மேலும் செய்திகள்
சரியான சிகிச்சை அளிக்காததால் 8 வயது சிறுமியின் கை அகற்றம்
39 minutes ago
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
3 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
3 hour(s) ago | 1
பாகல்குன்டே: பெங்களூரின் பாகல்குன்டேவில் வசிப்பவர் கீதா. தன் மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக வட்டிக்கு பணம் வேண்டும் என, தனக்கு அறிமுகமாகி இருந்த ஸ்வேதாவிடம் கேட்டிருந்தார்.அவரும் வேறொருவரிடம், 1.30 லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்தார். மாதந்தோறும் கீதா வட்டி செலுத்தி வந்தார். ஒரு கட்டத்தில், 'கடன் அடைந்துவிட்டது. இனி பணம் கொடுக்க முடியாது' என, கூறியுள்ளார்.இதனால், கடன் வாங்கிக் கொடுத்த ஸ்வேதா, நெருக்கடியில் சிக்கினார். கடன் தொகையை தரும்படி கீதாவிடம் கேட்டும், அவர் மறுத்தார். இதனால் இரண்டு பெண்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இருவரும் பாகல்குன்டே போலீஸ் நிலையத்தில் பரஸ்பரம் புகார் செய்துள்ளனர். கடன் தொகையை கீதாவிடம் இருந்து, பெற்றுத்தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக, ஸ்வேதா மிரட்டுகிறார். இருவரிடமும், போலீசாரும் விசாரிக்கின்றனர்.
39 minutes ago
3 hour(s) ago
3 hour(s) ago | 1