முதல் உலக கோப்பை வெல்வோம்... கேப்டன் ஹர்மன்பிரீத் உறுதி
மும்பை: ''தடைகளை தகர்த்து உலக கோப்பை வெல்வோம்,'' என இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தெரிவித்தார். இந்தியா, இலங்கையில் பெண்களுக்கான 13வது உலக கோப்பை தொடர் (50 ஓவர், செப். 30-நவ.2) நடக்க உள்ளது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. பெங் களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் (செப்.30) இந்திய அணி, இலங்கையை சந்திக்கிறது. 'கவுன்ட்-டவுண்' ஆரம்பம் இத்தொடருக்கான 50 நாள் 'கவுன்ட் டவுண்' நேற்று துவங்கியது. இதற்காக மும்பையில் நடந்த கோப்பை அறிமுக விழாவில் ஐ.சி.சி., தலைவர் ஜெய் ஷா, இந்திய அணியின் முன்னாள் 'ஆல்-ரவுண்டர்' யுவராஜ் சிங், இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெண்கள் உலக கோப்பையை இந்தியா இதுவரை வென்றதில்லை. 2017ல் பைனலில் இங்கி லாந்திடம் தோற்று வாய்ப்பை கோட்டை விட்டது. இம்முறை சாதிக்கும் உறுதியுடன் உள்ளது. சமீபத்தில் இங்கி லாந்துக்கு எதிரான ஒருநாள், 'டி-20' தொடரை கைப்பற்றி அசத்தியது. நாட்டுக்காக... கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில்,''உலக கோப்பை வெல்ல வேண்டும் என இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அனைத்து தடைகளையும் தகர்த்து இம்முறை கோப்பை கைப்பற்றுவோம். உலக கோப்பையில் விளையாடுவது எப்போதும் 'ஸ்பெஷல்'. நாட்டுக்காக சிறப்பாக செயல்பட முயற்சிப்போம். யுவராஜ் சிங் எங் களுக்கு ஊக்கம் அளிக் கிறார். இவரை பார்க்கும் போது மனதில் அமைதி பிறக்கும். உலக கோப்பைக்கு முன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளோம். இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், தன்னம்பிக்கை அதிகரிக்கும். 2017ல் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் (எதிர், ஆஸி.,) 171 ரன் விளாசி, வெற்றிக்கு கைகொடுத்தேன். இது எனக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் மறக்க முடியாத அனுபவம்,'' என்றார். மந்தனா கூறுகையில், ''இந்திய வீராங்கனை களின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அணியும் கடின பயிற்சியின் அவசியத்தை உணர்ந்துள்ளோம். உலக கோப்பை போட்டிக்கு சிறப்பான முறையில் தயாராகி வருகிறோம்,''என்றார். தன்னம்பிக்கை அவசியம் யுவராஜ் கூறுகையில், ''உலக கோப்பை போட்டிகளில் நெருக்கடி அதிகம் இருக்கும். எளிதாக வெல்ல முடியாது. அனுபவமும் தன்னம்பிக்கையும் இருந்தால் சாதிக்கலாம். நாட்டுக்காக வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் விளையாட வேண்டும். கிரிக்கெட்டில் வரலாறு படைக்க நமது வீராங்கனைகளுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது,''என்றார். ஜெய் ஷா கூறுகை யில், ''இந்தியாவில் மீண்டும் உலக கோப்பை போட்டி நடப்பது சிறப்பான விஷயம். பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஐ.சி.சி., தொடர்ந்து கைகொடுக்கும்,'' என்றார்.