உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செல்வந்தர்கள் கடனை ரத்து செய்வது ஏன்? கிருஷ்ண பைரேகவுடா கேள்வி!

செல்வந்தர்கள் கடனை ரத்து செய்வது ஏன்? கிருஷ்ண பைரேகவுடா கேள்வி!

பெங்களூரு: ''நாட்டின் ஆயிரம் செல்வந்தர்களின், 1.75 லட்சம் கோடி ரூபாய் கடனை, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இது இலவச பாக்யா இல்லையா,'' என வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா கேள்வி எழுப்பினார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:வாக்குறுதி திட்டங்கள் குறித்து, பா.ஜ.,வினர் விமர்சிக்கின்றனர். மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து, இதுவரை அம்பானி, அதானி உட்பட சில செல்வந்தர்களின் 20 லட்சம் கோடி ரூபாய் கடனை ரத்து செய்தது. இது என்ன பாக்யா என்பதை, பா.ஜ., தலைவர்கள் கூற வேண்டும். செல்வந்தர்களின் கடனை ரத்து செய்வதுடன், வரி விலக்கு சலுகையும், மத்திய அரசு வழங்குகிறது. இந்த சுமையை புதிய வரிகள் ரூபத்தில், ஏழைகளின் தலையில் சுமத்துகிறது.இதனால் ஏழைகள் பாதிப்படைகின்றனர். இவர்களின் உதவிக்காக எங்கள் அரசு, வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தியது. ஏழைகள் மீதான வெறுப்பால், பா.ஜ., தலைவர்கள் வாக்குறுதி திட்டங்களை விமர்சிக்கின்றனர்.ஆண்டு தோறும், நாட்டின் ஆயிரம் செல்வந்தர்களின், 1.75 லட்சம் கோடி ரூபாய் கடனை, பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்கிறது. இது இலவச பாக்யா இல்லையா, வாக்குறுதி திட்டங்களை திருடி, பா.ஜ., அரசியலுக்கு பயன்படுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

K.Ramakrishnan
பிப் 12, 2024 19:42

இவ்வளவு ரத்து செய்தால் கட்சிக்கோ...அல்லது தனக்கோ.. இத்தனை சதவீதம் நன்கொடை தரணும் என்று பேரம்பேசி இருப்பார்களோ... என்னவோ...கடன் ரத்தானவர்கள் எல்லாம் பாவப்பட்ட ஜென்ஜங்கள் பாருங்க... அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறவங்க.. இந்த பச்சாதாபம் விவசாயிகள் மீது வரவில்லை... வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டி விட்டு இஎம்ஐ கட்ட முடியாமல் தவிப்பவர்களுக்காக வரவில்லை..


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ