உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து செயல்பட்டால் அனைத்து விஷயங்களும் சாத்தியமாகும்; ராஜ்நாத் சிங் பேச்சு

மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து செயல்பட்டால் அனைத்து விஷயங்களும் சாத்தியமாகும்; ராஜ்நாத் சிங் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'மத்திய அரசும் மாநில அரசுகளும் கைகோர்த்துச் செல்லும்போது, அனைத்து விஷயங்களும் சாத்தியமாகும். அப்போது சாத்தியமற்ற விஷயங்கள் கூட சாத்தியமாகும்' என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.டில்லியில் நடைபெற்ற முன்னாள் ராணுவ வீனர்கள் நலனுக்கான தேசிய மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இது போன்ற நிகழ்வு முதன்முறையாக நடத்தப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டை ஏற்பாடு செய்த அனைவரையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். இது ஒரு அற்புதமான நிகழ்ச்சி. முன்னாள் ராணுவ வீரர்களையும் வாழ்த்துகிறேன். எனது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xpl6z0yg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முன்னாள் ராணுவ வீரர்கள் நலனுக்கானது. மாநில அரசுகளும் அவர்களுக்கான திட்டங்களைக் கொண்டு வருகின்றன. மாநாட்டின் நோக்கம் இதுதான். மத்திய அரசும் மாநில அரசுகளும் கைகோர்த்துச் செல்லும்போது, அனைத்து விஷயங்களும் சாத்தியமாகும். அப்போது சாத்தியமற்ற விஷயங்கள் கூட சாத்தியமாகும்.மிகப்பெரிய சமீபத்திய உதாரணம் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் செய்து மத்திய அரசு ஒரு மைல் கல்லை அடைந்துள்ளது. இது ஒருமித்த கருத்து காரணமாக நடந்தது. இது மட்டுமல்ல, கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை நினைவில் கொள்ளுங்கள். மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் கிடைக்க ஏற்பாடு செய்தது. மாநில அரசுகள் அவற்றை எல்லா மூலைகளுக்கும் கொண்டு சென்றது. இது பரஸ்பர ஒருங்கிணைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு, இதன் விளைவாக, தடுப்பூசி திட்டம் இந்தியாவில் வெற்றிகரமாக இருந்தது.ஸ்வச் பாரத் மிஷன், ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டங்களிலும் இதேதான். மாநில அரசுகளின் உதவியுடன் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.நாம் ஒத்துழைப்புடன் செயல்பட்டால், மக்கள் தானாகவே பயனடைவார்கள் என்பதை இது நிரூபிக்கிறது. எனவே, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இந்த மாநாட்டில் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை