உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் பாத யாத்திரை மேற்கொண்டது ஏன்? பிரியங்கா சொல்கிறார் புது விளக்கம்

ராகுல் பாத யாத்திரை மேற்கொண்டது ஏன்? பிரியங்கா சொல்கிறார் புது விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: '' பா.ஜ.,வின் எதிர்மறை சக்தி மற்றும் பிரசாரத்தால் மக்கள் நம்பிக்கை இழந்த நேரத்தில், எனது சகோதரர் ராகுல் 'பாரத் ஜோடோ யாத்திரை' மேற்கொண்டார், '' என வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா கூறியுள்ளார்.வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா பிரசார கூட்டத்தில் பேசியதாவது: ஏராளமான மக்கள் நம்பிக்கை இழந்து காணப்பட்டனர். என்ன செய்வது என தெரியாமல் இருந்தனர். பா.ஜ.,வின் பொய்பிரசாரம் மற்றும் அக்கட்சியின் எதிர்மறை சக்திக்கு எதிராக எப்படி போராட போகிறோம் என்ற பயத்தில் இருந்தனர். அந்த நேரத்தில் தான் ஒற்றுமை மற்றும் அமைதி என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 ஆயிரம் கி.மீ., தூரம் நடைபயணம் மேற்கொள்ள எனது சகோதரர் ராகுல் முடிவு செய்தார்.இவ்வளவு தூரம் நடப்பதற்கு நீங்கள் தான் தைரியம் கொடுத்தீர்கள். வெறுப்பு, குழப்பம் மற்றும் பிரிவினை பரவிய நேரத்தில் அன்பு, சகோதரத்துவம் மற்றும் அமைதி பற்றி பேச இன்னும் 4 ஆயிரம் கி.மீ., தூரத்திற்கு மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொள்ள உங்களின் ஆதரவு தான் காரணம் ஆக இருந்தது. இவ்வாறு பிரியங்கா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

பேசும் தமிழன்
நவ 05, 2024 07:55

வெளிநாட்டுப் பணத்தில் ஊர்வலம் போனாலும்.. உங்களை மக்கள் யாரும் நம்ப தயாராக இல்லை.... உங்கள் குடும்பம் இத்தாலியில் வேண்டுமானால் முயற்சி செய்து பார்க்கலாம்.


சிவா. தொதநாடு.
நவ 04, 2024 23:46

எவ்வளவு நடந்தாலும் மூளை மட்டும் வேலை செய்வதில்லை . ஏன் சகோதரி....


Ramesh Sargam
நவ 04, 2024 22:32

காங்கிரஸ் கட்சியினரின் நடத்தை, அதாவது ஆளும் திறமை நேர்மையாக இருந்தால் நடைபயணம் எதற்கு?


கிஜன்
நவ 04, 2024 21:43

இந்த நடைப்பயணம் ...சென்ற தேர்தலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது .... வெற்றி மிதப்பிலுள்ளவர்கள் ....இதை புரிந்துகொண்டு மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை