உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யாருப்பா.. வெயிட், நான் ரொம்ப பிஸி.. நிதி செயலரை காக்க வைத்த வங்கி மேலாளர்

யாருப்பா.. வெயிட், நான் ரொம்ப பிஸி.. நிதி செயலரை காக்க வைத்த வங்கி மேலாளர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பொதுத்துறை வங்கியின் மேலாளரை சந்திக்க ஒரு மணி நேரம் ஆகியுள்ளது. இது வழக்கம் தானே என நாம் நினைக்கலாம். ஆனால், வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தச் சென்ற அத்துறையின் செயலருக்கே இந்த நிலை தான் என்பது, மக்களின் நிலையை வெளிப்படுத்துகிறது.மத்திய நிதி சேவைகள் துறை செயலர் நாகராஜு, நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் இணைந்து, கடந்த வாரம் டில்லியில் உள்ள மூன்று முக்கிய பொதுத்துறை வங்கி கிளைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுத்துறை வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காக, தங்களது அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவர்கள் சென்றிருந்தனர்.ஒரு வங்கிக் கிளையில், மேலாளரை சந்திப்பதற்கு, நாகராஜு ஒரு மணி நேரம் காக்க வைக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் கூட, தனது அடையாளத்தை அவர் தெரிவித்த பிறகு தான் மேலாளரை சந்திக்க முடிந்திருக்கிறது. அவ்வளவு நேரம் அந்த மேலாளர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று விசாரித்தால், போன் பேசுவதில் பிஸியாக இருந்துள்ளார்.இதேபோல, மற்ற இரண்டு கிளைகளிலும், அதிகாரிகளின் நடத்தை திருப்திகரமானதாக இல்லை. வங்கி அதிகாரிகளின் நடத்தையைக் கண்டு நிதி சேவைகள் துறை செயலர் அதிர்ச்சி அடைந்தார். ஆய்வின் முடிவில், பொதுத்துறை வங்கிகளை வாடிக்கையாளர்களிடம் இன்னும் கரிசனத்துடன் நடந்துகொள்ள அவர் வலியுறுத்தியுள்ளார். வரும் நாட்களில் நாடு முழுதும் ஆய்வுகள் தொடரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.* தனியார் வங்கிகளைக் காட்டிலும் பொதுத்துறை வங்கிகள் பல விஷயங்களில் பின்தங்கியுள்ளன* டிபாசிட் வளர்ச்சி, ஆர்.பி.ஐ.,க்கு வரும் புகார்கள் ஆகியவற்றில் இந்த அலட்சியம் பிரதிபலிக்கிறது* 2024 டிசம்பர் காலாண்டில் பொதுத்துறை வங்கிகளின் சில்லரை டிபாசிட் வளர்ச்சி 8.80%, தனியார் வங்கிகளில் 13.50%* 2023 - 24 நிதியாண்டில் ரிசர்வ் வங்கியில் அளிக்கப்பட்ட புகார்களில், 38.32% பொதுத்துறை வங்கிகள் மீதாகும்* தனியார் வங்கிகளின் மீது 34.39 சதவீத புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

N Annamalai
மே 09, 2025 19:56

அப்படியே ஒரு லோன் கேட்டுப்பார்க்க வேண்டும் .நகைக்கடன் மட்டும் தான் அப்படியே அப்பவே கொடுப்பார்கள் .தொழில் கடன் கல்விக்கடன் தனியார் கடன் எல்லாம் ஆறு மாதம் ஆகி விடும் .ஒரு வாரம் கம்ப்யூட்டர் இல்லாமல் வேலை செய்ய முடியுமா ?.யாராலும் முடியாது .


நிக்கோல்தாம்சன்
மே 09, 2025 06:47

மொழி வாரியாக அவர்கள் நடந்து கொள்வதும் மிகுந்த சிரமத்தை தருகிறது


srinivasan varadharajan
மே 08, 2025 18:02

குறிப்பாக ஸ்டேட் பேங்க்ல் இது போல நடக்கிறது.சில கவுண்டர்களில் நீண்ட நேரம் போன் ல் பேசி காக்க வைப்பர்கள். வயதானவர்களை மதிப்பதே இல்லை. ஹிந்தி மட்டுமே தெரிந்த ஊழியர்கள் என்றால் நம் பாடு சிரமம்தான்.


Anvar
மே 09, 2025 08:33

என்ன செய்யா வடநாட்டுக்காரன் ஆந்திர காரன் கஷ்டப்பட்டு வருட கணக்கில் படித்து பேங்க் வேலைக்கு வருகிறான் நம்ம டுமீளர்கள் டாஸ்மாக் கீழ் கால் கடுக்க நின்னு போதை வராதா கேட் அந்த சாய வாங்கி குடிக்கவே நேரம் இல்லை


baala
மே 08, 2025 15:06

உண்மைதான்


A.Gomathinayagam
மே 08, 2025 14:10

ஒரு தவணை சேமிப்பு ஸ்டேட் வங்கியில் போட்டால் உடனே ரசீது கொடுத்து விடுவார்கள். ஆனால் தனியார் வங்கியில் அடுத்தநாள் வர சொல்வார்கள் இரண்டு போக்குவரத்து செலவு .பொதுத்துறை வங்கிகள் கோடிக்கானவர்களுக்கு சாமானியன் முதல் பெரும் பணக்காரர்வரை சேவை செய்கின்றன .தனியார் வங்கிகள் ஒரு குறிப்பிட்ட மேல் தட்டு வர்க்கத்தினருக்கு மட்டுமே சேவை அளிக்கிறது


nb
மே 08, 2025 13:59

இவனுங்கள இப்படி தான் கையும் களவுமா பிடிக்கனும்.. சோம்பேரிங்க


KRISHNAN R
மே 08, 2025 12:20

இந்த பெருசு எல்லாம் எதுக்கு.. வங்கிக்கு வந்து உயிரை எடுக்குது.... மைண்ட் வாய்ஸ் ஆப் ஊழியர்கள்


India our pride
மே 08, 2025 11:39

திமிரு பிடித்த பொது துறை வங்கி ஊழியர்கள் மக்களை மதிப்பதே இல்லை. இதனாலேயே பலர் தனியார் வங்கிகள் பக்கம் செல்கிறார்கள். மதிய உணவு நேரம், டீ பிரேக் என்று வெளியில் சென்றால் திரும்ப வருவதில்லை. சரியான பதில்கள் கிடையாது. பென்ஷனர்கள் இவர்களிடம் படும் பாடு மிக கேவலம். ஆனால் அக்கவுண்டை டேபிட் செய்வதில் கருத்தாக உள்ளனர். சீக்கிரம் மூடு விழாவை நோக்கி செல்கிறார்கள்.


sridhar
மே 08, 2025 13:46

மாலை நான்கு மணிக்கு கேஷ் வர்த்தகம் மட்டும் தான் கிளோஸ் செய்யும்படி rbi சொல்லி இருக்கு. ஆனால் இவங்க வங்கி கதவை சாத்தி விட்டு வாடிக்கையாளர்களை அனுமதிப்பதில்லை. Non cash வர்த்தகம் 5 மணி வரை செய்யலாம் , செய்வதில்லை .


அப்பாவி
மே 08, 2025 11:13

சொல்லாம கொள்ளாம திடீனு ஆய்வுக்கு போறாங்களாம். இவரோட ஆபீஸ்ல திடீர் ஆய்வு நடத்தினா தெரியும் இவிங்க லட்சணம்.


தத்வமசி
மே 08, 2025 11:01

பொதுத்துறை வங்கியில் சில அதிகாரிகள் சரியாக உள்ளனர். சிலர் சொல்லும்படி இல்லை. பல இடங்களில் அதிகாரிகளுக்கு பொறுமை, பொறுப்பு இல்லை. பொதுத்துறை வங்கிகளின் இணையங்கள் சுத்த வேஸ்ட். மொபைல் செயலிகள் கேட்கவே வேண்டாம். அதுவும் ஸ்டேட் வங்கி சுத்தம். நமது வேலைகளை விட்டு விட்டு இந்த வங்கிகளின் பின்னாலேயே ஓட வேண்டும். அப்போது தான் வங்கிக் கணக்கு சரியாக இருக்கும், செயலிகள் சரியாக வேலை செய்யும். நாம் பயன்படுத்தும் ரகசிய சொல்/கடவு எண் திடீரென்று காணாமல் போகும். அதை சரி செய்ய எந்த வசதியும் கிடையாது. வங்கிக்குச் செல்லவும் என்கிற பதில் மட்டுமே வரும். வங்கிக்கு செல்ல வேண்டும் என்றால் ஒரு நாள் விடுமுறை எடுத்து செல்ல வேண்டும். இல்லையென்றால் வேலை ஆகாது. எங்கே நமது வங்கியின் கிளையை மூடிவிடுவார்களோ என்கிற பயத்தில் இருப்பவர்கள் வேலை செய்கின்றனர். அது தெரியாமல் வாடிக்கையாளர்களிடம் எரிந்து விழுபவர்கள் பலர் இருக்கிறார்கள். மொத்தத்தில் வங்கியிலும் நமக்குத் தெரிந்தவர் இருந்தால் வேகமாக வேலை நடக்கும். இல்லையென்றால் கால் கடுக்க காத்திருக்க வேண்டும்.


முக்கிய வீடியோ