உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.40 கோடிக்கு மும்பை பங்களாவை விலை பேசும் கங்கனா

ரூ.40 கோடிக்கு மும்பை பங்களாவை விலை பேசும் கங்கனா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பை பந்தராவில் உள்ள தனக்கு சொந்தமான பங்களாவை ரூ. 40 கோடிக்கு விற்பனை செய்ய பாலிவுட் நடிகையும், பா.ஜ. எம்.பி.யுமான கங்கனா ரணாவத் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இமாச்சல் பிரதேசம் மாண்டி தொகுதியில் பா.ஜ. வேட்பாளராக வெற்றி பெற்றார் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். இவருக்கு மும்பை பந்த்ராவில் ஆடம்பர சொகுசு பங்களா உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அப்போதைய சிவசேனா உத்தவ் தாக்கரே ஆட்சியின் போது சட்டவிரோத கட்டுமானம் கட்டியுள்ளதாக மும்பை மாநகராட்சி நிர்வாகம் சொகுசு பங்களாவை இடிக்க உத்தரவிட்டது. பங்களாவின் ஒரு பகுதி இடிக்கப்பட்ட நிலையில், கோர்ட்டில் கங்கனா தடைஉத்தரவு பெற்றார். பங்களா இடிக்கப்பட்டதை எதிர்த்து ரூ. 2 கோடி இழப்பீடு கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்நிலையில் அரசியலில் குதித்து எம்.பி.யாக டில்லியில் தங்கியுள்ளதால், மும்பை பந்த்ரா பங்களாவை ரூ. 40 கோடிக்கு விற்பனை செய்ய கங்கனா ரணாவத் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

M V ganeshan
ஆக 05, 2024 21:57

How much of black money she is getting to evade the tax to which to what extent her party will help to avoid IT raid and ED raid. Thanks to the blessings of Mandya constituency. Jai namo ns & as. Jai Bharat.


Indian
ஆக 05, 2024 13:49

நாற்பது கோடி குறைவு ...நானூறு கோடி கு விலை போகும் ....


DS.Kannu
ஆக 05, 2024 10:20

செய்தி புரியவில்லை.


ஆரூர் ரங்
ஆக 05, 2024 12:08

ராசியானதில்லை ன்னு இடிக்கப்பட்ட வீட்டை நிலத்துடன் விற்கிறார். உங்களுக்கென்ன ஆர்வம்? வாங்கவா போறீங்க?


Dalit Panthers
ஆக 05, 2024 04:24

பாஜக நடிப்பு அரசியல் நிபுணத்துவம் 2 கோடியை 40 கோடி ரூபாய் ஆக்கும் னா இந்திய நாடு தத்தளிக்கும் பொருளாதாரம் மக்கள் தான் சிந்திக்க வேண்டும் பாஜக ஆர் எஸ் எஸ் ஆட்சியை கலைக்க வேண்டும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முஜி அவர்கள் வழக்கறிஞர் தலித் கோ பிரவீணா MBBS BL ப்ரெசிடெண்ட் ஆல் இண்டியா தலித் சமாஜ் மற்றும் தமிழ் முன்னேற்ற கழகம்


subramanian
ஆக 05, 2024 14:03

உன் பதிவு ஒரு பேத்தல். எப்படி கலைப்பாய்? எதற்காக கலைப்பாய்? தலித் மக்களுக்கு மோடி ஒன்றும் தீங்கு செய்யவில்லையே? ஓ..... நீ தலித் போர்வையில் முகமூடி தமிழ் போராளியா?... அர்பன் நெக்ஸாலிசம்... நீ சிறையில் இருக்க வேண்டிய ஆளா?


Anantharaman Srinivasan
ஆக 04, 2024 23:27

BJP MP ர..background இருக்கு. 40 கோடிக்கு வாங்க முட்டி மோதுவார்கள்..


steel
ஆக 04, 2024 23:02

பங்களாவை இடித்தர்களா பின்னே அதை 40 கோடிக்கு எப்படி விற்கமுடியும். என்னையா குழப்பம்.


ஆரூர் ரங்
ஆக 05, 2024 08:02

மதிப்பு மிக அதிகம்.


Sundar
ஆக 04, 2024 22:39

இந்தம்மா சம்பாதிச்சு வாங்கியது. சொல்லிட்டு செய்யுது. நம்ம அரசியல்வாதிகள்? அவங்க சம்பளம் மட்டும் வச்சு சொத்து சேர்க்க முடியுமா?...


ராஜ்
ஆக 04, 2024 22:28

அது எப்படி அம்மா உங்களுக்கு எல்லாம் கோடி கோடியாக பணம் வருகிறது. நாங்கள் எல்லாம் 20 ரூபாய்க்கு பிரட் வாங்க காசு இல்லாம கடன் வாங்குகிறோம்.


N Sasikumar Yadhav
ஆக 05, 2024 00:21

அவராவது சினிமாவில் நடித்து சம்பாதித்தார் . ஆனால் கோபாலபுர குடும்பம் எப்படி சம்பாதித்தது என கேள்வி கேட்டு பழகுங்கள் தமிழக கடனை நினைத்து பாருங்க


subramanian
ஆக 05, 2024 14:13

. நடிகர் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா இவங்க சம்பளம் எவ்வளவு தெரியுமா உங்களுக்கு? பல கோடிகள். தமிழ் சினிமா குட்டி யானை என்றால் இந்தி சினிமா மெகா யானை... இப்போதும் உங்களுக்கு புரியவில்லை என்றால்....


N.Chinnachamy
ஆக 04, 2024 21:56

ரொம்ப முக்கியமான செய்தி.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ