உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்ப அதிர்ச்சி தர வந்த கணவரை 15 துண்டாக வெட்டி கொன்ற மனைவி

இன்ப அதிர்ச்சி தர வந்த கணவரை 15 துண்டாக வெட்டி கொன்ற மனைவி

மீரட் : லண்டனில் இருந்து திடீரென திரும்பி வந்த கப்பல் அதிகாரியான தன் கணவரை, கள்ளக் காதலனுடன் சேர்ந்து, 15 துண்டுகளாக வெட்டிக் கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். உத்தர பிரதேசத்தின் கவுரிபுரா பகுதியைச் சேர்ந்த பெண் முஸ்கான் ரஸ்தோகி, 27. இவர், வர்த்தக கப்பல் அதிகாரியாக பணிபுரிந்த சவுரப் ராஜ்புத், 29, என்பவரை 2016-ல் காதல் திருமணம் செய்தார். இரு வீட்டார் எதிர்ப்பால், மீரட்டின் இந்திரா நகரில் வாடகை வீட்டில் வசித்தனர். 2019-ல் பெண் குழந்தை பிறந்த பின், ஷகில், 25, என்பவருடன் முஸ்கானுக்கு பழக்கம் ஏற்பட்டது.கப்பலிலேயே மாதக்கணக்கில் சவுரப் பணியில் இருந்தது, முஸ்கானுக்கு வசதியாக இருந்தது. சவுரப் வேலை செய்த கப்பல், கடந்த மாதம் லண்டன் வந்தது.மனைவி முஸ்கானின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த சவுரப், திடீரென லண்டனில் இருந்து புறப்பட்டு கடந்த பிப்., 24-ல் உ.பி., வந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த முஸ்கான், சவுரபை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.கடந்த 4ம் தேதி, கணவருக்கு உணவில் துாக்க மருந்து கலந்து கொடுத்தார். அவர் மயங்கியதும் காதலன் ஷகிலுடன் சேர்ந்து, கத்தியால் 15 துண்டுகளாக சவுரபை வெட்டிக் கொன்றார். பின்னர், பெரிய டிரம்மில் அந்த துண்டுகளை போட்டு மூடி, சிமென்டால் பூசினார்.சவுரபை காணாமல், அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது, அவர் மணாலி சென்று விட்டதாகவும், தானும் செல்ல இருப்பதாகவும் கூறிய முஸ்கான், எதுவுமே நடக்காதது போல் கள்ளக் காதலனுடன் மணாலி சென்றார். அங்கிருந்தபடியே, கொலையை மறைப்பதற்காக, சவுரபின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிலேயே ஏராளமான படங்களை முஸ்கான் பதிவிட்டுள்ளார். ஆனால், சவுரபை மொபைல்போனில் அவரது குடும்பத்தினர் தொடர்பு கொண்டால், யாரும் எடுக்கவில்லை. சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே, 10 நாட்களுக்கு மேல் திறக்கப்படாமல் கிடந்த முஸ்கான் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அக்கம்பக்கத்தினர் போலீசில் தெரிவித்தனர். போலீசார், கதவை உடைத்து வீட்டினுள் சென்று, டிரம்மை அறுத்து பார்த்தபோது, அழுகிய நிலையில் சவுரப் உடல் பாகங்கள் கிடந்தன. இதையடுத்து, முஸ்கானையும், ஷகிலையும் தேடிய போலீசார், நேற்று அவர்களை கைது செய்தனர். இருவரிடமும் விசாரித்தபோது, சவுரபை திட்டம்போட்டு கொன்று டிரம்மில் அடைத்ததை ஒப்புக் கொண்டனர். கொலையை மறைக்க மணாலியில் சுற்றியதாகவும் தெரிவித்தனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

sankaran
ஏப் 01, 2025 22:43

இந்த மாதிரி செய்தி தினம் ஒன்று படிக்கிறேன்.. இன்னமும் பெண் உரிமை , பெண் சுதந்திரம் பற்றி பேசுபவர்கள் பற்றி ஆச்சர்யமாக இருக்கிறது... ஆண்கள் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பது மிக நல்லது .... மனித சமுதாயம் அழியட்டும்... விலங்குகள் கூட இந்த மாதிரி ஒழுங்கீனமாக இருப்பது இல்லை...சீ கேவலம்...


raja
மார் 26, 2025 10:40

ம்ம்ம்.....காதல் இதுதான் திருமணம் கடந்த காதலோ அவ்வளவு உடல் வெறி அவளுக்கு?? அவன் வீட்டை எதிர்த்து காதல் கல்யாணம் செய்ததற்கு தண்டனை கொடுத்தால் அந்த காதல் மனைவி... என்னமோ மனித தன்மை செத்துவிட்டது என்பது உண்மை.


Dhivya N S
மார் 25, 2025 12:09

உடல் சுகம் தான் முக்கியம் என்று நினைக்கும் பெண்கள் இது போல் கடற்படை கப்பலில் வேலை பார்க்கும் ஆண்களை கல்யாணம் செய்ய கூடாது. செய்த பிறகு உடல் சுகம் முக்கிய தேவையாக தோன்றினால் விவாகரத்து செய்து விட்டு தங்கள் இஷ்டப்படி வாழலாம். அதை விட்டு எதற்கு கொலை செய்ய வேண்டும்?


Thiyagarajan S
மார் 20, 2025 22:27

இது ஈரோட்டு றாம்சாமியின் மண் என்பதை நிரூபித்த அந்த மங்கையர் திலகத்திற்கு வாழ்த்துக்கள்


Tirunelveliகாரன்
மார் 21, 2025 14:35

நடந்தது உத்திரப்பிரதேசம் எனபதை கூட அறியாமல் இருப்பது தான் இந்த நாட்டின் விதி. நம்மை ஆள்பவர்கள் மாறப்போவதே இல்லை


Vijaya Koothan
மார் 20, 2025 20:34

குடுமிக்காரனை பார்த்thaதான் கொலையாளி மாதிரி தெரியுது


Vijaya Koothan
மார் 20, 2025 20:33

அகோரி...


Sampath Kumar
மார் 20, 2025 16:52

பெண் விடுதலை பேசும் அதி மேதாவிகளுக்கு ஒரு கேள்வி உங்க வீடு பொண்டுக இப்படி செய்தல் நீ ஏற்று கொள்வாயா ? பதில் சொல்லுடா இதை எல்லாம் அறிந்து தாண்ட சனாதனம் அறிவுறுத்தி செழிக்கிறது பேனை ஏங்கே வைக்க வேண்டு அங்கே தான் வைக்க வேண்டும் என்று யாருடா கேக்குறீங்க போங்கடா பொய் எடை போட்டு உங்க முற்போக்கு ?சிந்தனையை விதைத்து நாட்டை நாசம் ஆகுங்க


ram
மார் 20, 2025 16:46

அமைதி ஆட்களை மிஞ்சும் அமைதி பெண்கள், இவர்கள் பயங்கரமானார்கள்


Rasheel
மார் 20, 2025 11:32

இன்ஸ்டாகிராம், facebook போன்ற இணையதளங்களில் திருமணமான, காலேஜ் செல்லும் பெண்களுக்கு வலை விரிப்பது அதிகரித்து உள்ளது. அதில் விழும் மோசமான நபர்கள் கணவர்களை கள்ள காதலர்களுடன் சேர்ந்து கொல்லவும் தயங்குவதில்லை.


பேசும் தமிழன்
மார் 20, 2025 08:45

இரண்டு ஆண்களின் போட்டோ இருக்கிறது.. இதிலே யார் கொலையானவர்... யார் கொலையாளி...


சமீபத்திய செய்தி