திட்டங்கள் கேட்டது யார்? பா.ஜ., விஸ்வநாத் கேள்வி
பெங்களூரு; ''கணவரை குடிகாரனாக்கி, மனைவிக்கு வாக்குறுதி திட்டங்களை கொடுப்பது என்ன நியாயம்,'' என பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் கேள்வி எழுப்பினார்.பெங்களூரில், நேற்று அவர் அளித்த பேட்டி:மாநிலத்தில் பீர் விலையை அதிகரித்துள் ளனர். 130 ரூபாயாக இருந்த பீர் பாட்டில் விலை, இப்போது 270ரூபாயாக உயர்ந்துள்ளது. கணவரை குடிகாரனாக்கி, மனைவிக்கு வாக்குறுதி திட்டங்களை கொடுப்பது என்ன நியாயம்.வாக்குறுதி திட்டங்களுக்கு பதில், ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான சிறார்களுக்கு, இலவச கல்வி அளித்திருக்கலாம். மக்களுக்கு இலவச சிகிச்சை வசதி செய்திருக்கலாம். வாக்குறுதி திட்டங்களை தாருங்கள் என, உங்களிடம் கேட்டது யார்.முன்னாள் முதல்வர் தேவராஜ், மக்களுக்கு இலவச அரிசி வழங்கவில்லை. மாறாக அரிசி பயிரிட்டு கொள்ள, நிலம் வழங்கினார்.ஆனால் இன்றைய முதல்வர் சித்தராமையாவின் வாக்குறுதி திட்டங்கள், நல்லது அல்ல. திட்டங்களால் பயன் ஏதும் இல்லை. மனதுக்கு தோன்றியபடி, திட்டங்களை வகுக்கின்றனர்.இது மக்களுக்கு தேவையா, இல்லையா என்பதை, ஆலோசிக்க வில்லை.இவ்வாறு அவர்கூறினார்.