வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காங்கிரஸ்காரர்களை தவிர்த்து வேறு யாராக இருக்கமுடியும்?
நவி மும்பை:மஹாராஷ்டிராவின் நவி மும்பையில் கட்டப்பட்டுள்ள புதிய சர்வதேச விமான நிலையத்தை நேற்று திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, ''மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதை தடுத்து நிறுத்தியது யார்?'' என, காங்கிரசுக்கு கேள்வி எழுப்பினார். மஹாரா ஷ்டிரா தலைநகர் மும்பையின் புறநகர் பகுதியான நவி மும்பையில், 12.40 கோடி சதுர அடி பரப்பளவில், 19,650 கோடி ரூபாய் செலவில், புதிதாக சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு உள்ளது. வளர்ந்த பாரதம் நவி மும்பைக்கு நேற்று வந்த பிரதமர் மோடி, அங்கு நடந்த நிகழ்ச்சியில், நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் முதல் கட்டத்தை திறந்து வைத்தார். இதில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பசுமைவெளி விமான நிலையமான இது, மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்து சுமையை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: தற்போது, மும்பையில் ஒரு புதிய விமான நிலையம் உள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய இணைப்பு மையமாக இருக்கு ம். 'வளர்ந்த பாரதம்' என்ற இலக்கை நவி மும்பை சர்வதேச விமான நிலையம் பிரதிபலிக்கிறது. இது மஹாராஷ்டிராவில் உள்ள விவசாயிகளை, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய சந்தைகளுடன் இணைத்து, அப்பகுதிக்கு முதலீடுகளையும், புதிய தொ ழில்களையும் ஈர்க்கும். 'உதான்' திட்டத்தால், கடந்த 10 ஆண்டுகளில், லட்சக்கணக்கான மக்கள் முதன்முறையாக விமானத்தில் பயணித்து தங்கள் கனவுகளை நனவாக்கி உள்ளனர். புதிய விமான நிலையங்களும், மலிவு விலை விமான பயணங்களுக்கான உதான் திட்டமும், நாட்டின் விமான பயணத்தை எளிதாக்கியுள்ளன. மும்பை நா ட்டின் பொருளாதார தலைநகர் மட்டுமல்ல, துடிப்பான நகரங்களில் ஒன்று. அதனால் தான், 2008ல் பாக்., பயங்கரவாதிகள் மும்பையை தாக்கினர். ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த காங்., பலவீனத்தையே வெளிப்படுத்தியது. பயங்கரவாத தாக்குதலுக் கு பின், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க நம் படைகள் தயாராக இருந்ததாகவும், ஆனால், வெளிநாட்டின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்டதாகவும், காங்., மூத்த தலைவரும், அப்போதைய உள்துறை அமைச்சருமான சிதம்பரம், சமீபத்தில் பேட்டியில் கூறியிருந்தார். 'ஆப்பரேஷன் சிந்துார்' எந்த நாட்டின் அழுத்தத்தால், பதிலடி கைவிடப்பட்டது என்பதை காங்., வெளிப்படையாக கூற வேண்டும். அந்த முடிவால் நாம் நிறைய இழப்புகளை சந்திக்க நேரிட்டது. காங்கிரசின் பலவீனம் பயங்கரவாதிகளுக்கு பலமாக மாறியது. எங்களை பொறுத்தவரை தேசம் மற்றும் மக்களின் பாதுகாப்பை தவிர வேறு எதுவும் முக்கியம் இல்லை. இன்றைய இந்தியா தன் எதிரிகளை அவர்களின் சொந்த இடத்துக் கே சென்று தாக்கும் திறன் கொண்டது. 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்கு பின், நம் நாட்டின் வலிமையை கண்டு உலகம் வியப்படைந்தது. இவ்வாறு அவர் பேசினார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனைச் சேர்ந்த, 'ஜாஹா ஹடிட் ஆர்க்கிடெக்ட்ஸ்' என்ற நிறுவனத்தால், நவி மும்பை சர்வதேச விமான நிலையம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 'தாமரை' மலரை போன்று வடிவமைக்கப்பட்டு உள்ளதுடன், மஹாராஷ்டிராவின் வரலாறு மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் கலைப் படைப்புகளையும் கொண்டுள்ளது. முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம், 47 மெகாவாட் சூரிய மின்சக்தியை உருவாக்கும்; பசுமை பயணத்தை ஊக்குவிக்க மின்சார பஸ்களும் உள்ளன. 'வாட்டர் டாக்சி' சேவை மூலம் இணைக்கப்படும் நாட்டின் முதல் விமான நிலையம் இது. உ ள்நாட்டு விமான சேவை விரைவில் துவங்கவுள்ளது. சர்வதேச சேவை டிசம்பருக்குள் துவங்கப்படும்.
காங்கிரஸ்காரர்களை தவிர்த்து வேறு யாராக இருக்கமுடியும்?