உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாங்களும் ராஜினாமா செய்வோம்... அடுத்து 77 டாக்டர்கள் ரெடி: மம்தாவுக்கு அடுத்த அச்சுறுத்தல்!

நாங்களும் ராஜினாமா செய்வோம்... அடுத்து 77 டாக்டர்கள் ரெடி: மம்தாவுக்கு அடுத்த அச்சுறுத்தல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: பயிற்சி பெண் டாக்டர் படுகொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோல்கட்டா மருத்துவர்கள் மேலும் 77 பேர், கூட்டாக ராஜினாமா செய்ய போவதாக தெரிவித்தனர்.மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லுாரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயதான பயிற்சி பெண் டாக்டர், கடந்த, ஆக.,9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் 50 டாக்டர்கள் கூட்டாக ராஜினாமா செய்தனர். தற்போது மீண்டும் கல்யாணி ஜெ.என்.எம் மருத்துவமனை டாக்டர்கள் கூட்டாக ராஜினாமா செய்யப்போவதாக 77 பேர் மேற்கு வங்க சுகாதார பல்கலைகழகத்திற்கு மெயில் அனுப்பி உள்ளனர்.கல்யாணி ஜெ.என்.எம் மருத்துவர்கள் கூறுகையில், இளம் மருத்துவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களின் உடல்நிலை மோசமாகி வருகிறது. மாநில அரசு, அதை கண்டுகொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. உடனே தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இல்லையென்றால் நாளைக்கு ( அக்.14) கூட்டாக 77 பேர் ராஜினாமா செய்வோம், என்றனர்.மம்தா தலைமையிலான அரசு, 50 பேர் கூட்டாக ராஜினாமா செய்தது செல்லாது. தனித்தனியே கடிதம் அனுப்ப வேண்டும் என கூறியது. இந்நிலையில், அடுத்ததாக, மேலும் 77 டாக்டர்கள் கூட்டாக ராஜினாமா செய்யப்போவதாக சொல்லி இருப்பது மம்தா அரசுக்கு மேலும் தலைவலியை அதிகப்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 13, 2024 20:45

முன்பு வாங்கிய விருதுகளை திரும்ப அளித்து பலர் பாஜக அரசை எதிர்த்தனர் ....... அவர்களது முடிவை ஆதரித்து முன்னூறு கருத்துக்கள் ஒரு தினமலர் செய்திக்கு வந்திருந்தன ..... அதே போல டாக்டர்களின் முடிவை ஆதரித்து நூறு கருத்துக்களாவது வரும் என்று எதிர்பார்த்தேன் ..... தமிழகத்து அர்பன் நக்சல்கள் யாருக்கு ஆதரவு என்று உணர்த்திவிட்டார்கள் .... .


சாண்டில்யன்
அக் 13, 2024 20:23

இவர்களை ஏதோ "பேய்" பிடித்து ஆட்டுகிறதோ என்னவோ


Ramesh Sargam
அக் 13, 2024 19:33

பொதுவாக மருத்துவர்களால் பிணியாளர்கள் காப்பாற்றப்படுவார்கள். ஆனால் கொல்கட்டாவில் நிலைமை வேறு, பல மருத்துவர்களால் மமதாவின் நிம்மதி போச்சு.


GMM
அக் 13, 2024 18:45

ஒரே கோரிக்கை அடிப்படையில் கூட்டாக எதிர்ப்பு தெரிவிக்க டாக்டர்கள் ராஜினாமா செய்யலாம். அத்தியாவசிய சேவையின் கீழ் வந்தாலும் பாதுகாப்பு குறைபாடு, குற்றம் மறைக்கும் சமயம் தன் எதிர்ப்பை பல வழிகளில் தெரிவிக்கலாம். அரசியலும் இருக்கும் . டாக்டர் கொலை. குற்றவாளியை புடிக்க முடியவில்லை என்றால் அரசு நிர்வாகம் விலக வேண்டும்.


sankaranarayanan
அக் 13, 2024 18:28

டெல்லியில் கெஜ்ரிவால் ராஜினாமா செய்யாததுபோன்று மமதை பிடித்த மம்தாவும் ராஜினாமா செய்தால்தான் மேற்கு வாங்கத்திற்கு விடிமோட்சம் கிடைக்கும் மக்கள் நாலு ஐந்து மாதங்களாக மருத்துவமே இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் உச்ச நீதிமன்றமே இந்த மாநில அரசை டிஸ்மிஸ் செய்து மக்களை காப்பாற்ற வேண்டும் இல்லையே செத்துமடிவர் இதுதான் நடக்க வேண்டுமென்றிருந்தால் நடக்கட்டும்


saravan
அக் 13, 2024 18:20

இந்த பெண்மணி அரசியலில் இருந்தே தூக்கி எறியப்பட வேண்டும் .... மருத்துவர்களே முடிவு திடமாக இருக்கட்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை