உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் இன்னும் சில நாட்கள் தங்குகிறார் ஷேக் ஹசீனா?

இந்தியாவில் இன்னும் சில நாட்கள் தங்குகிறார் ஷேக் ஹசீனா?

புதுடில்லி: ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுவதில் உள்ள பிரச்னை காரணமாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் இன்னும் சில நாட்கள் தங்கி இருப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.வங்கதேசத்தில் எழுந்த மாணவர்களின் போராட்டம் காரணமாக, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவர் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். சில சிக்கல்கள் காரணமாக அது தடைபட்டு உள்ளது. ஐரோப்பாவில் ஏதாவது ஒரு நாட்டில் அவருக்கு பாதுகாப்பான அடைக்கலம் கிடைப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு பலன் கிடைக்கும் வரை இந்தியாவில் தங்கியிருக்க ஹசீனாவுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. எப்படி பாதுகாப்பது என்பது ஒத்திகை நடத்தி பார்க்கும் அதிகாரிகள், பிரதமர் மோடியை சந்திக்க வைக்கும் திட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அது எப்போது, எங்கு என்பது குறித்து திட்டம் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.இதனிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நிலைமையை உன்னிப்பாக கண்காணிப்பதுடன், ஹசீனாவின் திட்டங்கள், வேறு நாட்டிற்கு செல்லும் அவரின் முயற்சிகள் உள்ளிட்ட தகவல்களை பிரதமர் மோடிக்கு அவர் தொடர்ந்து அளித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ramesh Kumar
அக் 21, 2024 12:34

ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுவதில் உள்ள பிரச்னை காரணமாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் இன்னும் சில நாட்கள் தங்கி இருப்பார் என தகவல் வெளியாகி உள்ளது


Natarajan Ramanathan
ஆக 08, 2024 00:42

பாலஸ்தீனம் அல்லது சிரியாவுக்கெல்லாம் செல்லமாட்டாரா?


save Dave
ஆக 07, 2024 15:13

https://hindugenocide.com/


Mr Krish Tamilnadu
ஆக 07, 2024 12:48

ராகுல் கூறியது போல் - சக்கர வியூகம் - அபிமன்யு களம் புகுந்துள்ளான். இக்கட்டான சூழ்நிலையில் பீஷ்மர், துரோணர், கர்ணன் இன்னும் சிலர். ஏன்? சார் வேண்டாத வேலை.


Ramesh Sargam
ஆக 07, 2024 12:07

தமிழகத்தில் அடைக்கலம் கொடுக்க அவர் தயாராகிவிட்டார். ஆனால் ஹசீனா அடைக்கலம் கோரினால்தான் அவர் கொடுப்பாராம்...


Svs Yaadum oore
ஆக 07, 2024 10:44

தொடர்ந்து 15 ஆண்டுகள் வங்கதேசத்தின் பிரதமர் என அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் இன்று அரசியல் அகதியாக தஞ்சம் புகும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறாராம். வங்க தேசத்திலிருந்து என்றும் எப்போதும் யார் வேண்டுமானாலும் வெளியேறும் நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்கு விடியல் திராவிடனுங்க சமூக நீதி மத சார்பின்மையாக ஆதரவு கொடுத்து ஆதார் கார்டு ரேஷன் கார்டு கொடுத்து இங்கே திருப்பூரில் அடைக்கலம் கொடுப்பார்கள் ..


Pandi Muni
ஆக 07, 2024 14:42

திராவிட கும்பலுக்கும் விரைவில் ஹசீனா நிலைமைதான் வரப்போகுது துபாயில துண்டு விரிச்சி வச்சிருக்கானுங்களாமே


Svs Yaadum oore
ஆக 07, 2024 10:42

பங்களாதேஷில் அங்குள்ள ஹிந்துக்கள் நிலைமை என்ன?? லட்ச தீவு, மாலத்தீவு மணிப்பூருக்கு சமூக நீதி மத சார்பின்மையாக ஆதரவு தெரிவித்த விடியல் திராவிடனுங்க இது பற்றி விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடுவார்கள்....


Svs Yaadum oore
ஆக 07, 2024 10:39

கேரளா பினராயி வெளியுறவு துறை செயலர் பங்களாதேஷ் ஹிந்துக்கள் மீதான வன்முறை பற்றி விரிவான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க தனி விமானத்தில் பங்களாதேஷ் பயணம் ....சமூக நீதி மத சார்பின்மையை விடியல் திராவிடனுங்க எந்த நிலைமையிலும் விட்டு கொடுக்க மாட்டார்கள் ....


Ramesh Sundram
ஆக 07, 2024 10:29

57 இஸ்லாமியா நாடுகள் இருக்கும் இடத்தில இந்த இஸ்லாமியா பெண்மணிக்கு இந்தியாவில் என்ன வேலை நாளை பிரச்சினை தீர்ந்தவுடன் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையில் இறங்குவார்


RAMAKRISHNAN NATESAN
ஆக 07, 2024 10:24

டிசம்பர் 6, 1992 அன்று தீவிர இந்துக்கள் அயோத்தியில் பாபர் மசூதியைத் தரைமட்டமாக்கினார்கள். சுதந்தரம் அடைந்ததில் இருந்தே பெரும்பான்மை இஸ்லாமியர்களால் ஓரங்கட்டப்பட்டு வந்த பங்களாதேச இந்துக்களின் வாழ்க்கை, பாபர் மசூதி உடைப்பைத் தொடர்ந்து நரகமானது. இஸ்லாமிய மதவெறிக் கும்பல்கள் பங்களாதேசத்தில் வசிக்கும் ஒவ்வொரு இந்துவையும் தேடிப் பிடித்துத் தாக்கின. இந்துக்களின் உடமைகள் நிர்மூலமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இந்துப் பெண்கள் கொடூரமாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு மசூதி உடைப்புக்குப் பதிலடியாக ஓராயிரம் கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இஸ்லாமிய கட்சிகள், இஸ்லாமிய நண்பர்கள், அரசியல் அமைப்புகள், ஊடகங்கள், கம்யூனிஸ்ட்டுகள் என அனைத்துத் தரப்பாலும் கைவிடப்பட்ட இந்துக்களின் சோகம் நினைத்துப்பார்க்க முடியாதது.. மசூதி இடிப்பின் எதிரொலியாக, இந்தியாவில் இருக்கும் சிறுபான்மை முஸ்லிம்கள் பதிலடி கொடுக்கிறார்கள். பங்களாதேசத்தில் வாழும் சிறுபான்மை இந்துக்-களோ பெரும்பான்மை முஸ்லிம்களால் அடித்துக் கொல்லப்படு-கிறார்கள். இந்தியாவில் நடப்பது ஹிந்து முஸ்லிம் கலவரம். ஆனால் பங்களாதேசத்தில் நடப்பதோ ஹிந்து ஒழிப்பு. இதுவே இந்தியாவுக்கும் பங்களாதேசத்துக்கும் உள்ள வேறுபாடு. அதுவே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான வேறுபாடும்கூட என்ற உண்மையை லஜ்ஜா என்னும் நாவலில் விவரிக்கிறார், பிறப்பால் முஸ்லிமான நாவலாசிரியர் தஸ்லிமா நஸ்ரின்.


ஆரூர் ரங்
ஆக 07, 2024 11:14

அது மசூதி என மீண்டும் எழுத வேண்டாம். அயோத்தி ஹிந்துக் கோவில் என்றே அகழ்வாராய்ச்சி கூறுகிறது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை