உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10 ஆண்டுகளுக்குள் வறுமையை முற்றிலும் ஒழிப்போம்: ராஜ்நாத் சிங் உத்தரவாதம்

10 ஆண்டுகளுக்குள் வறுமையை முற்றிலும் ஒழிப்போம்: ராஜ்நாத் சிங் உத்தரவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் நாங்கள் வறுமையை முற்றிலும் ஒழிப்போம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். இது குறித்து ராஜ்நாத் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சூரத்தில் இருந்து எங்களது வெற்றி கணக்கு துவங்கினோம். 28 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. தோல்வியை கண்டு காங்கிரஸ் இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. அவர்கள் எமர்ஜென்சியை கொண்டு வந்தனர். அடிப்படை உரிமைகளை ரத்து செய்தனர். அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்க்கட்சியினர் எதிர்க்கிறார்கள். அவர்கள் அதை நீதிமன்றத்தில் சவால் செய்யலாம்.

2027க்குள் 3வது இடம்!

2014 வரை, பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இந்தியா இருந்தது. தற்போது 5வது இடத்தில் உள்ளது. 2027க்குள் இந்தியா முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக வருவதை யாராலும் தடுக்க முடியாது. பிரதமர் மோடி நம்பகமான தலைவர் ஆக இருக்கிறார். அவருக்கு தொலைநோக்கு பார்வை உள்ளது. இண்டியா கூட்டணிக்கு ஒரு தலைவர், கொள்கை எதும் கிடையாது. இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் நாங்கள் வறுமையை முற்றிலும் ஒழிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்புசாமி
ஏப் 29, 2024 13:16

என்னது? வழக்கமா 2047 ல ந்னு ஜல்லியடிப்பீங்களே? இப்போ 2034 க்கு வந்துட்டீங்களா?


Jagan
ஏப் 28, 2024 22:14

What were you doing in the last ten years??


Bahurudeen Ali Ahamed
ஏப் 28, 2024 17:14

அது என்ன தேர்தல் வரும்போது மட்டும் வந்து ஆட்சியை கொடுங்கள் நாட்டை முன்னேற்றுகிறோம் என்று கூறுகிறீர்கள், கடந்த பத்துவருடங்கள் என்ன செ ய்து கொண்டு இருந்தீர்களா, நீங்கள் செய்ததெல்லாம் நேருவை குறை கூறியது மட்டும்தான்,


S Nagarajan
ஏப் 28, 2024 21:30

முதல் ஐந்து ஆண்டுகள் வெளி நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி எடுத்து பெரும்பகுதி வெற்றி பெற்றது பாகிஸ்தான் போன்ற நாடுகளைத் தவிர அடுத்த ஐந்து ஆண்டுகள் இந்தியாவில் எல்லா துறைகளிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆரம்பித்துள்ளது இன்னும் விரைவாக நல்லவற்றை செய்ய வேண்டியுள்ளது


ஆரூர் ரங்
ஏப் 28, 2024 14:19

மக்களே நம்பாத வறுமையை ஒழிப்போம் கோஷங்கள் வேண்டாம் பலரது வறுமைக்கு அவர்களது முட்டாள்தனமே காரணம்


K.n. Dhasarathan
ஏப் 28, 2024 14:16

நீங்கள் வறுமையை ஒழிப்பது ஒருபுறம் இருக்கட்டும், தமிழ் நாட்டிற்கு மழை வெள்ள பாதிப்புகளை பார்க்க வந்தீர்கள், என்ன கொடுத்தீர்கள் ? உச்ச நீதிமன்றம் தலையிட்டு குட்டு வைத்தபின் கேட்ட தொகையில் % கூட கொடுக்க முடியவில்லை, ஏன் ?


A1Suresh
ஏப் 28, 2024 13:35

நிலையான அரசு, ஊழலற்ற தலைவர், தலைவரின் வழிகாட்டலில் அமைச்சரவை, திறமைமிக்க அதிகாரிகள், தன்னலமற்ற பிரதமர், சாதிக்க துடிக்கும் இளைஞர் படை, கர்ம யோகிகளான ராணுவம், பொருளாதாரத்தை இயற்றி, ஈட்டி, காத்து,வகுக்கும் வல்லுனர்கள், தர்மிஷ்டரான பிரதமரை நம்பும் மக்கள், பிரதமரை பாராட்டி வியக்கும் உலகம் என்று பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட கொண்ட பாஜக ஆட்சியில் பாரதம் செழித்து முன்னேறுகிறது


thangavel
ஏப் 28, 2024 13:32

irundha 10 varusham enna seitheenga sir


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை