உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவர்கள் போராட்டத்திற்கு பணிந்தது உ.பி., அரசு

மாணவர்கள் போராட்டத்திற்கு பணிந்தது உ.பி., அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: தேர்வு முறையை மாற்றியமைத்த உ.பி., பணியாளர் தேர்வாணையத்திற்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். மாணவர்களுக்கு ஆதரவாக ராகுல் களமிறங்கினார். இதனையடுத்து முடிவை தேர்வாணையம் திரும்ப பெற்றுக் கொண்டது.

அறிவிப்பு

உ.பி.,யில் அரசு பணிகளை தேர்வு செய்வதற்காக உ.பி., பணியாளர் தேர்வாணையம் (யுபிபிஎஸ்சி) உள்ளது. இந்த ஆணையம், பிராந்திய சிவில் சர்வீஸ் (பிசிஎஸ்), ஆய்வு அலுவலர்கள்(Review officer -ஆர்ஓ) உதவி ஆய்வு அலுவலர்கள்( assistant review officer- ஏஆர்ஓ) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை சமீபத்தில் வெளியிட்டது. அதில், தேர்வுகள் மூன்று ஷிப்ட்களாக நடக்கும் என அறிவித்தது.

போராட்டம்

தேர்வுக்கு தயாராகி வந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த முறை ஒரு சிலருக்கு மட்டுமே சாதகமாக அமையும் என குற்றம்சாட்டிய அவர்கள், ஒரே ஷிப்ட் ஆக நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டம் 5 நாட்களாக நடந்து வருகிறது.பிரயாக்ராஜ் நகரில் அமைந்துள்ள யுபிபிஎஸ்சி தேர்வு அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். போலீஸ் தடுப்புகள் அமைத்து இருந்தும் அதனையும் மீறி போராட்டம் நடத்தினர். அவர்களை களைக்க போலீசார் தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ராகுல் ஆதரவு

மாணவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: '' தேர்வை எளிமைபடுத்துகிறோம் என்ற பெயரில், வெளிப்படைத்தன்மை இல்லாத அமைப்பை ஏற்படுத்துவதை ஏற்க முடியாது. மாணவர்களின் போராட்டம் நியாயமானது. கல்வி அமைப்பை அழிக்கும் பா.ஜ., அரசின் திறமையின்மைக்கு மாணவர்கள் ஏன் விலை கொடுக்க வேண்டும்.படிக்க வேண்டிய மாணவர்கள், வீதியில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களை போலீசார் துன்புறுத்துகின்றனர். கனவுகளை நிறைவேற்ற வீட்டில் இருந்து வெகுதூரத்தில் வந்து படிக்கும் மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை ஏற்க முடியாது. மாணவர்களின் கோரிக்கையை ஏற்கிறோம். சர்வாதிகாரம் மூலம் அவர்களின் உரிமையை பறிக்க முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியிருந்தார்.

உறுதி

மாணவர்களின் தொடர் போராட்டம் மற்றும் அவர்களுக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு அளிக்க துவங்கியதை தொடர்ந்து யுபிபிஎஸ்சி தனது முடிவை மாற்றி உள்ளது. இதன்படி, பிசிஎஸ் தேர்வு ஒரே நாளில் ஒரே கட்டமாக நடக்கும் எனவும், மற்ற இரு தேர்வுகள் குறித்து ஆராய குழு அமைக்கப்படும் எனவும் உறுதி அளித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

venugopal s
நவ 14, 2024 21:18

பாஜக ஆளும் மத்திய அரசும் மாநில அரசுகளும் என்ன தவறு செய்தாலும் சப்பைக்கட்டு கட்ட இங்கு ஆட்கள் உண்டு!


C.SRIRAM
நவ 14, 2024 20:40

மூன்று ஷிப்ட்களில் தேர்வு நடந்தால் என்ன குறை ?.


Sundar R
நவ 14, 2024 19:45

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் எலும்புக்கூடாக சிறுத்து பல பத்தாண்டுகள் ஆகி விட்டது. மாணவர்கள் சாதாரணமாக பேசி இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என்று நினைத்தார்கள். அது முடியாத காரணத்தால் மாணவர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அதற்கு ராகுல் காந்தி தாமாகவே முன்வந்து ஆதரவு கொடுத்திருக்கிறார். மாணவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. ராகுல் காந்தி தாமாகவே முன்வந்து தமிழக அரசினால் தமிழகத்தில் நடக்கும் மக்கள் பிரச்சினைகள் பற்றி குரல் கொடுத்தால் காங்கிரஸ் கட்சியை சாராத நாங்களும் ராகுலுக்கு துணை நிற்போம். இந்த மாதிரி சூழ்நிலை எதிர்காலத்தில் தமிழகத்தில் வரும் என்று நம்புகிறோம்.


வைகுண்டேஸ்வரன்
நவ 14, 2024 19:25

ராகுல் காந்தி மீது வன்மமும் வெறுப்பும் இவ்வளவு தான் இருக்கிறதா இல்லை இன்னும் இருக்கிறதா? செய்தி யின் விஷயத்தை விட்டு விட்டு ராகுல் காந்தி மீது காழ்ப்புணர்ச்சி காட்டி எழுதி.... என்ன கிடைத்தது? மன திருப்தியா??


Venkateswaran Rajaram
நவ 14, 2024 19:04

கோமாளி பப்பு சரியான நேரத்தில் ஆஜராகிவிட்டார் ...மீண்டும் சுற்றுலா சென்றுவிடுவார் ...வேலைவெட்டி இல்லாத பப்பு


G Mahalingam
நவ 14, 2024 18:10

ராகுல் இந்தியாவில் எதிரி. தயவு செய்து காங்கிரஸ் தலைவர்கள் இவரை புறக்கணிக்க வேண்டும்.


Dharmavaan
நவ 14, 2024 18:52

எப்படி முடியும் .ராகுல்கானை நம்பி இருக்கும் கொத்தடிமைகள் அதை செய்யுமா


Azar Mufeen
நவ 14, 2024 17:57

ஆமாம், அவர்கள் குடிப்பது தேசப்பற்று பானம், இந்த டாஸ்மாக் அடிமைகள் இருப்பதால்தான் ஜாதி, மத மோதல்கள் குறைவு, காரணம் பெருந்தலைவரும், பெரியாரும், ராஜாஜியும்


Palanisamy Sekar
நவ 14, 2024 19:07

நீங்களெல்லாம் குடிப்பதில்லை மாறாக போதைப்பொருள் தாராளமாக விநியோகிக்க செய்வது உங்களது மத நம்பிக்கை போலும். வடக்குப்பட்டி ராமசாமிக்கு தமிழ் மீது குரோதம் உள்ளது. நீங்கள் யாருமே தமிழில் பெயர் வைக்கவே மாட்டீர்கள். பொதுவெளியில் நீங்கள் யாரையும் குறை சொல்ல தகுதி என்பதே இல்லை.


Duruvesan
நவ 14, 2024 19:32

ராஜாஜி ஓகே, சொரியார் சொன்னது தமிழன் காட்டுமிராண்டி, உனக்கு இனிக்கும் ஏன்னா உன் பாஷை உருது


அப்பாவி
நவ 14, 2024 17:51

ஒரே நேஷன்..ஒரே எலக்‌ஷன் சாத்தியம்னு ரிப்போர்ட் குடுத்திருக்காங்கோ.


Nandakumar Naidu.
நவ 14, 2024 17:50

ராகுல் ஏன் பங்கேற்க மாட்டார்? அங்கு நடப்பது இவருடைய எதிரிகள் ஆட்சி அல்லவா அதனால் தான் இன்னும் எரியட்டும் என்று எண்ணெய் ஊற்றுவார். தேசத்துரோகி, சமூக விரோதி, இந்து விரோதி.


SUBBU,MADURAI
நவ 14, 2024 17:43

இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் அந்த அரசுகளை எதிர்த்து எந்த போராட்டம் நடந்தாலும் உடனே அதற்கு ஆதரவு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல போராடுபவர்களை மேலும் தூண்டி விடுவார். ராகுலை பொறுத்தவரை நம் பாரத நாட்டை எப்படியாவது துண்டு துண்டாக கூறு போட வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.


புதிய வீடியோ