உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாநில அந்தஸ்து வேணும்; சுப்ரீம் கோர்ட் கதவை தட்டுவேன்: சொல்கிறார் உமர் அப்துல்லா

மாநில அந்தஸ்து வேணும்; சுப்ரீம் கோர்ட் கதவை தட்டுவேன்: சொல்கிறார் உமர் அப்துல்லா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: 'ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை மீட்க உச்ச நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவேன்' என தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.கடந்த 2019ம் ஆண்டு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, முதல்முறையாக, காஷ்மீர் சட்டசபைக்கு, வரும், 18, 25, அக்., 1ம் தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இது தொடர்பாக தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா ஆங்கிலச் செய்தி சேனலுக்கு, அளித்த பேட்டி: சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை மீட்டெடுப்பது நீண்ட போராட்டமாக இருக்கலாம், சட்டசபை தீர்மானத்தின் மூலம் மாநில அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்ற முடியும். மாநில அந்தஸ்து கேட்டு சுப்ரீம் கோர்ட் கதவை தட்டுவேன். மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதே முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்.

பயங்கரவாத தாக்குதல்

காஷ்மீருக்கு அதன் மாநில அந்தஸ்து நீர்த்துப் போகாமல் திரும்ப வழங்கப்படும் என பார்லிமென்டில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்தனர். மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை நாங்கள் ஏற்கவில்லை. கதுவா , சம்பா, ரியாசி, தோடா, பூஞ்ச், ரஜோரியில் இன்று பயங்கரவாத தாக்குதல்கள் அதிகம் நடக்கின்றன. நீங்கள் பார்த்திருப்பீர்கள். புதிய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இது அதிகம் நடக்காது. இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

JusticeForAll
செப் 25, 2024 19:40

Another idiot ,


sambath kumar
செப் 12, 2024 10:17

liability of our country.


தத்வமசி
செப் 11, 2024 14:09

நீங்களும் முப்தி குடும்பமும் கொள்ளை அடித்து வைத்துள்ள பொருள், நிலம் பத்தாதா ? மாநிலத்தையே சுரண்டி வைத்துள்ளீர்கள். பாண்டிச்சேரியும், தில்லி யூனியன் பிரதேசங்களும் இப்படித்தான் கதவைத் தட்டுகின்றன. ஏன் உங்கள் நண்பர் ஆட்சியில் இருந்தாலும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. காரணம்.. உங்களுக்கு மாநில அந்தஸ்து கொடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் ? இப்போது என்ன குறைச்சல் ?


Anonymous
செப் 11, 2024 11:35

65 வருஷமா மாநில அந்தஸ்து இருந்தப்ப என்ன கிழிச்சீங்க? எங்க வரி பணத்தை கோடி கோடியா உங்களுக்கு கொட்டி குடுத்தது தான் மிச்சம்.எப்போ பாரு தீவிரவாதம் தான்


veeramani
செப் 11, 2024 11:16

ஜம்மு & காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி . கஸீர் வாழ் மக்களுக்கு மட்டும் தனியாக ஸ்பெஷல் கவனிப்பு தேவையில்லை. கொடுக்க கூடாது . அவ்வாறு இருக்கையில் தற்சமயம் காஷ்மீர் பகுதி அமைதி பூங்காவாக உள்ளது அப்துல்லா குடும்பம் காஷ்மீரின் அமீர் கிடையாது. வாயைப்பொத்திக்கொண்டி இருக்கவேண்டும்


Barakat Ali
செப் 11, 2024 11:05

இவன் பாக்குறதுக்கு ராகுல் மாதிரி இருக்குறாப்பல தோணுது .... எந்தப் புத்துல எந்த பாம்பு இருந்துச்சோ .....


Nagarajan D
செப் 11, 2024 12:04

அதில் என்ன சந்தேகம்? ஒரே குடும்பம் தான் மோதிலால் நேருவின் வாரிசுகள் தான்


Nagarajan D
செப் 11, 2024 10:44

போடா பாகிஸ்தான் கோர்ட்டு கதவை தட்டு... இவனும் இவன் சகோதரன் ... ஒரே மாதரி தான் இருக்கானுங்க பேசுறானுங்க... ரெண்டு பேரின் மனதிலும் தேசதுரோகம் மட்டுமே இருக்கு... நாடு சுபிக்ஷமாக இருந்தால் இவனுங்களுக்கு பொறுக்கமுடியவில்லை...


nv
செப் 11, 2024 09:38

இவன் இவனுடைய தகப்பன், பாட்டன் எல்லோருக்கும் ஒரு முழுக்கு போட வேண்டிய தருணம் காஷ்மீர் மக்களுக்கு.. பரம்பரை திருடர்கள்


sankar
செப் 11, 2024 09:10

காஸ்மீர் இனி எப்போதும் மத்திய அரசின் கைகளிலேயே இருக்கவேண்டும் - இவன் போன்ற தீவிரவாதிகள், கொள்ளைக்கூட்டம் காசுமீரை விற்றுவிடுவார்கள் பாகிஸ்தானிடம்


Kumar Kumzi
செப் 11, 2024 08:44

போயி பாக்கிஸ்தான் சுப்ஃரீம் கோர்ட் கதவை தட்டு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை