மேலும் செய்திகள்
வங்கதேச எல்லையில் ஊடுருவல் முயற்சி அதிகம்: மத்திய அரசு
1 hour(s) ago
விஜயை பார்த்து திமுகவுக்கு பயம்: அண்ணாமலை பேட்டி
3 hour(s) ago | 8
லக்னோ: கடந்த 7 ஆண்டுகளில் யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரபிரதேச அரசு அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நான்காவது உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் அடிக்கல் நாட்டு விழாவில், ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது: உ.பி.,யை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் முதல்வரின் நோக்கம் நிறைவேறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.கடந்த 7 ஆண்டுகளில் யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரபிரதேச அரசு அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், அனைவரின் வளர்ச்சி, ஆதரவு, முயற்சிகள் மற்றும் நம்பிக்கையின் நோக்கத்துடன் நாடு முன்னேறி வருகிறது. சமூகத்தின் எந்தப் பிரிவினரும், எந்தத் துறையிலும் தனியாகவோ அல்லது பின்தங்கியவர்களாகவோ பார்க்கப்படுவதில்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
1 hour(s) ago
3 hour(s) ago | 8