உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாட்ஸ் அப் மூலம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் ஆர்டர்; பெண் டாக்டர் கைது

வாட்ஸ் அப் மூலம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் ஆர்டர்; பெண் டாக்டர் கைது

ஹைதராபாத்: ஆந்திராவில் வாட்ஸ் அப் மூலம் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளை ஆர்டர் செய்த பெண் டாக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் டாக்டர்க பணியாற்றி வந்தவர் நம்ரதா, இவர் வாட்ஸ் அப் மூலம் மும்பையை சேர்ந்த போதைப்பொருள் சப்ளையர் வான்ஸ் தாக்கர் என்பவரை தொடர்பு கொண்டு போதைப் பொருளை ஆர்டர் செய்துள்ளார். இதற்காக, கடந்த மே 4ம் தேதி ரூ.5 லட்சத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். இதையடுத்து, போதைப்பொருளை நம்ரதாவிடம் கொடுக்க வான்ஸ் தாக்கர் தனது உதவியாளர் பாலகிருஷ்ணனை அனுப்பியுள்ளார். இதற்காக, ஒரு ஓட்டலின் பார்க்கிங்கில் போதைப்பொருளை வாங்குவதற்காக நம்ரதா காரில் அமர்ந்திருந்தார். அப்போது, இது குறித்து தகவல் அறிந்த ராயாதுர்கம் காவல்நிலை போலீசார், நம்ரதா மற்றும் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து போதைப்பொருள் மற்றும் ரூ.10,000 ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், நம்ரதா போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதும், சுமார் ரூ.70 லட்சம் வரை இதற்காக செலவு செய்திருந்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

m.arunachalam
மே 11, 2025 19:17

பெண்களின் படிச்சிட்டு சமூகத்தை சீரழிப்பதில் முன்னணியில் உள்ளனர் . படிக்கவைத்த பெற்றோர் , இவரை திருமணம் செய்த நபரின் நிலை, இவருடைய குழந்தைகளின் வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கும் . கேவலம் .


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 12, 2025 13:15

ஒரு கடினமான உயர் பொறுப்பில் இருந்தவர் இப்படிக் கீழே இறங்குவாரா? கார்ப்பரேட் உலகில் ஒரு பெண் சாதிப்பது மிக அரிது.. சராசரிப்பெண்களால் முடியாத செயல்.. அப்படி இருந்தவர் இப்படி இறங்க வாய்ப்பே இல்லை..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை