உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எதையும் சமாளிப்போம்!

எதையும் சமாளிப்போம்!

உலகில் எந்தவொரு நெருக்கடி வந்தாலும், அதை திறம்பட சமாளிக்கும் வலிமை நம் நாட்டுக்கு உள்ளது. உலகிற்கே முன்னுதாரணமாக நம் நாடு விளங்குகிறது. நம் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த உள்ளூர் தயாரிப்புகளையே தொழிலதிபர்கள் விற் பனை செய்ய வேண்டும் . இதை, தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். பியுஷ் கோயல் மத்திய வர்த்தக அமைச்சர், பா.ஜ.,

உரிமைகளை நசுக்குகிறது!

அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் மேற்கொள்ளப்பட உள்ள, 'கிரேட் நிக்கோபார் உட்கட்டமைப்பு திட்டம்' பழங்குடியினரின் அடிப்படை உரிமைகளை நசுக்குகிறது. இத்திட்டம், அனைத்து சட்ட மற்றும் ஆலோசனை செயல்முறைகளையும் கேலி செய்வதோடு மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பேரழிவுக்கு காரணமாக இருக்கிறது. சோனியா காங்., - பார்லி., குழு தலைவர்

வறுமையின் மையம்!

பீஹாரை பல ஆண்டுகளாக ஆட்சி செய்யும் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி, மாநிலத்தை வேலையின்மை, வறுமையின் மையமாக மாற்றி உள்ளது. இதை நான் சொல்லவில்லை. மத்திய அரசின், 'நிடி ஆயோக்' அமைப்பு கூறுகிறது. பீஹாரின் தனிநபர் வருமானம், ஆப்ரிக்க நாடுகளான உகாண்டா, ருவாண்டாவை விடக் குறைவு. தேஜஸ்வி யாதவ் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ