உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெஸ்காம் ஊழியரை தாக்கிய பெண்

பெஸ்காம் ஊழியரை தாக்கிய பெண்

ஆனேக்கல்: சந்தாபுராவில் சட்டவிரோதமாக மின் இணைப்பு வைத்திருந்ததை அகற்றிய பெஸ்காம் ஊழியரை தாக்கிய பெண் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பெங்களூரு ஆனேக்கல் சந்தாபுராவை சேர்ந்தவர் ரூபம்மா. இவர், அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து இவரது வீட்டுக்கு சட்டவிரோதமாக மின் இணைப்பு கொடுத்துள்ளார். இதுகுறித்து பெஸ்காமுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.அங்கு வந்த பெஸ்காம் ஊழியர் வீரசந்திரா இணைப்பை துண்டித்தார். இதனால் கோபமடைந்த ரூபம்மா, பெஸ்காம் ஊழியரை ஆபாசமாக திட்டி, சரமாரியாக தாக்கி, அவர் பணி செய்யவிடாமல் இடையூறு செய்தார். பின் அங்கிருந்து ரூபம்மா சென்றுவிட்டார்.காயமடைந்த ஊழியர், சூர்யா நகர் போலீசில் புகார் செய்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பெண்ணை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை