உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னை மட்டும் திட்டியது ஏன்? முன்னாள் அமைச்சர் சிவராம் கேள்வி

என்னை மட்டும் திட்டியது ஏன்? முன்னாள் அமைச்சர் சிவராம் கேள்வி

பெங்களூரு: தன்னை மட்டும் எச்சரித்த, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் மீது, அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சிவராம் கோபம் கொண்டுள்ளார்.காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவராம், சில நாட்களுக்கு முன்பு, ஹாசனில் ஊடகத்தினர் சந்திப்பு நடத்தியபோது, காங்கிரஸ் அரசு மீது கமிஷன் குற்றச்சாட்டை சுமத்தினார். நிதியுதவி வழங்குவதில் பாரபட்சம் பார்ப்பதாகவும், குற்றஞ்சாட்டினார்.சொந்த கட்சியின் மீதே குற்றம் சாட்டியதால் அரசுக்கும், கட்சிக்கும் தர்ம சங்கடம் ஏற்பட்டது. இதை தீவிரமாக கருதிய துணை முதல்வருமான, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், சிவராமை தொடர்பு கொண்டு, “ஊடகத்தினர் முன்னிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேச வேண்டாம்,” என, எச்சரித்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையில், சிவராம் கூறியதாவது:ஹாசன் மாவட்ட பிரச்னையை, நான் சுட்டிக் காட்டியதால், என்னை கட்சி எச்சரித்துள்ளது. ஆனால், காங்., மேலிடத்துக்கு எதிராக பேசிய, முன்னாள் அமைச்சர் ராஜண்ணா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களை தன் அருகில் வைத்துக்கொண்டு, என்னை உட்கார கூட சொல்லாமல், ஒருமையில் திட்டினார்.ஹாசன் மாவட்ட பிரச்னைகள், நிதி வழங்குவதில் பாரபட்சம் பார்ப்பது குறித்து பேசினேன். அதை சரி செய்யும்படி வலியுறுத்தினேன். கமிஷன் பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் ராஜண்ணா, கார்ப்பரேஷன், வாரியங்கள் நியமனத்தில் தன் கருத்து கேட்கவில்லை என, கொதிப்பில், 'நான், காங்கிரஸ் மேலிடத்துக்கு அடிமையா. மேலிடம் கூறியதை கேட்க வேண்டுமா?' என்றெல்லாம் பேசினார்.ராஜண்ணாவை மாநில காங்கிரஸ் தலைமை, கண்டிக்கவில்லை; எச்சரிக்காதது ஏன்? என்னை மட்டும் ஊடகத்தினர் முன் எதையும் கூறக்கூடாது என, எச்சரித்தார். இதை என்னால் சகிக்க முடியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ