உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

பெங்களூரு : 'பத்து மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது' என, பெங்களூரு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இதனால் பெங்களூரு நகரம், பெங்களூரு ரூரல், சாம்ராஜ் நகர், சித்ரதுர்கா, குடகு, கோலார், மாண்டியா, மைசூரு, ராம்நகர், துமகூரு ஆகிய பத்து மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யும் என்பதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதேவேளையில், கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். வடக்கு உள்பகுதியில் வறண்ட காற்று இருக்கும். வடக்கு உள்பகுதியில் ஒரு சில இடங்களில், பனிமூட்டத்துக்கு வாய்ப்பு உள்ளது.பெங்களூரு நகர மாவட்டம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்துக்கு மேகமூட்டமான வானிலை காணப்படும். சில இடங்களில் இடியுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 26 டிகிரியும், குறைந்தபட்சமாக 18 டிகிரி செல்ஷியசும் வெப்ப நிலை இருக்கும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை