உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்க மாட்டோம்: நட்டா உறுதி

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்க மாட்டோம்: நட்டா உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: 'பிரதமர் மோடியும், பா.ஜ.,வும் இருக்கும் வரை மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்க மாட்டோம்' என பா.ஜ., நட்டா பேசினார்.உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பா.ஜ., தலைவர் நட்டா இன்று (மே 27) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசார பொதுக்கூட்டத்தில் நட்டா பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சி குறித்து சாமானியர்களிடையே பிரதமர் மோடி நம்பிக்கையை ஏற்படுத்தினார். முன்னதாக, ஆட்சியில் இருந்தவர்கள் ஜாதி மற்றும் மதம் அடிப்படையில் பிளவுகளை உருவாக்கினர். இப்போது வளர்ச்சியின் அடிப்படையில் அரசியல் நடக்கிறது.

அரசியலமைப்பு சட்டம்

தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை யாரும் ஆக்கிரமிக்க நாங்கள் விடமாட்டோம். ஜூன் 4ம் தேதி எதிர்க்கட்சிகளின் நிலைமை என்ன ஆகப் போகிறது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக உள்ளது. ஆனால், மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. பிரதமர் மோடியும், பா.ஜ.,வும் இருக்கும் வரை நடக்காது. இவ்வாறு நட்டா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

nizam
மே 29, 2024 08:14

வரமாட்டிங்க ங்கிற தையிறிய த்தில பேசுறீங்க உட்டா பாக்கிஸ்தான ரஷ்யா வ இரான் அ ஏன் பிரபஞ்சத்தயே இணைத்து விடுவோம் ம் பீங்க


Kaleel MAJEED
மே 27, 2024 21:47

இந்த விஷ ஜந்துக்களால்தான் நாட்டில் ஜாதிமத வேறுபாடுகள் உருவாவுகிறது


GMM
மே 27, 2024 20:29

மன்னர் கால வரலாறு திரித்து மத மாற்றம் செய்ய, இந்து மத வறுமை குறைந்த சமூகம், வறுமை நிறைந்த சமூகத்தை ஒடுக்கியதாக எழுதப்பட்டு, சாதி இட ஒதுக்கீடு. சாதி இட ஒதுக்கீடு பெற தனி மனித கோரிக்கை தேவை. வன்னியர் போன்ற சாதி சங்கம் தேவை இல்லை. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு அந்நிய ஆங்கில, இசுலாமிய சர்வாதிகார ஆட்சி. எப்படி இந்து சமூகம் ஒன்றை ஒன்று ஒடுக்க முடியும்? இந்திய அரசியல் சாசனத்தில் அனைவரும் சமம் என்ற பின், அரசியல் கட்சிகள் சாதி, மத பாகுபாட்டை வளர்க்க முற்படுகின்றன. முஸ்லீம் சமூகம் வரலாறு ரீதியாக ஒடுக்கப்பட்ட நிலை எப்போதும் இல்லை. பின் ஏன் இட ஒதுக்கீடு ? ஏழ்மை எல்லா சமூகத்திலும் உண்டு. நீதிமன்றம், அரசியல் மன்றம் வாக்கு வங்கி ஆக்கிரமிப்பு கோரிக்கை ஏற்று, வாக்கு குறைந்த சமூகத்தை ஒடுக்கி விட்டனர்.


V RAMASWAMY
மே 27, 2024 17:54

அருமை. சமூக நீதி பேசுவோர் மத அடிப்படையில் ஒதுக்கீடு செய்தால், அது மற்றவர்களுக்கு செய்யும் அநீதியாகும். எம்மதத்தவராயிருந்தாலும், அந்த நபருக்கு தகுதியிருந்தால் அவர் பொருளாதாரத்தில் கீழ்மட்டத்திலிருந்தால், அவருக்கு முன்னுரிமை தேவை. அந்த அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். அப்பொழுது தான், திறமையுள்ளவர் அவர் எம்மதத்தைச் சார்ந்தவராயிருந்தாலும் நாட்டு முன்னேற்றத்திற்கு பங்களிப்பார்.


Vathsan
மே 27, 2024 18:21

EWS உயர்சாதி ஒதுக்கீடு கொடுத்தவர்கள் அதைப்பற்றி பேசக்கூடாது.


GMM
மே 27, 2024 17:52

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு சாசன விரோதம். இதனை நீதிமன்றம் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு இந்த அதிகாரம் இல்லை. நீதிமன்றம் வழங்குவது தவறு.


Syed ghouse basha
மே 27, 2024 17:50

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவோம்னு யார் சொன்னார்கள்? நட்டாவா காற்றோடு சண்டை போடுகிறார் ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு தருவோம்னு இந்தியாகூட்டணி சொல்கிறது அனைவருக்கும் அனைத்தும் சொல்கிறது


ஆரூர் ரங்
மே 27, 2024 18:15

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு தான் என்பதால் கோர்ட் செல்லாது என்று அறிவித்து விட்டதே.


J.V. Iyer
மே 27, 2024 17:17

பாஜக என்று இருக்கவேண்டும். மற்ற நாடுகளில் பரவவேண்டும்.


மேலும் செய்திகள்













சமீபத்திய செய்தி