உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகள் முளைவிடும் இடத்திலேயே வேரோடு அழிப்போம்: பார்லியில் சிங்கமென கர்ஜித்த பிரதமர் மோடி உரை

பயங்கரவாதிகள் முளைவிடும் இடத்திலேயே வேரோடு அழிப்போம்: பார்லியில் சிங்கமென கர்ஜித்த பிரதமர் மோடி உரை

பார்லியில் பிரதமர் மோடி ஆற்றிய உரை முதல் பகுதி படிக்க இங்கே கிளிக் செய்யவும்பிரதமர் மோடி ஆற்றிய உரை (இரண்டாம் பகுதி) பின்வருமாறு:சிந்து நதி யாருக்கு சொந்தம்? இந்தியாவுக்கு சொந்தம். இந்தியாவில் உருவாகும் நதி. அதன் உப நதிகளும் இந்த மண்ணில் உருவானவை. அது எங்கள் நீர், அந்த நதிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் கலாச்சார பாரம்பரியமாக இருந்து வருகின்றன. அவை இந்தியாவின் உயிர் சக்தியாக இருந்துள்ளன. இந்தியாவை செழிப்பானதாகவும், வளமானதாகவும் மாற்றுவதில் அந்த நதிகளும் மிகப்பெரிய பங்களிப்பு இருந்துள்ளது. சிந்து நதி, பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் அடையாளமாக இருந்தது. அதனாலேயே, அதாவது சிந்து நதியின் பெயராலேயே இந்தியா என்று அறியப்பட்டது. ஆனால் நேருவும் காங்கிரஸும் இங்கிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து மற்றும் ஜீலம் நதிகள் குறித்த முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை யாருக்கு கொடுத்தார்கள்?உலக வங்கிக்கு கொடுத்தார்கள்.சிந்து நதி நம்முடையது. அதில் ஓடும் நீர் நமக்கு சொந்தமானது. அதில் உலக வங்கிக்கு என்ன வேலை? பாகிஸ்தானும் சிந்து நதியின் நீருக்கு உரிமை கொண்டாடு வதால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பஞ்சாயத்து செய்ய உலக வங்கிக்கு உரிமை கொடுத்தார் நேரு. அதற்காக அவர் போட்ட ஒப்பந்தம் இந்தியாவின் பெருமைக்கும் எதிராக செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகம்.https://www.youtube.com/embed/BKbzubaUkVQ ''சிந்து ஒப்பந்தம் பின்னணி என்ன என்று தெரிந்தால் நம் இளைஞர்கள் அதிர்ச்சி, வியப்பில் மூழ்கி விடுவார்கள்.

காங்கிரஸ் ஆட்சியின் துரோக வரலாறு

இன்றைய நமது நாட்டின் இளைஞர்களுக்கு இந்த துரோக வரலாறு தெரியாது. தெரிந்தால் இப்படிப்பட்டவர்கள் நமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்களா? என்று அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்ந்து போவார்கள். ஆனால் நேருஜி இந்த ஒப்பந்தத்தை செய்தார், என்ன செய்தார்?இந்தியாவில் உற்பத்தியாகி வெளியேறும் இந்த நதிகளின் 80 சதவீதம் நீரை பாகிஸ்தானுக்கு கொடுக்க நேரு சம்மதித்தார், பாகிஸ்தானுக்கு 80 சதவீதம், இவ்வளவு பெரிய இந்துஸ்தானுக்கு வெறும் 20 சதவீதம் என்று பங்கு போட்டார் நேரு. இது என்ன ஒப்பந்தம், என்ன மாதிரியான புத்திசாலித்தனம்?என்ன மாதிரியான தேசிய நலன்? இது என்ன மாதிரியான ராஜதந்திரம்? என் எதிரில் உட்கார்ந்திருக்கும் காங்கிரஸ் நண்பர்கள் எவராவது எனக்கு விளக்கி சொல்வீர்களா? இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு 20 சதவீ தம், இங்கிருந்து பிரிந்து சென்ற சின்ன நாட்டுக்கு 80 சதவீதம்!நமது நீரில் 80 சதவீதத்தை எடுத்து குடித்துக் கொண்டே அவர்கள் இந்தியாவை வெளிப்படையாக தங்கள் எதிரி என்று அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். மேலும் இந்த நீரின் உரிமை யாருக்கு இருந்தது? நாட்டின் விவசாயிகளுக்கு, நமது நாட்டின் குடிமக்களுக்கு, நமது பஞ்சாப், நமது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு. பாகிஸ்தானுக்கு உரிமை வழங்கியதன் மூலமாக இந்த நாட்டின் மிகப் பெரிய பகுதியை காங்கிரஸ் அரசு நீர் நெருக்கடியில் தள்ளி மூழ்கடித்தது. இந்த ஒரு காரணத்தால், மாநிலங்களுக்குள்ளே நீர் தொடர்பாக சண்டைகள் ஏற்பட் டன, போட்டி ஏற்பட்டது. அவர்களுக்கு உரிமை இருந்த நீரை பாகிஸ் தான் அனுபவித்து கொண்டிருந்தது. இந்த ஒப்பந்தம் மட்டும் இல்லை யென்றால், மேற்கு நதிகளில் பல பெரிய அணைகள் கட்டி இருக்கலாம். பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டில்லி மாநிலங்களின் விவசாயிகளுக்கு போதுமான நீர் கிடைத்திருக்கும். குடிநீர் பிரச்சனை வந்திருக்காது. தொழில்துறை முன்னேற்றத்துக்கு தேவையான மின்சாரத்தை இந்தியா உற்பத்தி செய்திருக்கும். அதோடு நிற்கவில்லை நேரு. ஒப்பந்தம் போட்ட பிறகு, பாகிஸ்தான் அந்த நதி மீது அணைகள் கட்டவும், கால்வாய்கள் அமைக்கவும் கோடி கோடியாக இந்திய மக்களின் பணத்தை அள்ளிக் கொடுத்தார். பாகிஸ்தான் சந்தோஷமாக அதை வாங்கி அணைகளை கால்வாய் களை கட்டி முடித்தது.

நமது அணை; நமது நீர்

இதை விட பெரிய விஷயம், நாடே ஆச்சரியப்படும் இந்த விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. மூடி வைக்கப்பட்டுள்ளன. எங்கே அணை கட்டினாலும், அதில் ஒரு பொறிமுறை இருக்கும். அணையின் துப்புரவு, தூர்வாரல், மணல் அகற்றல், புல்பூண்டுகளை நீக்குதல் முதலான பணிகளை முறையாக செய்து, அணையின் கொள்ளளவு குறையாமல் நிர்வகிக்கிற செயல் முறை.சிந்து நதியின் மீது நாம் கட்டிய அணைகளின் பொறிமுறை நிர்வா கத்தை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்வதாக சொன்னதை ஏற்றுக் கொண்டார் நேரு. அதாவது, அணைகளில் வரும் மண், குப்பையால் அணையின் கொள்ளளவு குறைந்தால்கூட, இந்தியா அதை சுத்தம் செய்ய முடி யாது. மணல் அகற்ற முடியாது. அணை நம்முடையது, நீர் நம்முடையது. ஆனால் மணல் அகற்று தலை கூட நாம் செய்ய முடியாது.இந்த விவகாரத்தை நான் ஆழமாக ஆராய்ந்தபோது, நமது ஒரு அணையின் மணல் அகற்றும் பணிக்கான கதவு வெல்டிங் செய்யப்பட் டுள்ளதை கண்டுபிடித்தேன். ஏன் அப்படி செய்தார்கள்? யாரும் தவறுதலாக கூட கதவை திறந்து மண்ணை வெளியே எடுக்கக்கூடாதாம். மணலை எடுத்தால் அதிக நீர் அணையில் தேங்கும். அது இந்தியாவுக்கு உதவும். அப்படி நடக்கா திருக்க வெல்டிங்!சிந்து நதி ஒப்பந்தம் நமது நாட்டுக்கே எதிரானது என்பதை இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். பின்னர் நேருவே இந்த தவறை ஒப்புக்கொள்ள நேர்ந்தது. ஒப்பந்தம் போட்டத்தில் சம்பந்தப்பட்ட நிரஞ்சன் தாஸ் குலாட்டி என்ற அதிகாரி எழுதிய புத்தகத்தில் அது பதிவாகி இருக்கிறது. பிப்ரவரி 1961ல் நேரு அவரிடம், ''குலாட்டி இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானுடன் நமக்கிருக்கும் மற்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வழியை திறக்கும் என்று நான் நம் பினேன். ஆனால் ஒப்பந்தத்துக்கு முன்னதாக இருந்த அதே இடத்தில் தான் இன்னும் இருக்கிறோம்' என்று நேரு சொன்னாராம்.நேருவால் உடனடி விளைவு களை மட்டுமே பார்க்க முடிந்தது. அதனால்தான் நாங்கள் அதே இடத்தில் இருக்கிறோம்' என்று சொன்னார். உண்மை என்னவென்றால், இந்த ஒப்பந்தம் காரணமாக நாடு மிகவும் பின்தங்கியது. பின்னோக்கி சென்றது, விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. விவசாயிக்கு எந்த மதிப்பும் இல்லாத நிலையை உருவாக் கும் ராஜதந்திரத்தை நேரு அறிந்திருந்தார். பாகிஸ்தான் பல தசாப்தங்களாக இந்தியாவுடன் போரையும், தீவிரவாதம் என்ற நிழல் போரையும் ஒரு சேர நடத்தி வந்துள்ளது. ஆனால் நேருவுக்கு பின்னர் வந்த காங்கிரஸ் அரசுகள் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை பற்றி சிந்திக்கக்கூட இல்லை. நேருவே உணர்ந்த தவறை அவர்கள் சரிசெய்யவில்லை.இப்போது இந்தியா அந்த பழைய தவறை சரி செய்துள்ளது. நேரு செய்த மிகப்பெ ரிய தவறு. அதா வது சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை, நாட் டின் நலன் கருதி எனது அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த ஒப்பந்தம் இந்த வடிவில் இனி தொடர முடி யாது. ரத்தமும் தண்ணீரும் ஒருசேர ஓட முடியாது என்று இந்தியா தீர்மானித்துள்ளது.(காங்கிரஸ் துணை தலைவர் கோகாய் குறுக்கிடுகிறார். காங்கிரஸ் கோஷம், ஆளும் தரப்பில் எதிர் கோஷங்கள்.) மதிப்பிற்குரிய எதிர்க்கட்சி உறுப் பினர் அவர்களே, நீங்கள் நீண்ட நேரம் பேசிவீர்கள். இப்போது என்னை பேச விடுங்கள். நீங்கள் துணை தலைவர். உட்கார்ந்தபடியே நீங்கள் குறுக்கீடு செய்வது உங்க ளுக்கு பொருத்தமல்ல. உடனே எழுந்திருக்கிறீர்கள். வேண்டாம். தயவுசெய்து உட்காருங்கள். உங்கள் கண்ணியத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.இங்கே அமர்ந்திருக்கும் நண்பர் கள் பயங்கரவாதம் பற்றி நீண்ட நே ரம் பேசினார்கள். அவர்கள் அதிகா ரத்தில் இருந்தபோது, நாட்டின் நிலை எப்படி இருந்தது ?இன்றும் அந்த நிலையை நாடு மறக்க வில்லை. 2014 க்கு முன்பு இருந்த பாதுகாப்பற்ற சூழலை இன்று நினைத்தாலும் மக்கள் நடுங்கு கிறார்கள்.

பலவீனமான காங்., அரசுகள்

நமக்கெல்லாம் நினைவிருக்கிறது. புதிய தலைமுறைக்கு தெ ரியாது. நமக்கு தெரியும். எல்லா இடங்களிலும் அறிவிப்புகள் வந் தன. ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம், சந்தை, கோயில், எங்கே கூட்டம் திரண்டாலும், அங்கெல்லாம் அறி விப்பு கேட்கும்:'சந்தேகப்படும்படியான எந்த பொருளையும் தொடாதீர்கள். விலகியே இருங்கள். உடனடியாக போலீசுக்கு தகவல் சொல்லுங்கள். அது வெடிகுண்டாக இருக்கலாம். ஜாக்கிரதையாக இருங்கள்!' என்று ஓயாமல் எச்சரிக்கை ஒலித்துக் கொண்டே இருக்கும். 2014 வரை நாம் இதையே கேட்டு கொண்டிருந்தோம்.இந்த நிலையைத் தான் அவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தார்கள். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இந்த நிலைமைதான் இருந்தது. நடக்கும் ஒவ்வொரு அடியிலும் புதைத்திருக்கும் குண்டு வெடித்து விடுமோ என்ற நடுக்கத்துடனே மக் கள் போய்வந்து கொண்டிருந்தார் கள். காப்பாற்ற யாருமில்லை. குடிமக்கள் தங்களையே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம். ஏனென்றால் காங்கிரஸ் அரசு அவர்களை கைவிட்டிருந்தது. பல வீனமான காங்கிரஸ் அரசுகள் காரணமாக நாடு எத்தனை உயிர்களை இழந்தது.

உலக நாடுகள் ஆதரவு

இந்த அரசின் வெளியுறவு கொள்கை குறித்து இங்கு எதிர்க்கட்சியினர் நிறைய பேசினர். ஆப்பரேஷன் சிந்தூருக்கு உலகளாவிய ஆதரவுஇல்லையே என்றும் கேட்டனர். நான் சில விஷயங்களை தெளிவாக்க விரும்புகிறேன். உலகில் எந்த நாடும் இந்தியாவை தடுக்கவில்லை . ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக 3 நாடுகள் மட்டுமே அறிக்கை வெளியிட்டன.வெ றும் மூன்று நாடுகள். குவாட் ஆகட்டும், பிரிக்ஸ் ஆகட்டும், பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி - எந்த நாட்டின் பெ யரையும் சொல்லுங்கள். அவற்றில் எதுவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இல்லை. உலகெங்கிலும் இருந்து இந்தியாவுக்கு ஆதரவு கிடைத்தது. உலகளாவிய ஆதரவு கிடை த்தது, உலக நாடுகளின் ஆதரவுக்கு நாம் நன்றியும் சொன்னோம். நமது அன்புக்குரியவர்கள் எத்தனை பேரை பறிகொடுத்தோம் ? மன உறுதி இருந்திருந்தால் நிச்சயமாக அவர்களாலும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தி இருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. நமது அரசாங்கம் 11 ஆண்டுகளில் இதை செய்து காட்டியுள்ளது. 2004 முதல் 2014 வரை நடந்த பயங்கரவாத சம்பவங்களோடு ஒப் பிட்டால், 2014க்கு பிறகு மிகப்பெ ரிய குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் நாடு அறிய விரும்புகிறது. மோடி அரசால் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடிகிறபோது, காங் கிரஸ் அரசுகள் மட்டும் பயங்கரவாதம் செழிக்க விடுவதற்கு என்ன கட் டாயம் இருந்தது?காங்கிரஸின் ஆட்சியில் பயங்கர வாதம் வளர்ந்ததற்கு முக்கிய காரணம் அவர்களின் துஷ்பிரயோக அர சியல், அவர்களின் ஒட்டு வங்கி அரசியல். டில்லியில் பாட்லாஹவுஸ் என்கவுன்டர் நடந்தபோது, காங்கிரஸின் ஒரு பெரிய தலைவர் கண்ணீர் சிந்தினார். ஒட்டு வங்கிக்காக அந்த காட்சியை இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்றார்கள்.நாட்டின் ஜனநாயக பீடமான நாடாளுமன்றமே 2001ல் தாக்கப் பட்டபோது, காங்கிரஸின் பெரிய தலைவர் ஒருவர், அப்சல் குருவுக்கு 'சந்தேகத்தின் பலனை அளிக்க வேண்டும்' என்று கூறினார்.மும்பையில் 26/11 தாக்குதல் நடந்தபோது, ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதி உயிருடன் பிடிபட்டார். பாகிஸ்தான் ஊடகங்களும் உலகமும் அவர் பாகிஸ்தானி என்பதை ஒப்புக் கொண்ட பிறகும், இங்குள்ள காங்கிரஸ் கட்சி என்ன செய்தது? ஒட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ள கொண்டிருந்தது. மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொலை தாண்டவத்தை, காவி பயங்கரவாதம் என்று நிரூபிக்க காங்கிரஸ் மும்முரமாக இருந்தது. இந்து பயங்கரவாதம் என்ற இல்லாத சித்தாந்தத்தை உலகில் பரப்ப அது முயற்சி செய்தது. 'லஷ்கர் இ தொய்பாவை விட பெரிய ஆபத்து, இந்தியாவின் இந்து குழுக்கள்' என்று கூட அமெரிக்காவின் முக்கிய பிரமுகரிடம் சொன்னார் ஒரு காங்கிரஸ் தலை வர். ஏன் அப்படி சொன்னார்கள்? ஓட்டு வங்கியை திருப்திபடுத்துவதற்காக சொன்னார்கள். அவர்கள் அதில் சளைப்பதே கிடையாது. பாபாசாகிப் அம்பேத் கர் உருவாக்கிய இந்திய அரசியல் சாசனத்தை ஜம்மு காஷ்மீரில் கால்பதிக்கவே விடாமல் காங்கிரஸ் தடுத்ததற்கு காரணம் இந்த ஓட்டு வங்கி தான். இந்திய அரசியல் சாசனத்தை அவர்கள் காஷ்மீருக்குள் விடவில்லை. வெளியே நிற்க வைத் தார்கள். ஓட்டு வங்கிக்காசு நாட்டின் பயங்கரவாத ஒழிப்பு சட்டங்களையே காங்கிரஸ் பலவீனப்படுத்திய கதை களை உள்துறை அமைச்சர் விரிவாக எடுத்து சொல்லிவிட்டதால், மீண்டும் அதுபற்றி பேசி நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. இந்த நாடாளுமன்ற தொடரின் ஆரம்பத்தில் நான் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். கட்சி நலனில் நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் தேச நலனில் நம் மனங்கள் நிச்சயம் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினேன். பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதல் நமக்கு ஆழமான காயங்களை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. அதற்கு பதிலடியாக நாம், ''ஆப்பரேஷன் சிந்தூர்'' நடவடிக்கையை எடுத்தோம். நமது ஒற்றுமையாலும், ராணுவத்தின் வீரத்தாலும் அது வெற்றிகரமாக முடிந்து நாடெங்கிலும் ஒரு சிந்தூர் உணர்வை உருவாக்கி இருக்கிறது.இந்தியாவின் எதிர்காலம் பாதுகாப்பாக செழிப்பாக இருந்தே தீரும் என்பது உறுதி நமது நாடாளுமன்ற பிரதிநிதிகள் உலகம் முழுவதும் சென்று ஒவ் வொரு நாட்டின் மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்து இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்து சொன்னபோது, சிந்தூர் உணர்வு அங்கெல்லாமும் பிரதிபலித்ததை பார்த்தோம். அந்த பணியில் ஈடுபட்ட நமது சபைகளின் உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.ஆனால் எனக்கு ஒரு வருத்தம் உண்டு. காங்கிரஸ் கட்சியின் பெரிய தலைவர்களாக தங்களை நினைத்துக் கொள்ளும் சிலருக்கு, 'இந்தியாவின் நிலைப்பாடு ஏன் உலகிற்கு எடுத்துரைக்கப்பட்டது ?' எரிச்சல் ஏற்படுவதை பார்க்க ஆச்சரியமாகவும் இருக்கிறது.சிந்தூர் குறித்து இங்கே பேசுவதற்கு கூட சிலருக்கு தடை விதிக்கப்பட்டிருக்கலாம். இந்த மட்டமான மனநிலையில் இருந்து அவர்கள் வெளியே வர வேண்டும்.

உணர்வுகள் கவிதையாக...

இந்த நேரத்தில் என் மனதில் தோன்றும் உணர்வுகளைசில வரிகளில் வெளிப்படுத்த விரும்புகிறேன்:'பேசுங்கள் எவ்வளவு முடியுமோ அதுவரை.விடாமல் விவாதம் செய்யுங்கள்,அதை கேட்டு எதிரி பயத்தில் நடுங்கும் வரை!ஒன்று மட்டும் என்றும் நினைவிருக்கட்டும்.சிந்தூரின் மரியாதையும், ராணு வத்தின் மரியாதையும்எப்போதும் கவனத்தில் இருக்கட்டும்.கேள்விகள் எத்தனை காரணமாக இருந்தாலும் சரி, கடுமையாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், பாரதத்தாயின் மீது தாக் குதல் நடந்தால்,அதற்கான பதிலடி சாதாரணமாக இருக்காது.எதிரி எங்கேயும் உட்கார்ந்தி ருக்கலாம். நாம் இந்தியாவுக்காகவே வாழ வேண்டும்.காங்கிரஸ் நண்பர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், ஒரு குடும்பம் தரும் அழுத்தத்தால் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் கொடுப்பதை நிறுத்துங்கள். உலக றிய இது நமது வெற்றித் தருணம். உலகம் நம்மை கேலி செய்வதற்கான தருணமாக காங்கி ரஸ் மாற்றக்கூடாது. காங்கிரஸ் தனது தவறை கொள்ளட்டும். இன்று நான் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இனிமேல் இந்தியா பயங்கரவாதிகளை அவர் கள் முளைவிடும் இடத்திலேயே வேரோடு அழிக்கும். இந்தியாவின் எதிர்காலத்துடன் விளையாட பாகிஸ்தானை அனுமதிக்க மாட் டோம்.ஆகவேதான் சொல்கிறேன், ஆப்பரேஷன் சிந்தூர்' இதோடு முடியவில்லை. அது தொடர்கிறது. இந்தியாவுக்கு எதிரான பயங்கர வாத பாதையை பாகிஸ்தான் முழு வதுமாக மூடி அடைக்காதவரை யில், ஆப்பரேஷன் சிந்தூர்' தொடர்ந்து இருக்கும். கொண்டே இந்தியாவின் எதிர்காலம் பாது காப்பாக இருக்கும், வளமாக இருக் கும். இதுதான் எனது சபதம். இந்த பெருமையான உணர்வுடன், அர்த்தமுள்ள விவாதத்துக்காக அனைத்து உறுப்பினர்களுக்கும் மீண்டும் நன்றி கூறுகிறேன்.மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே, நான் இந்தியாவின் நிலைப்பாட்டை முன்வைத்தேன். இந்திய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினேன். சபைக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Sankar Ramu
ஆக 02, 2025 13:40

நாட்டை சுரண்ட வந்த கடசிகள் திமுக மற்றும் கங்கிரஸ்.


venugopal s
ஆக 02, 2025 12:15

மியாவ் மியாவ் என்று கர்ஜித்தாரா?


Thravisham
ஆக 02, 2025 18:39

இல்ல ஒன்ன மாதிரி 200 400 / ஓசி குவாட்டர் ஊசி போன பிரியாணி கொடுன்னு ரெண்டு கையையும் ஏந்தி நிற்கணுமா?


Anantharaman Srinivasan
ஆக 02, 2025 00:41

என் வீட்டு கண்ணாடி என் முகத்தைக்காட்டவில்லை.


R Dhasarathan
ஆக 02, 2025 09:36

அர்த்தமுள்ள வார்த்தைகள்


R Dhasarathan
ஆக 01, 2025 22:03

உயிரோடு இருக்கும் போது பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை, இறந்த பிறகு எல்லாம் முடிந்த பிறகு என்ன செய்து என்ன பயன். அந்த இளம் பெண்ணை நினைத்தால் உயிரே போய்விடும் போன்ற உணர்வு வருகிறது....


எஸ் எஸ்
ஆக 01, 2025 19:18

காவி பயங்கரவாதம் என்ற ஒரு புதிய சொல்லை கண்டுபிடித்த காங்கிரஸ் அறிவு ஜீவியின் பெயரை சொல்லி இருக்க வேண்டும்


cpv s
ஆக 01, 2025 14:35

congress must do politics in pakistan instead of india, the congress alway eat food india and supporting to pakistan, so congress no more need for india in future


palaniappan. s
ஆக 01, 2025 13:24

பேச்சை போல்தான் ஆட்சியும் இருக்கிறது இரண்டுமே அருமை


இறைவி
ஆக 01, 2025 13:00

அணைகளில் தூர் வாருதலா? அணைகளின் கொள்ளளவு குறையாமல் மண் , குப்பைகளை நீக்குதலா? அணைகளை சுத்தம் செய்வதா? தமிழ் நாட்டின் அணைகளில் நாங்கள் பார்ப்பதை விடுங்கள். கேள்விப் பட்டது கூட கிடையாது. இங்குள்ள கழகங்கள் கமிஷன், ஆதாயம் இருந்தால் திட்டங்கள் கொண்டு வரும். இல்லையென்றால் அவை தேவை இல்லாத திட்டங்கள். இன்று மேட்டூர் 120 அடி உயரம், 93 TMC கொள்ளளவு என்கிறார்கள். கடந்த நூறு வருடத்தில் அது 75 முதல் 80 TMCஆக குறைந்திருக்கும். ஆனால் மோடி போல ஒரு தீவிர தேசியவாதியை இதுவரை கண்டதில்லை. அவரிடம் இருப்பது நாட்டுப் பற்று அல்ல. நாட்டின் மீதான அளவற்ற வெறி. இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்.


ராமகிருஷ்ணன்
ஆக 01, 2025 12:32

காங்கிரஸ் இந்தியாவின் புற்றுநோய். பாக்கிஸ்தானில் அழிக்கப்பட்ட தீவிரவாதிகளை விட மிக கொடிய தீவிரவாதிகளின் கூட்டம். இந்து முகமூடி அணிந்த முஸ்லிம் தீவிரவாத கிருமிகள். மிக சிரமப்பட்டு மோடிஜீ அழித்து வருகிறார். இந்தியர்களின் புண்ணிய பலன் தான் மோடிஜீ.


குமரன்
ஆக 01, 2025 11:58

இப்படி ஒரு பிள்ளைக்காக காத்திருந்தாளோ பாரததாய் வெல்க அந்தத்தாயின் சபதம் இந்திய மக்களின் உரிமைகளை மறுக்கப்பட்டதோடு இல்லாமல் ரகசியமாக மறைக்கப்பட்டது கொடுமையான வேதனையிலும் வேதனை .


சமீபத்திய செய்தி