உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஓய்வுக்கு பின் எந்த அரசு பதவியும் ஏற்க மாட்டேன்; உறுதியுடன் சொல்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய்!

ஓய்வுக்கு பின் எந்த அரசு பதவியும் ஏற்க மாட்டேன்; உறுதியுடன் சொல்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'ஓய்வுக்குப் பின் எந்த அரசு பதவியும் ஏற்க மாட்டேன்' என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.மஹாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான தாராபூரில், நடந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் பேசியதாவது: தனது சொந்த கிராமத்தில் தலைமை நீதிபதியாக அல்ல, சொந்த மாவட்டத்தில் வசிப்பவன் போல் இருக்கிறேன். ஓய்வுக்குப் பிறகு எனக்கு அதிக நேரம் கிடைக்கும், எனவே தாராபூர், அமராவதி மற்றும் நாக்பூரில் அதிக நேரம் செலவிட முயற்சிப்பேன். மக்களுக்கு எளிதில் நீதி கிடைக்க வேண்டும்.நீதிபதி நியமனங்களை விரைவு படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்த முயற்சி செய்து வருகின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.கேரளா மற்றும் பீஹார் கவர்னராக பணியாற்றிய தனது தந்தை ஆர்.எஸ். கவாயின் 10வது நினைவு தினத்தை யொட்டி, அவர் தனது சொந்த கிராமத்தில் ஒரு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது தான், வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெற உள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் ஓய்வுக்குப் பிறகு உள்ள திட்டங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Ramalingam Shanmugam
ஆக 08, 2025 14:27

இல்லை என்றால் ஒன்றும் ஆகி இருக்காது என்று நினைப்பு தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவது எல்லாம் ரொம்ப அதிகம்


R.Varadarajan
ஜூலை 27, 2025 16:48

ஆண்டது போதாதா, இன்னுமா? மோதல் போக்கு மனப்பீன்மை உடையவனுக்கு இது கிடைத்ததே அதிகம் கோணங்கி கட்சி ஆட்சியர்


Ethiraj
ஜூலை 27, 2025 06:14

May be he smelt govt will not give any reemployment May be his health may not permit to take up any assignment


ஆரூர் ரங்
ஜூலை 26, 2025 22:33

வர்மா மாதிரி இன்னும் சில சகவாசம் இருந்தால் ரிடையர்டு லைப் பற்றி கவலையில்லை. இப்போதும் ஜஸ்டிஸ் வர்மான்னு மரியாதையா விளிக்கணும்னு சொன்னதுல பல அர்த்தம் தெரியுது.


Sivagiri
ஜூலை 26, 2025 19:47

ஜனாதிபதிக்கே டைம் .:.பிக்ஸ் பண்ணும் பதவியில் ,, இருந்தவர் , வேற எந்த பதவிக்கு போனாலும் , அடுத்தவங்க சொல்ற டைமுக்குதான் வேலை செய்யணும் .அதான் யோசிக்கிறார் போல . . அது முடியுமோ ? . . ஆனாலும் ? . . பல திசைகளில் இருந்து ஈர்ப்பு விசை இழுக்குமே . . .


என்றும் இந்தியன்
ஜூலை 26, 2025 19:05

ஆனால் பணம் மிக மிக அதிகமாக கொடுக்கும் கட்சியில் சேருவேன் - இப்படிக்கு இந்திய அநீதிபதிகளின் வீர வசனம்


Sundaran
ஜூலை 26, 2025 17:18

யாரோ இவருக்கு பதவி கொடுக்க தயாராக இருப்பது போல நினைக்கிறார். நீதி துறையிலும் சாதியை புகுத்தி சாதனை படைத்ததற்கு பதவி வேண்டுமா


Jack
ஜூலை 26, 2025 16:33

அப்பா கட்சி RPI கவாய் திரும்ப நடத்தலாம்


Mani
ஜூலை 26, 2025 15:57

பார்க்கலாம் . இது போல பேசியே பலர் உண்டு அனால் ஃபாலோ பண்ணுவது யாரும் இல்லை


Sridhar
ஜூலை 26, 2025 15:42

அதையும்தான் பாப்போமே அவரே அவங்க அப்பா செஞ்சது தப்புனு சொல்ல வராறா?


சமீபத்திய செய்தி