உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்.சி.சி.,க்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?: பாதுகாப்பு துறை அமைச்சர் விளக்கம்

என்.சி.சி.,க்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?: பாதுகாப்பு துறை அமைச்சர் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேசிய உணர்வை வளர்க்கவும், தேசிய பெருமையை மேம்படுத்தவும் என்.சி.சி.,(தேசிய மாணவர் படை) உதவுகிறது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.இது குறித்து ராஜ்நாத் சிங் கூறியதாவது: மாணவர்கள் அனைவரும் என்.சி.சி.,யில் இணைய வேண்டும். உடல் பயிற்சி உங்களை உடல் ரீதியாக வலிமையாக்கும். நீங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லலாம். உங்கள் சமூகத் திறன்களை மேம்படுத்தும் மக்களுடன் பழகலாம்.தேசிய உணர்வை வளர்க்கவும், தேசிய பெருமையை மேம்படுத்தவும் என்.சி.சி., உதவுகிறது. இந்திய விடுதலை போராட்ட வீரர் சந்திரசேகர ஆசாத் ஆங்கிலேயர் தோட்டா தன் உடலில் புகுந்து உயிரிழந்து விடக்கூடாது என்று, தன்னைத்தானே சுட்டுக் கொன்று உயிரிழந்தார்.அப்போது தான் இந்தியா சுதந்திரம் அடைந்தது. தேசப் பெருமை என்பது மனித இதயத்தின் வலிமையான உணர்வு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RADE
ஜன 20, 2024 14:10

நன்றாக கிராம மக்களுக்கு எடுத்து செல்லுங்கள் அனைத்து கலோரியும் பள்ளிகள் ஒரு நிலைக்கு மேல வரணும் என்றால் என்சிசி கட்டாயம் அதில் இத்தனை பெயர் தகுதி திறன் உடன் இருக்கனும் என்று சட்டம் கொண்டு வாருங்கள். கண்டிப்பாக மாற்று மதத்தவர் பள்ளி கல்லூரியில் இது கட்டாயம் என்று சட்டம் கொண்டு வாருங்கள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை