உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கணவரை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது

கணவரை கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைது

ஹாசன்: கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்ததால் கணவரை கொன்று உடலை எரித்த, மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.ஹாசன் அரிசிகெரே அருகே திருப்தி கிராசில், கடந்த 15ம் தேதி பாதி உடல் கருகிய நிலையில், ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீஸ் நடத்திய விசாரணையில் அந்த நபர், அரிசிகெரே டவுனில் வசித்த முசாமில், 35 என்பது தெரிந்தது. அவரை யாரோ கொன்று, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததும் தெரிந்தது.முசாமில் இறப்பில் அவரது மனைவி பாத்திமா, 34 மீது சந்தேகம் இருப்பதாக, குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். இதனால் பாத்திமாவை போலீசார் கண்காணித்தனர். அவரது மொபைல் அழைப்புகளையும் ஆய்வு செய்தனர். யாசின், 35 என்பவருடன் அடிக்கடி பேசியது தெரிந்தது.இதையடுத்து, நேற்று முன்தினம் இருவரையும் பிடித்து, போலீசார் விசாரித்தனர். கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்ததால், முசாமிலை அழைத்து சென்று கல்லால் தாக்கி கொன்று, பின், பெட்ரோல் ஊற்றி உடலை எரித்ததை ஒப்புக்கொண்டனர். இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை