உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்தீர்கள்?: லாலுவுக்கு நிதீஷ் குமார் கேள்வி

ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்தீர்கள்?: லாலுவுக்கு நிதீஷ் குமார் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: '2005ல் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சிக்கு வாய்ப்பு கிடைத்தது. லாலு பிரசாத் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை' என பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார். பீஹார் மாநிலம் பாட்னாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிதீஷ் குமார் பேசியதாவது: நாங்கள் லட்சக்கணக்கானோருக்கு வேலை கொடுத்தோம். 2020ல் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். 4 லட்சத்துக்கும் அதிகமான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. 2005ல் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சிக்கு வாய்ப்பு கிடைத்தது.

வளர்ச்சி

லாலு பிரசாத் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் ஆட்சியில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர பயப்படுவார்கள். அப்போது பெண்கள் எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடந்தன. சுகாதாரம், கல்வி உட்பட அனைத்து துறையிலும் வளர்ச்சியை உருவாக்க நாங்கள் நிறைய வேலை செய்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

karupanasamy
மே 26, 2024 15:33

திருடினார் திருடினார் திருடினார்.


Syed ghouse basha
மே 26, 2024 15:03

பத்துவருஷமா இப்போது ஆளும் நீங்க என்ன செய்தீர்கள் மக்களுக்கு சொல்லி ஓட்டு கேளுங்க


moorgan basa
மே 26, 2024 16:41

2G, bofors, deccan herald ஆகியனவற்றை செய்தோம்


ஆரூர் ரங்
மே 26, 2024 14:01

பல வழக்குகளில் தண்டனை பெற்ற லாலு வுக்கு வாக்களிக்க இன்னும் குறிப்பிடத்தக்க அளவு மக்கள் இருக்கின்றனர். மாநிலம் உருப்படுமா? ஸ்டாலினின் நெருங்கிய நண்பராக வேறு ஆகிவிட்டார்.


ஆரூர் ரங்
மே 26, 2024 13:59

லாலு வீட்டுத் திருமணத்தின் போது பாட்னாவில் சொகுசு கார் ஷோரூம்களிலிருந்து 30 கார்களை வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்டு போய் விருந்தினர்களுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள் என்ற புகார் பத்திரிக்கைகளில் வந்தது.


Sankara Narayanan
மே 26, 2024 13:19

லாலு ஆட்சியில் இருந்த போது மக்களை கொள்ளை அடித்தார், வேலை தருகிறேன் என சொல்லி மக்களிடமிருந்து நிலத்தை அபகரித்தார், இன்னும் பல மோசடிகள் செய்தார்- இப்பொழுது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கையில் , உடம்பு சரியில்லை என்று சொல்லிக்கொண்டு ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறார் இந்த பலே அரசியல்வாதி


Duruvesan
மே 26, 2024 12:51

Fodder scam பண்ணி ஜெயிலுக்கு போனார்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி