உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வடக்கே போட்டி அதிகமானதால் தென்னிந்தியாவுக்கு வந்தோம்...: மேவாட் கொள்ளையர்கள் வாக்குமூலம்

வடக்கே போட்டி அதிகமானதால் தென்னிந்தியாவுக்கு வந்தோம்...: மேவாட் கொள்ளையர்கள் வாக்குமூலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹரியானாவை சேர்ந்த மேவாட் கொள்ளையர்கள், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்:ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நாங்கள் பணத்துக்காக நிறைய கஷ்டப்பட்டோம். இதற்கு ஒரே வழி, வங்கி ஏ.டி.எம்.,மில் கொள்ளை அடிப்பது தான் என்று முடிவெடுத்தோம்.அதற்கு ஒரு கார் வாங்கினோம்; இரு ஆண்டுகளுக்கு முன் வடமாநிலங்களில் துவங்கினோம். எங்களை போலவே, பல குழுக்கள் இந்த தொழிலில் ஈடுபடுவது தெரிந்தது. அதனால், தொழில் போட்டி ஏற்பட்டது. உடன், எங்களின் கவனம் தென் மாநிலங்களை நோக்கி திரும்பியது.மூன்று மாதத்துக்கு முன் ஆந்திராவுக்கு சென்றோம். தோதாக இருந்தால் மட்டுமே கொள்ளை அடிப்போம்.டிரைவருடன் காரில் சென்று ஏ.டி.எம்., பகுதிகளில் இறங்கி கொள்வோம். டிரைவர் அந்தப் பகுதியை நோட்டமிட்டபடி இருப்பார். மூன்று பேர், ஏ.டி.எம்., இயந்திரம் இருக்கும் பகுதிக்குள் நுழைவோம். 'சிசிடிவி' கேமரா மீது, 'ஸ்பிரே பெயின்ட்' அடித்து, செயல்பட விடாமல் செய்து விடுவோம்.'காஸ் வெல்டிங்' கருவியை வைத்து, ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, அதிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்வோம். அந்தந்த ஊருக்கு ஏற்றபடி கார் பதிவு எண்ணை மாற்றி விடுவோம். அதனால், உள்ளூர் கார் போலவே இருக்கும். யாருக்கும் சந்தேகம் வராது.ஒரு ஊரில் கொள்ளையில் ஈடுபட்டால், அங்கே இருக்கும் மற்ற ஏ.டி.எம்., நோக்கி செல்ல மாட்டோம். 500 கி.மீ., தொலைவுக்கு சென்று, அங்கிருக்கும் ஏ.டி.எம்., மையத்தில் கொள்ளையடிப்போம்.தமிழகத்துக்கு பின், கேரளாவுக்குச் சென்றோம். திருச்சூர் மாவட்டம் கோலழி, திருச்சூர் நகரம் சொரணுார் சாலையில் உள்ள ஏ.டி.எம்., திருச்சூருக்கு அருகில் உள்ள இருஞ்சாலக்குடி மாம்பரணம் பகுதியிலும் கொள்ளையடித்தோம்.திருச்சூரை சுற்றியே மூன்று ஏ.டி.எம்., கொள்ளை நடத்தப்பட்டதால், போலீசார் உஷாராகி விட்டனர். அதை உணர்ந்து தான், கன்டெய்னர் லாரியில் காரையும், பணத்தையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டோம். எப்படியோ விஷயம் கசிந்து விட்டது. திருச்சூர் போலீசார், தமிழக போலீசாரை உஷார்படுத்தி விட்டனர்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

rasaa
செப் 30, 2024 11:40

வடக்கே போட்டி அதிகமானதால் தென்னிந்தியாவுக்கு வந்தோம்". இங்கே அவர்கள் அப்பனுக்கு அப்பன் இருப்பது தெரியாமல் வந்துவிட்டார்கள்.


karthik
அக் 01, 2024 16:07

அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்ல.. அவனே தெளிவா சொல்லிட்டேன் எப்படி மாட்டிக்கிட்டோம் என்று. தமிழ் நாட்டில் அடிச்சிட்டு தான் கேரளா போயிருக்கிறார்கள் அங்கு அடுத்தது 3 ATM ங்களில் அடுத்து அடுத்து கொள்ளை அடித்ததால் தெரிந்து விட்டது ஒன்றில் மட்டும் அடித்துவிட்டு கிளம்பி இருந்தால் இந்நேரல் டெல்லி சென்று ஜாலியா இருந்திருப்பார்கள்.


Subash BV
செப் 29, 2024 13:56

Its just to escape. THIEVES DONT HAVE LOVE FOR ANY PARTICULAR TERRITORY.


நிக்கோல்தாம்சன்
செப் 29, 2024 05:46

இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பெயர் எல்லாம் மர்ம நபர்களின் பெயர்கள் , அவர்களுக்கு உதவிய இந்தி தெரியாது போடா தமிழர்களையும் போலீசார் சுற்றி வளைப்பார்களா ?


சமீபத்திய செய்தி