உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாட்டர் டேங்கர் மாபியாவுக்கு எதிராக ஏன் நடவடிக்கை இல்லை? டில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

வாட்டர் டேங்கர் மாபியாவுக்கு எதிராக ஏன் நடவடிக்கை இல்லை? டில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடில்லி: ‛‛ கடும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கியுள்ள டில்லியில், வாட்டர் டேங்கர் மாபியாக்கள் மற்றும் தண்ணீரை வீணடிப்பவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை'' என டில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் சராமரியாக கேள்வி எழுப்பி உள்ளது.வரலாறு காணாத கோடைக்கு மத்தியில் தேசிய தலைநகரான டில்லி கடும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் யமுனை நதி நீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tiwypmim&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், குடிநீர் தட்டுப்பாடு தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு விசாரணை நடத்தியது. இந்த அமர்வில், நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் பிரசன்னா பிவி வரலே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது: டில்லி குடிநீர் டேங்கர் மாபியாக்கள் இன்னும் செயல்படுகின்றனர். ஆனால், நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. டில்லி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், டில்லி போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க நாங்கள் உத்தரவிட முடியும். நீதிமன்றத்தின் முன்பு பொய்யான அறிக்கைகளை ஏன் தாக்கல் செய்கிறீர்கள்? ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து தண்ணீர் வருகிறது. அந்த தண்ணீர் டில்லியில் எங்கு செல்கிறது? டில்லியில் அதிகளவு வாட்டர் டேங்கர் மாபியாக்கள், தண்ணீர் வீணடிப்பு உள்ளது. இதில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். மக்கள் அவதிப்படுகின்றனர். இதனை டிவி மூலம் பார்க்கிறோம். கோடையில் தண்ணீர் பற்றாக்குறை அடிக்கடி ஏற்படும் என்றால், தண்ணீர் விரயத்தை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பா.ஜ., கேள்வி

இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.,வின் ஷெசாத் பூனவாலா கூறியதாவது: மதுபானக் கொள்கைக்கு பிறகு, ஆம் ஆத்மியின் குடிநீர் ஊழல் தெரிய வருகிறது. அதனை உச்சநீதிமன்றம் வெளிப்படுத்தி உள்ளது. டில்லி வாட்டர் டேங்கர் மாபியா மூலம் வினியோகிக்கப்படுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பி உள்ளது. ஆம் ஆத்மி அரசுக்கு திறமையில்லை. டேங்கர் மாபியாக்களுடன் அவர்களுக்கு உள்ள உறவு என்ன? அவர்களுடன் ஒப்பந்தம் செய்யும் அவர்கள், மக்களுக்கு அதிக விலைக்கு தண்ணீரை விற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

அப்புராஜா
ஜூன் 12, 2024 17:45

ஜல் ஜீவன் திட்டம் கேள்வி கேக்க மாட்டாங்க.

Godfather_Senior
ஜூன் 12, 2024 16:38

AAP = In short, fraudsters, total fraud and corruption in every nook and corner of their government This is quite apart from their nefarious activities like backing the DeepState acts and doing all anti-India & Anti-Hindu activities.

அசோகன்
ஜூன் 12, 2024 15:58

தமிழ் நாட்டிலும் இதை கொண்டுவந்தால் பல கோடிகளை பார்க்கலாமே......

இறைவி
ஜூன் 12, 2024 15:53

தண்ணீர் டேங்கர் மாஃபியா டெல்லியில் மட்டும் இல்லை. முழு அளவில் சென்னையில் கொள்ளை நடைபெறுகிறது. காலம் காலமாக சென்னையில் தெருவுக்கு தெரு டேங்கரில்தான் தண்ணீர் விநியோகம் செய்யப் படுகிறது. விசாரித்தால் குழாயில் அனுப்பப்படும் தண்ணீர் எல்லா தெருக்களுக்கும் தேவையான அழுத்தத்துடன் சென்று சேர்வதில்லை என்று விளக்கம் கொடுப்பார்கள். கடற்கரை ஓரமாக சமதளத்தில் இருக்கும் சென்னையில் எப்படி தண்ணீர் குழாயில் செல்லாமல் இருக்கும். மலைப்பாங்கான மேடு பள்ளங்கள் உள்ள பெங்களூரில் பைப் மூலம் எந்த குறையும் இன்றி நீர் விநியோகம் செய்யப்படுகிறது. இங்கு அந்த அந்த தெருவில் இருக்கும் கட்சி ஆட்கள் வீட்டு வாசலில் பிளாஸ்டிக் டேங்க் வைத்து குடத்திற்கு இவ்வளவு என்று வசூல். எந்த கழகம் ஆட்சியில் இருந்தாலும் டேங்கர் மூலம்தான் தண்ணீர் சப்ளை. அப்போதுதானே காண்ட்ராக்ட் கமிஷன் கிடைக்கும்.

GMM
ஜூன் 12, 2024 15:15

மாபியா இல்லை என்றால் மாநகரில் குற்றம் இருக்காது.

மேலும் செய்திகள்

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை