உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநில அந்தஸ்து அறிவிப்பு எப்போது ?: அமித்ஷா- ஒமர் அப்துல்லா சந்திப்பு

மாநில அந்தஸ்து அறிவிப்பு எப்போது ?: அமித்ஷா- ஒமர் அப்துல்லா சந்திப்பு

புதுடில்லி: காஷ்மீர் மாநில அந்தஸ்து தொடர்பாக டில்லி சென்றிருந்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியைபிடித்தது. முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்றார்.பின்னர் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு துணை நிலை கவர்னர் மனோஜ் சின்கா ஒப்புதல் வழங்கினார்.இதையடுத்து இன்று டில்லி சென்ற முதல்வர் ஒமர் அப்துல்லா, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பின் போது தேர்தலுக்கு முன் பா.ஜ., அறிவித்துள்ளபடி ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். முன்னர் இருந்த நிலைமை மீண்டும் தொடர வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kumar Kumzi
அக் 24, 2024 07:41

இந்த மூர்க்க காட்டுமிராண்டிகளுக்கு ஒருபோதும் மாநில அந்தஸ்து கொடுக்க கூடாது


Indian
அக் 24, 2024 08:42

உன் பேச்சுல என்ன ஒரு மூர்க்கத்தனம் தெரியுது ..


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 24, 2024 14:10

முள்ளை முல்லால் தான் எடுக்க வேண்டும். மூர்க்கதனத்தை மூர்க்கதனத்தால் தான் அழிக்க வேண்டும். இன்னும் தெளிவாக சொல்லனுமின்னா தமிழக ஜஜி சொன்னது போல ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பதில் கூற வேண்டும்.


J.V. Iyer
அக் 24, 2024 04:42

அவைங்க இப்படித்தான் கேட்பாய்ங்க. கொடுத்தால் அவ்வளவுதான். கேட்பது யார் என்று தெரியும்.


தாமரை மலர்கிறது
அக் 24, 2024 02:01

மாநில அந்தஸ்தும் கிடையாது. ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. ஓடிடு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை