உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாடியில் உலர்த்திய பட்டாசு வெடித்து சிதறி பெண் காயம்

மாடியில் உலர்த்திய பட்டாசு வெடித்து சிதறி பெண் காயம்

முசாபர்நகர்:வீட்டு மாடியில் உலர்த்தப்பட்ட பழைய பட்டாசுகள் வெடித்துச் சிதறி பெண் காயம் அடைந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் கதுலி நகரில் வசிப்பவர் ஆஷி,30. தீபாவளிப் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு, வீட்டை சுத்தம் செய்தார். அப்போது, வீட்டில் இருந்த பழைய பட்டாசுகளை, வீட்டு மாடியில் உலர்த்தினார். வெயிலில் காய்ந்த பட்டாசுகளை சேகரிக்கும் போது திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில், ஆஷா காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கட்டடத்திலும் லேசான சேதாரம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து, முசாபர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை