உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஸ்சில் இருக்கைக்காக பெண்கள் செருப்படி

பஸ்சில் இருக்கைக்காக பெண்கள் செருப்படி

பெலகாவி: அரசு பஸ்சில் இருக்கைக்காக சண்டை போட்ட இரு பெண்கள், ஒருவரையொருவர் செருப்பால் அடித்துக் கொண்டனர்.கர்நாடக அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில், 'சக்தி' திட்டம் அமலில் உள்ளது. இதனால் அரசு பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. பஸ்சில் பயணம் செய்யும்போது, இருக்கைக்காக பெண்கள் சண்டையிட்டுக் கொள்வதும் அடிக்கடி நடக்கிறது.நேற்று காலை பெலகாவியில் இருந்து சவதத்தி எல்லம்மா கோவிலுக்கு, கர்நாடக அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பயணம் செய்த ஒரு மூதாட்டிக்கும், பெண்ணுக்கும் இடையில் இருக்கைக்காக ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.இருவரும் ஒருவரையொருவர் தாக்கியதுடன், செருப்பாலும் அடித்துக் கொண்டனர். மற்ற பெண்கள் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. பஸ்சை நிறுத்திய டிரைவர், 'சண்டை போடாமல் இருந்தால் பஸ்சில் வாருங்கள். இல்லை என்றால் இங்கேயே இறங்கிக் கொள்ளுங்கள்' என்று எச்சரித்தார். பின், இரு பெண்களும் அமைதியாக வந்தனர்.இருவரும் சண்டை போட்டதை பஸ்சில் பயணம் செய்த ஒரு பயணி, மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை