உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாமின் கிடைத்த மறுநாளே அமைச்சரானது ஏன்? செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

ஜாமின் கிடைத்த மறுநாளே அமைச்சரானது ஏன்? செந்தில்பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமின் கிடைத்த மறுநாளே அமைச்சராக பதவியேற்றிருப்பது, சாட்சியங்களுக்கு அழுத்தத்தை உருவாக்காதா? என்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமினில் வெளியே வந்தார். பிறகு, மறுநாளே அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கு விசாரணையை துரிதப்படுத்தக்கோரி, அவரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராகக் கூறப்படும் ஒய்.பாலாஜி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு ஓராண்டை கடந்த பிறகும், இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இந்த வழக்கை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்தில் தனி நீதிபதியை நியமிக்க வேண்டும், என வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த போது, செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை நீர்த்து போகச் செய்யும் விதமாக, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை இந்த வழக்கில் புதிதாக தமிழக அரசும், போலீசாரும் சேர்த்துள்ளதாகவும், அமைச்சர் பதவியில் இல்லை எனக் காரணம் காட்டி ஜாமினை பெற்ற அவர், மறுநாளே மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளதாகவும், மனுதாரர் ஒய். பாலாஜி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. எனவே, அவரது ஜாமினை ரத்து செய்யுமாறு சுப்ரிம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி அமைச்சராகி விட்டதால், விசாரணை பாதிக்கும் என்று மனுதாரர்கள் தரப்பு வாதிட்டனர். அப்போது, அரசியல் உள்நோக்கம், காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே தனக்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்யப்படுவதாக செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'ஜாமின் பெற்ற மறுநாளே அமைச்சராகி உள்ளீர்கள். இதன்மூலம், இந்த வழக்கில் தொடர்புள்ள சாட்சிகளுக்கு அழுத்தம் உண்டாகாதா? வழக்கின் விசாரணை பாதிக்கப்பட்டால், அமலாக்கத்துறையினர் கோர்ட்டை நாடுவார்கள்,' எனக் கூறினர். தொடர்ந்து, வழக்கின் விசாரணையை டிச.,13ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 81 )

sankar
டிச 15, 2024 12:21

தவறு - தண்டனையோடு பதவியை விட்டு விலக்குங்கள்


ஜெய்ஹிந்த்புரம்
டிச 10, 2024 04:37

எந்த சட்டமுகாந்திரத்தில் உச்சநீதிமன்றம் இந்த கேள்வியை எழுப்புகிறது என்பதை தெளிவுபடுத்துமா? செந்தில்பாலாஜி கடவுளிடம் சீட்டு போட்டு பார்த்தார். இல்லை கனவில் ராமர் அந்த சொன்னார், அடுத்த இரண்டு நாட்கள் அஷ்டமி, நவமி என்று ராசியில்லாத நாட்கள் இருந்தன, இப்படி எல்லாம் உருட்டினால் ஒத்துக்கொள்வீர்களா? உங்க எக்ஸ் உச்சநீதிபதியே அப்படித்தானே தீர்ப்பு எழுதுவதற்கு முன் செய்தராம்.


M Ramachandran
டிச 05, 2024 21:11

ஹீ ஹீ அதெல்லாம் ஒண்ணுமில்லையங்க. விட்ட குறைய்ய தோட்ட குறைங்க. குடும்ப கஜானாவைய்ய விட்ட முடுயுஙகளா பதவியில் இருந்தால் தானெ கொஞ்சம் காசு பாக்கலாமுங்க


joe
டிச 04, 2024 16:13

ஸ்டாலின் அவர்கள் ஊழலை 2G திராவிட மாடலோடு தொடங்கி இன்று செந்தில் பாலாஜிக்கு சேர்த்து ஊழல்வாதிகளை காப்பாற்றுகிறார் .இந்த திராவிட கட்சிகளே ஊழலே தங்கள் வியாபாரம் என தொடர்ந்து செய்கிறார்கள் .தமிழக அரசின் செயல் நடவடிக்கைகளை சுப்ரீம் கோர்ட் கண்காணித்து தி மு க எனும் அரசியல் கட்சியை தடை செய்தால் என்ன ? தொடர்ந்து ஊழல்வாதிகளை காப்பாற்றும் இந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநில அரசுக்கு தேவை இல்லை .சுப்ரீம் கோர்ட் தலையிட்டு திராவிடம் என்ற சொல்லை அரசியல் கட்சிகளுக்கு தடை செய்ய வேண்டும் .திராவிடம் என்கிற வார்த்தையை கொச்சை படுத்தும் திராவிட கட்சிகள் நாட்டுக்கு தேவை இல்லை .கவர்னர் மூலமாக சுப்ரீம் இதில் தலை இட்டு ஒரு நல்ல முடிவு எடுக்காவிட்டால் தமிழகத்துக்கு ஆபத்துதான் .கண்டிப்பாக .தமிழக மக்களை திராவிட கட்சிகளிலிருந்து காப்பாற்ற கவர்னர் மூலம் உடனடியாக நடவடிக்கை தேவை .சுப்ரீம் கோர்ட் தலை இட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் .இதுதான் தீர்வு. திராவிடம் என்கிற வார்த்தையை அரசியல் கட்சிகளிலிருந்து தடை செய்ய வேண்டும் .கவர்னர் மூலமாக சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை தேவை .


சுகுமார்
டிச 03, 2024 10:24

ஜாமீன் குடுத்த கையோடு நீதிபதியே பதவி பிரமாணம் செஞ்சு வெக்குற மாதிரி சட்டத் திருத்தம் கொண்டு வந்தால் ஒரு நாள் தாமதம் தவிர்க்கப்படலாம்.


Sri
டிச 03, 2024 09:49

நாங்க அன்னிக்கே பதவி ஏற்று இருப்போம், உங்களுடைய ஜாமின் உத்தரவு தாமதமாக கிடைத்தது


அதுல்குமார்
டிச 03, 2024 09:12

அதானியை காப்பாத்தணும்னா அணிலை விசாரிக்க முடியாது


ramani
டிச 03, 2024 07:13

இம்மாதிரி ஊழல்வாதிகளுக்கு நேரிடையாக தண்டனை தரப்படவேண்டும்


அப்பாவி
டிச 03, 2024 06:10

ஜாமீன் கிடைச்ச அன்னிக்கே அமைச்சராயிருப்பாரு யுவர் ஆனர். ஆனா சாயங்காலம்தான் கிடைச்சுது. எல்லோரும் வீட்டிற்கு போயிட்டாங்க.


ராமகிருஷ்ணன்
டிச 03, 2024 04:41

ஏன் என்று கோர்டாருக்கு தெரியாதா. விடியலின் சுருட்டும் வசூல். குறைந்தது விட்டது. இதனால் அவசரமாக அமைச்சர் பதவியை கொடுத்தது விடியல். சின்ன குழந்தைகளுக்கு கூட தெரியும் ஐயா.


சமீபத்திய செய்தி