால் காங்கிரஸ் உருப்படாது. பிஜேபிக்கு சரியான எதிர் கட்சியாக வர வேண்டுமென்றால் இதை காங்கிரஸ் உடனடியாக செய்ய வேண்டும்.


அசோகா
ஆக 21, 2025 07:40

இதை நேரு வகையறா சொல்வது தான் நகைப்புக்குரியது


KRISHNAN R
ஆக 21, 2025 07:36

மேனேஜிங் one பேமிலி . அது மன்னர் ஆட்சி தான்


Vasan
ஆக 21, 2025 07:25

Rahul, please stop opposing for each and every action of BJP Govt. You will lose your credibility. I am asking you a simple question. Were we not in the era of Kings and Queens already? Nehru, Indira, Rajiv, Rahul, Priyanka. Only your grand grand fathers family was ruling and ruining India for nearly 4 decades.


M Ramachandran
ஆக 21, 2025 02:56

இந்தாளுக்கு அறிவு பஞ்சம். எதற்கெதாலும் அயல்நாடுகளை காட்டி பேசும் சுயநலவிரும்பி இவனுக்கு எழுதி கொடுப்பவனும் நேரு காலத்து ஆசாமி அதாவது படித்திருந்தும் முன் யோசனை அற்றவன். அது தான் இந்த பப்பு என்ற ராகுலு இன்னும் 10 வயது அறிவு தெளிவற்ற பைய்யனாகவே நடக்கிறான்.


M Ramachandran
ஆக 21, 2025 02:13

ராகுலு அப்போது ஊழல் செய்வது தான் உனக்கு விருப்ப பாடமா? மக்களாகிய எங்களுக்கு நாங்க செலுத்தும் வரி ஒவ்வொரு பைசாவும் மக்கள் நலனுக்கு செலவழிக்க வேண்டும் என்று தோன்றது. உனக்கு உன்னோடைய தோழர்களுக்கும் குடும்பதட்டுடன் 7 த்லைமுரைக்கும் மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சொத்து சேர்க்க என்னமா? உலகத்துடன் ஒத்து வாழ். இல்லையென்றால் நீ தோண்டிய குழியில் நீயெ விழுவாய். உன் ஆணவ பேச்சுக்கு உன் வருங்காலம் பலியாகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை