உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முல்லையனகிரியில் காட்டு தீ அபூர்வமான தாவரங்கள் தீக்கிரை

முல்லையனகிரியில் காட்டு தீ அபூர்வமான தாவரங்கள் தீக்கிரை

சிக்கமகளூரு: பிரசித்தி பெற்ற முல்லையன கிரியில், காட்டுத்தீ ஏற்பட்டு, நுாற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையானது.கோடை காலத்துக்கு முன்பே, கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. பெங்களூரு, சிக்கமகளூரு, சிக்கபல்லாபூர் உட்பட, பல மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.சிக்கமகளூரின், முல்லையனகிரி மலை வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். இந்த வனப்பகுதியில், நேற்று காலை வெப்பத்தின் தாக்கத்தால் தீப்பற்றியது. தீயணைப்பு படையினர், வனத்துறையினர் தீயை கட்டுப்படுத்த போராடுகின்றனர். இவர்களுக்கு பொது மக்களும் உதவுகின்றனர்.மலைப்பகுதியில் அடர்ந்த கரும்புகை சூழ்ந்துள்ளதால், தீயை கட்டுப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ளது. மலையின் கீழ்ப்பகுதிக்கு செல்ல முடியவில்லை. மேலிருந்தே தண்ணீரை இறைத்து தீயை அணைக்க முயற்சிக்கின்றனர். காற்று வேகமாக வீசுவதால், தீ பரவிக்கொண்டே இருக்கிறது.ஞாயிறு விடுமுறை என்பதால், ஏராளமான சுற்றுலா பயணியர், வந்துள்ளனர். தீ சாலை வரை பரவியுள்ளதால், சில வாகனங்கள் சாலையிலேயே நின்றுள்ளன. காட்டுத்தீயால் சுற்றுலா பயணியருக்கு எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. ஆனால் அபூர்வமான தாவரங்கள் தீக்கிரையாகின. விலங்குகளும் கூட இறந்திருக்க கூடும். தீ கட்டுக்குள் வந்த பின், விலங்குகளின் நிலை தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ