உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கன்னிப்பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும்? கமல் சொன்ன பதில்!

கன்னிப்பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும்? கமல் சொன்ன பதில்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அதை இப்பொழுது சொல்ல கூடாது. அங்கே தான் பேச வேண்டும்'' என கன்னிப்பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும் என்ற கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் பதில் அளித்தார். ராஜ்யசபா எம்.பி.,யாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் நாளை (ஜூலை 25) பதவியேற்கிறார். இதற்காக டில்லி புறப்பட்டு சென்ற, கமல் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நீங்கள் செய்தி சேகரிக்க மட்டும் வரவில்லை. என்னை வாழ்த்தி அனுப்பவும் வந்து இருப்பதாக நான் நினைத்து கொள்கிறேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7t7o410w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதற்கு நன்றி. உங்களின் வாழ்த்துக்களுடன், மக்களின் வாழ்த்துக்களுடன் நான் உறுதிமொழி எடுக்கவும், எனது பெயரை பதிவு செய்யவும் செ ல்கிறேன். இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் மரியாதையையும், கடமையையும் நான் செய்ய போகிறேன். பெருமையுடன் சொல்லி கொள்கிறேன், வணக்கம். இவ்வாறு கமல் கூறினார்.

கேள்வியும், பதிலும்!

நிருபர்: கன்னிப்பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும்?கமல் பதில்: அதை இப்பொழுது சொல்ல கூடாது. அங்கே தான் பேச வேண்டும். சில விஷயங்கள் இங்கே பேசும் மாதிரி அங்கே பேச கூடாது. அங்கே பேசுகிற மாதிரி இங்கே பேச கூடாது.நிருபர்: 6 ஆண்டு கால பயணம் எதை நோக்கி இருக்கும்?கமல் பதில்: அங்கே தெரியும். எனது பயணத்தை கவனித்தீர்கள் என்றால், நல்லா புலப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 59 )

Keshavan.J
ஜூலை 31, 2025 10:58

சூப்பரா பேசுவார்


Nagarajan D
ஜூலை 26, 2025 12:18

என்ன பேசினாலும் தமிழரான உங்க சினிமா படங்களை பல வருடங்களாக பார்த்த எங்களுக்கே புரியாது... நீங்க பேசி அதை அவை குறிப்பில் பதியும் அதிகாரிக்கு தான் சோதனை... நமது துணை ஜனாதிபதியை போல அந்த அதிகாரியும் ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிடுவார் விரைவில் ..


Kumar Kumzi
ஜூலை 25, 2025 02:30

ஆண்டவர் பாசையில் கன்னினா மேட்டர் தானே ஹீஹீஹீ சூப்பரா பேசுவாப்ல


சிவகுமார்
ஜூலை 24, 2025 21:03

இலவசமாக இட்லி தருவார்கள். மறக்காமல் பெற்றுக் கொள்ளவும்


ManiK
ஜூலை 24, 2025 19:46

உங்களோட சினிமா சூட்டிங் ஞாபகத்துல லிப் விளையாட்டெல்லாம் கூடாது ஒகே?!


theruvasagan
ஜூலை 24, 2025 17:34

கன்னிப் பேச்சுக்காக தாடை கன்னி போச்சுன்னு செய்தி வராம இருந்தா சரி.


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 24, 2025 16:03

திருச்சி சிவா அவர்களிடம் பயிற்சி எடுக்கலாம்.


Keshavan.J
ஜூலை 24, 2025 15:52

கன்னிப்பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும்? ஆண்டவரின் கடந்தகால லீலைகளை பார்த்தால் கன்னிகளை நோக்கி கன்னி பேச்சு இருக்கும். ஆனால் ராஜ்ய சபாவில் கன்னிகள் கிடைக்க மாட்டார்கள்.


karupanasamy
ஜூலை 24, 2025 15:49

எது எப்படியோ வாயில் டார்ச்சுலைட்டை கவ்விக்கொண்டு பேசவும்.


vbs manian
ஜூலை 24, 2025 15:12

ராஜ்ய சபாவில் கேமரா லைட் ஆக்க்ஷன் டைரக்டர் வசனம் எல்லாம் கிடையாது. சுயமாக சிந்தித்து உருப்படியாய் பேச வேண்டும். திறமையான உதவியாளரை வைத்து கொள்ளவும். ரசிகர் பட்டாளம் இருக்காது. மற்றபடி கழக உறுப்பினர்களுக்கு மிகவும் பிடித்த கான்டீன் உள்ளது. அவர்கள் உங்களை நன்கு கவனிப்பார்கள். இப்போது நாட்டின் முன் உள்ள பிரச்சினைகள் பற்றி தெரிந்தவர்களிடம் பேசி அறிந்து கொள்ளவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை