உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இளைஞர்கள் மோதல் முதியவர் பலி

இளைஞர்கள் மோதல் முதியவர் பலி

மைசூரு: இரண்டு இளைஞர்கள் இடையிலான சண்டை, முதியவர் இறப்புக்கு காரணமானது.மைசூரின் வித்யாரண்யபுராவில் நேற்று காலை, இளைஞர்கள் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏதோ காரணத்தால், வெங்கடேஷ், ஆகாஷ் என்ற இளைஞர்களிடையே சண்டை வந்தது. கிரிக்கெட் மட்டையால், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.இவர்களின் சண்டையை வேடிக்கை பார்த்தபடி லிங்கண்ணா, 67, என்பவர் நின்றிருந்தார். இவ்வேளையில் வெங்கடேஷ் கிரிக்கெட் மட்டையை, ஆகாஷை நோக்கி வீசிய போது அவர் நகர்ந்து தப்பிவிட்டார். அங்கு நின்றிருந்த முதியவரை மட்டை தாக்கியது. இதில் காயமடைந்த அவர், சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.அங்கு வந்த வித்யாரண்யபுரா போலீசார், வெங்கடேஷை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை