உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எங்களுக்கு நீதி வேண்டும்; பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கண்ணீர்

எங்களுக்கு நீதி வேண்டும்; பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கண்ணீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், இந்த சம்பவத்தில் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கண்ணீருடன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீ ஹிந்துவா? முஸ்லிமா? என்று கேட்டு விட்டு, தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இந்தத் தாக்குதலில் இந்திய கடற்படை வீரர் வினய் நர்வால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர்க்கு 5 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் ஆனது. அதேபோல, ஐதராபாத்தில் பணியாற்றி வரும் உளவுத்துறை அதிகாரி மணிஷ் ரஞ்சன், மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒடிசாவைச் சேர்ந்த அக்கவுன்ட்ஸ் அதிகாரி பிரசாத் சாத்பதி, சூரத்தைச் சேர்ந்த சைலேஷ் காடதியா ஆகியோரும் இந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தங்களுக்கு, நீதி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பிரசாந்த் சாத்பதி குடும்பத்தினர் கூறியதாவது; பயங்கரவாத தாக்குதல் குறித்து எங்களுக்கு பிற்பகல் 3 மணிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இலவச அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு கேட்ட போது, என்னுடைய தம்பி கொல்லப்பட்டதாக தெரிவித்தனர். தம்பியின் மனைவி எங்கு இருக்கிறார் என்பது பற்றி எங்களுக்கு தெரியவில்லை. கூடுதல் டி.எஸ்.பி., என்னை தொடர்பு கொண்டடு பேசினார், என தெரிவித்தார். சைலேஷ் காடதியா குறித்து அவரது சொந்த ஊரின் துணை தாசில்தார் கூறியதாவது; சைலேஷ் காடதியா உயிரிழந்ததை அனந்த்நாக் போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் மூலம் உறுதி செய்தோம். அவரது மனைவி ஷீத்தல், மகள் நீதி மற்றும் மகன் நாகேஷ் ஆகியோர் பாதுகாப்பாக இருக்கின்றனர். அவரது உறவினர் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். சைலேஷின் ஆதார் உள்ளிட்ட விபரங்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சைலேஷ் தற்போது மும்பையில் தங்கி பணியாற்றி வந்தார், என்றார். கடற்படை வீரர் வினய் நர்வாலின் உறவினர் நரேஷ் பன்சால் கூறுகையில்,' 4 நாட்களுக்கு முன்பு தான் வினய்க்கு திருமணம் நடந்தது. மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த குடும்பத்தினருக்கு, அவர் பயங்கரவாத தாக்குதலில் இறந்து விட்டதாக வந்த தகவல் அதிர்ச்சியளித்தது. அவர் கடற்படையில் பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்தார். அவர் கொச்சியில் பணியாற்றி வந்தார்,' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Velan Iyengaar
ஏப் 23, 2025 13:30

உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் நெருக்கத்தில் ஒன்று அல்லது ரெண்டு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்து இவர்களுக்கு நீதி ஏற்பாடு செய்வார்கள் ......


Kumar Kumzi
ஏப் 23, 2025 10:32

மூர்க்க காட்டுமிராண்டிகளின் ஓட்டு பிச்சைக்காக பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பப்பூ ஓங்கோல் துண்டுசீட்டு கூமுட்ட விடியல் காட்டேரி மும்தா பேகம் போன்றவர்களை சிறையில் அடைக்க வேண்டும்


mei
ஏப் 23, 2025 09:42

உலக முஸ்லீம்கள் இதை கொண்டாடுவாங்க


நிமலன்
ஏப் 23, 2025 09:41

எந்த மாதிரியான நீதி வேண்டும். போன உயிர்களை திருப்பி கொண்டு வரமுடியுமா? 2019 இல் இராணுவ வீரர்கள் தாக்க பட்டதற்கு surgical strike நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது போல தற்போதும் செய்ய வேண்டும். இவர்களுக்கு துணை போகும் அனைத்து மூர்கர்களையும் தயவு தாட்சண்யம் காட்டாமல் சுட்டு தள்ள வேண்டும். இஸ்ரேலிடம் தொழில் நுட்பத்தை கேட்டு பெற்று இவர்களை தீர்த்து கட்ட வேண்டும். அரசியல் ஆதாயம் தேடாமல் செய்வார்களா?


R SRINIVASAN
ஏப் 23, 2025 08:58

இந்தக்காலத்தில் பக்கத்துக்கு வீட்டுக்காரனைக்கூட நம்ப முடியாது. நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நாமே தயாராக வேண்டும். இதைத்தான் முன்னாள் ஆந்திர முதலமைச்சர் N.T.RAMARAO அவர்கள் சொன்னார்கள்.


பேசும் தமிழன்
ஏப் 23, 2025 08:48

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பது... புள்ளி வைத்த இண்டி கூட்டணி ஆட்கள் தான். இண்டி கூட்டணி ஒழிந்தால் ஆதரவாளர்கள் இல்லாமல் தீவிரவாதமும் ஒழிந்து விடும்.. நாட்டு மக்கள் தான் ஓட்டு போடும் போது... விழிப்புடன் இருந்து ஓட்டு போட வேண்டும்.


Mohamed Younus
ஏப் 23, 2025 08:42

கடும் கண்டனங்கள். இது போன்ற மனித மிருகங்களை ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. மனித சமூகத்தில் இவர்களை விட்டு வைக்க கூடாது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 23, 2025 09:04

இஸ்லாத்தில் ஜிஹாத் என்கிற அம்சம் மதநல்லிணக்கத்தை மேம்படுத்தவா ??


sundarsvpr
ஏப் 23, 2025 08:06

அரசு இழப்பீடு கொடுப்பது அவசியம். அதே நேரத்தில் குற்றம் செய்தவர்களின் குடும்பத்தினர் பொது மேடையில் மன்னிப்புகேட்கவேண்டும். இவர்களை அரசு கண்காணிக்கவேண்டும். அப்போதுதான் இதன் குற்றத்தின் ஆழத்தை அணுகமுடியும். சமூகம் ஆதரவு தருகிறதா என்பது தெரியும்.


VNS
ஏப் 23, 2025 10:33

குற்றம் செய்தவர்களின் குடும்பத்தினர் பொது மேடையில் கடுமையாக தண்டிக்க பட வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை