உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாபில் தரன்தரன் தொகுதி யாருக்கு? வாக்காளர்கள் நாளை தீர்ப்பு

பஞ்சாபில் தரன்தரன் தொகுதி யாருக்கு? வாக்காளர்கள் நாளை தீர்ப்பு

தரன் தரன்: பஞ்சாப் மாநிலம் தரன்தரன் சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் பிரசாரம் நேற்று நிறைவு பெற்றது. ஓட்டுப் பதிவு நாளை நடக்கிறது. ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் மற்றும் பா.ஜ., ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. பஞ்சாபின் தரன்தரன் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் கஷ்மீர் சிங் சோஹல், ஜூன் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடக்கிறது. ஆம் ஆத்மி சார்பில், ஹர்மீத் சிங் சந்து, காங்கிரசில் கரம்வீர் சிங் புர்ஜ், சிரோமணி அகாலி தளம் சார்பில் சுக்விந்தர் கவுர் ரந்தவா மற்றும் பா.ஜ., சார்பில் ஹர்ஜிந்த் சிங் சந்து ஆகியோர் களம் இறங்கிஉள்ளனர். தீவிர பிரசாரம் கடந்த, 2022ம் ஆண்டு மார்ச் மாதம் பஞ்சாபில் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி, இதுவரை நடந்த ஆறு இடைத்தேர்தல்களில், 5 தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. தரன் தரன் தொகுதியை தக்க வைத்துக்கொள்ள ஆம் ஆத்மி தீவிர பிரசாரம் செய்தது. கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், மாநில பொறுப்பாளர் மணீஷ் சிங் சிசோடியா, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உட்பட பல தலைவர்கள் ஹர்மீத் சிங் சந்துவுக்கு ஓட்டு கேட்டு வீடு வீடாக சென்று பிரசாரம் செய்தனர். ஆம் ஆத்மி சார்பில் களம் இறங்கியுள்ள ஹர்மீத் சிங் சந்து, தரன் தரன் தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக தேர்ந் தெடுக்கப்பட்டவர். கடந்த 2002, 2007 மற்றும் 2012 ஆகிய ஆண்டு நடந்த தேர்தலில் சிரோமணி அகாலி தளம் சார்பில் போட்டியிட்டு வென்றார். ஆனால், 2017 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலி ஆம் ஆத்மி வேட்பாளரான கஷ்மீர் சிங் சோஹல் வெற்றி பெற்றார். அவர், ஜூன் மாதம் திடீர் மரணம் அடைந்தார். இந்நிலையில், ஜூலை மாதம் ஹர்மீத் சிங் சந்து ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். தன் தொகுதியை தக்க வைத்துக் கொள்ள திட்ட மிட்ட ஆம் ஆத்மியும், ஹர்மீது சிங் சந்துவையே களம் இறக்கியுள்ளது. 'தர்மி பவுஜி' விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் கரன்வீர் சிங் புர்ஜ், காங்கிரஸ் கட்சி சார்பில் முதன் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். பஞ்சாப் மாநில காங்., தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா மற்றும் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி உட்ட கட்சியின் மூ த்த தலைவர்கள் வீதி வீதியாக பிரசாரம் செய்தனர். ஓய் வுபெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரும், 'தர்மி பவுஜி'யின் மனைவியுமான சுக்விந்தர் கவுர் ரந்தாவா, சிரோமணி அகாலி தளம் சார்பில் போட்டியிடுகிறார். கடந்த, 1984ம் ஆண்டு பொற்கோவிலில் நடந்த 'ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார்' நடவடிக்கையைத் தொடர்ந்து, ராணுவத்தை விட்டு வெளியேறிய சீக்கிய வீரர்கள் 'தர்மி பவுஜி' என அழைக்கப்படுகின்றனர். பா.ஜ., நம்பிக்கை சிரோமணி அகாலி தளம் தலை வர் சுக்பீர் சிங் பாதல், அவரது மனைவியும் எம்.பி.,யுமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், தரன்தரன் தொகுதியை ஆம் ஆத்மியிடம் இருந்து மீண்டும் கைப்பற்ற பம்பரமாக சுழன்று பிரசாரம் செய்துள்ளனர். மத்தியில் ஆளும் பா.ஜ., பஞ்சாபில் தன் செல்வாக்கை நிரூபிக்க தரன் தரன் தொகுதியின் வெற்றியை குறிக்கோளாக கொண்டு, மாவட்டத் தலைவர் ஹர்ஜித் சிங் சந்துவையே களம் இறக்கி விட்டுள்ளது. இவர், 2022ல் பா.ஜ.,வில் சேருவதற்கு முன், சிரோமணி அகாலி தளத்தில் முக்கிய நிர்வாகி யாக இருந்தார். எனவே, தொகுதி முழுதும் நன்கு பரிச்சயமானவர் என்பதால், வெற்றி உறுதி என பா.ஜ., நம்புகிறது. ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, டில்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு உட்பட முக்கியப் பிர முகர்கள் தரன் தரனில் அனல் பிரசாரம் செய்துள்ளனர். இதற்கிடையில், சுயேச்சையாக மந்தீப் சிங் போட்டியிடுகிறார். இவர், 2022ம் ஆண்டு சிவசேனா - தக்சாலி தலைவர் சுதிர் சூரி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் சிங் என்ற சன்னியின் சகோதரர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கதூர் சாஹிப் எம்.பி., அமிர்தபால் சிங் தலைமையிலான அகாலி தளம், கியானி ஹர்பிரீத் சிங் தலைமையிலான சிரோமணி அகாலி தளம், சிம்ரன்ஜித் சிங் மான் தலைமையிலான சிரோமணி அகாலி தளம் மற்றும் சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு - பிந்தரன்வாலே உள்ளிட்ட சில சீக்கிய அமைப்புகள் மன்தீப் சிங்குக்கு ஆதரவு அளித்துள்ளன. தரன் தரன் தொகுதியில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 15 பேர் போட்டியிடுகின்றனர். அனல் பறந்த பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்த நிலையில், நாளை காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 222 ஓட்டுச்சாவடி வரு ம், 14ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு சுற்று வாரியாக உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தரன் த ரன் தொகுதியில் ஒரு லட்சத்து 933 ஆண்கள், 91,897 பெண்கள் மற்றும் எட்டு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் ஒரு லட்சத்து 92,838 வாக் காளர்கள் உள்ளனர். தொகுதி முழுதும், 114 இடங்களில் 222 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன.

பலத்த பாதுகாப்பு

பஞ்சாப் தலைமை தேர்தல் அதிகாரி சிபின், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தரன் தரன் தொகுதி முழுதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய ஆயுதப்படை வீரர்கள், 222 ஓட்டுச் சாவடிகளிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து சாவடிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் வெப்காஸ்டிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த 46 ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பர். வாக்காளர்கள் எந்த அச்சமும் இன்றி, தங்களுடைய ஓட்டுச்சாவடிக்கு வந்து, ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ