உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றவர் கைது

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றவர் கைது

யாத்கிர்; கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை அடித்துக் கொன்றுவிட்டு, மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டனர்.யாத்கிர், ஹுனசகியில் வசித்தவர் மானப்பா பங்கலதொட்டி, 34. இவரது மனைவி லட்சுமி, 30. லட்சுமிக்கு இதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதை அறிந்த மானப்பா கோபமடைந்து, மனைவியை கண்டித்தார். ஆனாலும் அவர் திருந்தவில்லை. இதே காரணத்தால் தம்பதிக்கிடையே தினமும் சண்டை நடந்தது.இந்த விஷயமாக நேற்று முன் தினம் இரவும் தம்பதி இடையே வாக்குவாதம் நடந்தது. அதன்பின் மானப்பா உறங்க சென்றுவிட்டார். கணவரை கொலை செய்தால், நிம்மதியாக இருக்கலாம் என நினைத்த லட்சுமி, நள்ளிரவு கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்தார்.வெளியே சத்தம் கேட்டு விடாமல், கதவு, ஜன்னல்களை மூடினர். இருவரும் சேர்ந்து, கனமான ஆயுதத்தால் மானப்பாவை தாக்கி கொலை செய்துள்ளனர். அதன்பின் கள்ளக்காதலன் அங்கிருந்து தப்பியோடினார்.நேற்று காலை தன் கணவர் மாரடைப்பால் இறந்ததாக, அக்கம், பக்கத்தினரிடம் லட்சுமி நாடகமாடி அழுதார். அப்பகுதியினருக்கு இவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. மானப்பா உடலில் ரத்த காயங்கள் இருந்தன. ஆங்காங்கே ரத்தம் கட்டியிருந்தது. கை, கால் முறிந்திருந்தது தெரிந்தது. இவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகித்தனர்.அவர்களுடன் லட்சுமி தகராறு செய்தார். அப்பகுதியினர் உடனடியாக ஹுனசகி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், விசாரித்தபோது கணவரை கொலை செய்ததை லட்சுமி ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கள்ளக்காதலனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி