உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் யஷ்வந்த் வர்மா

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் யஷ்வந்த் வர்மா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பிடிப்பட்ட வழக்கில் விசாரணையில் உள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மா, இன்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றார்.டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா, அவரது வீட்டில் கணக்கில் காட்டப்படாத, கத்தை கத்தையாக பணம் கண்டுடெடுக்கப்பட்டது.இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. வர்மா இதுவரை இந்த குற்றச்சாட்டுகளை,வெளிப்படையாக மறுக்கவில்லை, ஆனால் சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு உட்படுவதாக தெரிவித்திருந்தார்.இதற்கிடையே, டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை மீண்டும் அவர் ஏற்கனவே பணியில் இருந்த அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் பரிந்துரைத்தது.ஆனால், சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் எடுத்த இந்த முடிவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஆட்சேபம் தெரிவித்தது. நீதித்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் இந்த நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்கள் எழுந்தன.இந்நிலையில் இன்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார் யஷ்வந்த் வர்மா.இருப்பினும், வர்மாவுக்கு எதிரான உள் விசாரணை தொடரும் வரை அவருக்கு எந்த நீதித்துறைப் பணியும் ஒதுக்கப்படாது. அலகாபாத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பிறகு, நீதிபதி வர்மா சீனியாரிட்டியில் ஆறாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

R S BALA
ஏப் 06, 2025 09:39

இவருக்கு மீண்டும் பதவி அளித்தது மிக மிக தவறானது இதற்குமேல் இவரிடம் கைப்பற்ற என்னஇருக்கிறது வெட்டவெளிச்சமாக அக்னியே சாட்சியளித்துவிட்டது..மக்கள் எதனையும் மறக்கமாட்டார்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. வேலியே பயிரை மேயும் இவர்கள் போன்றவர்கள் தப்பிப்பது ஜனநாயகம் தோற்றதற்கு சமம்..


J.Isaac
ஏப் 05, 2025 22:50

நீதி கேட்டு போராடும் பாமரனின் நிலைமை பரிதாபம்


J.Isaac
ஏப் 05, 2025 22:47

நீதிபதி, ஒன்றிய அரசு மெளனம். உலகமே போற்றும் நீதித்துறை.


c.mohanraj raj
ஏப் 06, 2025 07:28

காங்கிரஸ் அரசு கொண்டுவந்த திட்டம் நீதிபதிகள் தேர்ந்தெடுப்பது காங்கிரஸ் அரசு நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் சென்ற முறை நீதிபதிகள் முறையாக மாற்று அரசுக்கு வழி விட வேண்டும் என்று சொல்லும் பொழுதே தெரியும் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று


GMM
ஏப் 05, 2025 22:33

நீதிபதி வீட்டில் பண மூட்டை. உள் விசாரணை ஒரு நடவடிக்கை . பணியில்லாத பதவி மறு நடவடிக்கை . பாராளுமன்றம் கேன்டீன் உறுப்பினர்கள் ஓய்வு நேரத்தில் நீதிபதி பிரச்சனையை எழுப்பலாம். எந்த கட்சியும் அனுமதி கொடுக்கவில்லை. ? அரசியல், நீதிமன்றம், மருத்துவ ஊழலுக்கு விதி விலக்கு கொடுத்து உருப்படியாக மற்ற வேலைகளை பாருங்கள். முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு. ?.


Barakat Ali
ஏப் 05, 2025 22:20

தொடர்ந்து திராவிட பாணியில் பாவமூட்டையைக் குவித்து அதில் அமர வாழ்த்துக்கள் .....


m.arunachalam
ஏப் 05, 2025 21:39

விநோதம் . இவர்களை நம்பி நல்ல தீர்ப்புக்காக நேரம் , பணம் முதலியவற்றை செலவழித்து நம்மை அழித்துக்கொள்கிறோம் . இதை உணர்ந்து வம்பு வழக்கு இல்லாமல் வாழ பழகுவோம் .


மீனவ நண்பன்
ஏப் 05, 2025 21:22

தலையின் பின் ஒளிவட்டம் ..


Narasimhan
ஏப் 05, 2025 21:01

செந்தில் பாலாஜி கண்டினியூ செய்வது போல்தான் இதுவும்


Raj
ஏப் 05, 2025 20:48

எப்படி வர்மாக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவர் மீதுள்ள வழக்கு நடக்குமாம். என்ன ஒரு கேவலமான சட்டம். இது இந்தியாவில் மட்டும் தான் நடக்கும்.


J.Isaac
ஏப் 05, 2025 22:48

அருமையான ஆட்சி


THOMAS LEO
ஏப் 05, 2025 20:41

GOOD... VERY GOOD. GOOD ROLE MODEL FOR INDIA


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை