உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கூட்ட நெரிசலுக்கு தீர்வு காண யாத்ரி சுவிதா கேந்திரா எழும்பூர் உட்பட 76 ரயில் நிலையங்களில் அறிமுகம்

கூட்ட நெரிசலுக்கு தீர்வு காண யாத்ரி சுவிதா கேந்திரா எழும்பூர் உட்பட 76 ரயில் நிலையங்களில் அறிமுகம்

கூட்ட நெரிசல் மிகுந்த ரயில்வே ஸ்டேஷன்களில் பயணியரின் நடமாட்டத்தை எளிதாக்க, 'யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற திட்டத்தை ரயில்வே அமைச்சகம் செயல்படுத்த உள்ளது. இதற்காக நாடு முழுதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 76 முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில், சென்னை எழும்பூர் நிலையமும் இடம்பெற்றுள்ளது. பண்டிகை காலம் நாடு முழுதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் எப்போதும் அலை மோதுவது வாடிக்கை. அதிலும், பண்டிகை காலங்களில் கட்டுக்கடங்காமல் போகிறது. பயணியர் மட்டுமின்றி, வழியனுப்ப வந்தவர்கள், வியாபாரிகள், ரயில்வே ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் ரயில் நிலையத்தில் குவிவதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, 'யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற திட்டத்தை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருந்தார். பயணியர் நடமாட்டத்தை எளிதாக்குவதும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதும், ரயில் நிலையத்திற்குள் இதற்கான மேலாண்மையை மேம் படுத்துவதுமே இத் திட்டத்தின் நோக்கம். இந்த புதிய திட்டத்தின்படி, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்போருக்கு ரயில் நிலையங்களில் பிரத்யேக நுழைவு வாயில்கள் அமைக்கப்படும். இதன் மூலம், கூட்ட நெரிசலில் இருந்து பயணியரை காப்பதோடு, ரயில் நிலையத்திற்குள் சுமுகமான அணுகுமுறை உருவாக்கப்படும். இதற்காக, பயணியர் காத்திருப்பு அறை போதுமான பரப்பில் கட்டப்படும். அங்கிருந்து உரிய முறையில், பிளாட்பாரங்களுக்கு எளிதாக செல்வதற்கான வழி ஏற்படுத்தப்படும். இதற்காக, அந்த நிலையத்தின் அதிகாரப்பூர்வமற்ற வழிகள் அனைத்தும் அடைக்கப்படும். சரியா ன திட்டமிட லுடன் கூடிய தடுப்புகள் அமைக்கப்பட்டு, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் உடைய பயணியர் மட்டுமே நேரடியாக பிளாட்பாரத்திற்கு செல்வர். அதுவரை, முன்பதிவு செய்யாத பயணியர், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் எல்லாம் வெளியில் காத்திருப்பர். அதிநவீன வசதி தவிர, தேவையான இடங்களில் மேம்பாலங்கள், அதிநவீன வசதிகளுடன் கூடிய, 'சிசிடிவி' கேமராக்கள், கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும். ரயில்வே ஒப்பந்ததாரர்கள், கடை வைத்திருப்போர், பிளாட்பார வியாபாரிகள், பணியாளர்கள் என அனைவருக்கும், புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும். அதிகாரப்பூர்வ அனுமதி உள்ளவர்கள் மட்டுமே பிளாட்பாரங்களில் நுழைய முடியும். இந்த திட்டம், நாட்டிலேயே முதன்முறையாக, புதுடில்லி ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, 5,281 சதுர மீட்டர் பரப்பளவில் தனி பகுதி ஏற்படுத்தப்பட்டு, 22 டிக்கெட் கவுன்டர்கள், 25 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள், 17 சிசிடிவி கேமராக்கள், ஐந்து லக்கேஜ் ஸ்கேனர்கள், 'வைபை' இன்டர் நெட் வசதி, 120 இருக்கைகள், 18 மின்விசிறிகள், ஆர்.ஓ., குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த, 'யாத்ரி சுவிதா கேந்திரா' திட்டத்தை நாடு முழுதும் விரிவுபடுத்தப்போவதாக, ரயில்வே அமை ச்சகம் அறிவித்துள்ளது. அதற்காக, பயணியர் வருகை அதிகம் உள்ள 76 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன. அந்த பட்டியலில், மும்பை, ஹவுரா, பாட்னா, தர்பாங்கா, புவனேஸ்வர், டில்லி ஆனந்த் விகார், டில்லி நிஜாமுதீன், கான்பூர், மதுரா, ஆக்ரா, கோரக்பூர், குவஹாத்தி, செகந்திராபாத், திருப்பதி மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

KOVAIKARAN
அக் 25, 2025 12:43

அது மட்டுமின்றி அனாவசியமாக நடை மேடைகளிலில் அமைந்துள்ள சிற்றுண்டிசாலைகள், தேநீர் கடைகள் என்று பல இடங்களில் பிரயாணம் செய்யாதவர்கள் அங்குமிங்கும் அலைகிறார்கள். இதுவும் பிரயாணம் செல்பவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. எனவே இந்த புதிய திட்டம் உடனடியாக நிறைவேற வேண்டும். தமிழகத்தில், எக்மோருக்கு அடுத்து, சென்னை, சென்ட்ரல், கோவை சந்திப்பு, போன்ற நிலையங்களிலும் விரைவில் இந்த திட்டத்தை கொண்டுவரவேண்டும்.


sivakumar Thappali Krishnamoorthy
அக் 25, 2025 10:38

நீங்க அளவையில்லாமல் டிக்கெட் கொடுத்துகிட்டே இருப்பீங்க ... இந்த செலவு எல்லாம் பண்ணுவீங்க. ...கேட்க யாரு இருக்கா .


அப்பாவி
அக் 25, 2025 09:58

ரயில் நிலையத்துக்கு வெளியில் கடை, வியாபாரிகளை அனுப்புங்க. உள்ளே எதுக்கு கடை, கண்ணியெல்லாம்?


V RAMASWAMY
அக் 25, 2025 08:44

Welcome step worth introducing in all Indian Railway Stations.


Appan
அக் 25, 2025 08:03

இதெல்லாம் சரி. இதர்க்கு முன் ஏன் இவ்வளவு கூட்டம் கூடுகிறது என்று அலசி அதை சரி செய்யணும். வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் பண்டிகை, விசேஷ நாட்களின் வீட்டுக்கு செல்வார்கள். அவர்கள் செல்ல போக்குவரத்து தேவை. அதாவது அதிக ரயிகள் விடணும். அதை விட்டு மக்களை வெளியே நிறுத்தினால் அவர்கள் எங்கே போவார்கள் .. இந்த 77 வருடம் இந்திய ரயில்வே தூங்கி கொண்டு இருந்ததது . சுதந்திர இந்தியாவில் மிகவும் உலுத்து போன துறை ரயிவே . இப்போ தான் அவர்கள் கொஞ்சம் விழித்து உள்ளார்கள். சீனா நாடு பூரா புல்லட் ரயில் விடுகிறான். ஆனால் இந்தியாவோ ஒரு புல்லட் ரயில் விட 10 ஆண்டுகளாக தத்தளித்து கொண்டு இருக்கிறது . சீனாவின் அபிரத வளற்சியால் அமெரிக்காவே அவர்களை கண்டு பயப்படுகிறது.... ஆனால் இந்தியாவை சிறிலங்க என்று நினைத்து மிரட்டுகிறார்கள்.


MUTHU
அக் 25, 2025 13:28

இந்தியர்களை பொறுத்த வரையில் ரயில் நிலையங்கள் ஒரு தர்ம சத்திரம். பொழுது கடத்த, வாக்கிங் போக, குடித்துவிட்டு சுகமாய் தூங்க, ஆதரவற்று இருக்கும் பெண்களை ரேப் செய்ய இப்படி சொல்லிக்கொன்டே போகலாம். என்றாவது ஒருநாள் காவலர்கள் எவனையாவது விரட்டினர் என்றால் அதனை வீடியோ எடுத்து பெரிய விஷயம் போல் டிவிக்களில் டிஸ்கஸ் செய்வார்.


Ramesh Sargam
அக் 25, 2025 07:41

பயணியர் மட்டுமின்றி, வழியனுப்ப வந்தவர்கள், வியாபாரிகள், ரயில்வே ஊழியர்கள் மற்றும் யாசகம் கேற்பவர்கள், முக்கியமாக அரவாணிகள் என பல்வேறு தரப்பினரும் ரயில் நிலையத்தில் குவிவதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சமீபத்தில் சீனா சென்றிருந்தேன். அங்கே பிளாட்பாரத்தில் யாரையும் அனுமதிப்பதில்லை. ரயில் புறப்படுவதற்கு சிறிது நேரம் முன்பு ஒரு அனௌன்ஸ்மென்ட் வரும். புறப்படும் ரயில் பற்றிய அறிவிப்பு வரும். அந்த ரயிலில் பயணிப்பவர்கள் மட்டும் அவர்களுடைய டிக்கெட் பரிசோதனை செய்யப்பட்டு பிளாட்பாரத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்றபடி பிளாட்பாரம் காலியாக இருக்கும். ஒரு ஈ, காக்கா கூட இருக்காது. அப்படி நம் நாட்டில் செய்யமுடியுமா?


Field Marshal
அக் 25, 2025 07:15

அந்தந்த மாநில மொழிகளில் பெயர் வைக்கலாமே


Kasimani Baskaran
அக் 25, 2025 05:40

கூட்ட நெரிசலை குறைக்கவேண்டும் என்றால் அனைவரையும் அனுமதிக்கக்கூடாது..


Vasan
அக் 25, 2025 04:45

ஆக, ரயில் நிலையங்கள் விமான நிலையங்கள் போன்று ஆகி விடும்? பிரயாண சீட்டு இல்லாதவர்கள் நுழை வாயிலிலேயே நிறுத்தப்படுவர்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை