உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதுசு புதுசா யோசிக்கிறாய்ங்க: பிச்சை எடுப்பதை தடுக்க ம.பி.,யில் பலே ஐடியா!

புதுசு புதுசா யோசிக்கிறாய்ங்க: பிச்சை எடுப்பதை தடுக்க ம.பி.,யில் பலே ஐடியா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்தூர்: ம.பி., மாநிலம் இந்தூரில் ஜன., 1ம் தேதி முதல் யாசகம் வழங்குவோர் மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாநகரம், நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்ட நகரங்களில் முதன்மையானது. மத்திய அரசின் சிறப்பான செயல்பாடு கொண்ட ஸ்மார்ட் சிட்டியாக தொடர்ச்சியாக தேர்வு செய்யப்பட்ட நகரம். இதற்கு, இங்கு பின்பற்றப்படும் சுகாதாரம், சாலை, சாக்கடை, பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட அன்றாட பணிகள் மிக முக்கியமானவை. அத்துடன், மாநகர நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட தீவிர முயற்சிகளும் ஒரு முக்கிய காரணம். அதன் தொடர்ச்சியாக தற்போது, புதுமையான திட்டம் ஒன்றை இந்தூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.அதன்படி பிச்சைக்காரர்கள் இல்லாததாக மாநகரத்தை மாற்றும் வகையில், மாவட்ட நிர்வாகம் ஒரு முடிவு செய்துள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் இந்தக் கொள்கை அமல்படுத்தப்படும். இது குறித்து கலெக்டர் ஆஷிஷ் சிங் கூறியதாவது: பிச்சை எடுப்பதையும், கொடுப்பதையும் தடுப்பதே எங்கள் நோக்கம். இதற்குவிழிப்புணர்வு பிரசாரம் டிச., இறுதிக்குள் மேற்கொள்ளப்படும். அதன்பின், சாலையில் யாசகம் வழங்குபவர்கள் பிடிபட்டால் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்படும்.சாலையில் செல்பவர்களிடம் யாசகம் கேட்டு தொந்தரவு செய்பவர்கள் மீதும் நடவடிக்கை நிச்சயம் இருக்கும். எனவே யாரும் பிச்சை எடுப்பவர்களுக்கு பணம் கொடுத்து ஊக்குவிக்க வேண்டாம். பிச்சை கொடுப்பதன் மூலம் பாவத்தில் பங்குதாரர்களாக மாற வேண்டாம். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 10 நகரங்களில் பிச்சை எடுப்பதில் இருந்து விடுவிப்பதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் இந்தூரும் அடங்கும்.இவ்வாறு ஆஷிஷ் சிங் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Padmasridharan
டிச 17, 2024 10:29

அதிகார பிச்சைக்காரர்கள் / இலஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் One india?? one election ?️ one india with one rule என இந்த act கொண்டுவர உங்கள் செய்தியில் Conclude செய்திருக்கலாம்


Indhuindian
டிச 17, 2024 07:42

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இந்த செய்தியை படிப்பாரா? காஞ்சிபுரம் கோயில் வாசலில் இருக்கும் இப்படிப்பேர் பட்டவர்களால் உள்ளூர் மற்றும் வெளியூர் சேவார்த்திகளுக்கு ஏற்படும் இடைசல்களும் அவர்கள் காதுகளில் விஷும் வசவுகலும் ஹிந்தியில் காலின்னு சொல்லுவாங்க அவங்க வந்து மாறு வேடத்தில் பார்த்தாங்கன்னா ஆவண செய்ய வாய்ப்பு இருக்கு.


அப்பாவி
டிச 17, 2024 06:12

நிறுத்துடா பிச்சைய.. புட்ரா வேலையை.


Rpalni
டிச 17, 2024 05:21

பிட்சை எடுப்பவர்களுக்கு திருவோடு வழங்கும் கலீஞர் திருவோடு திட்டம் த்ரவிஷ மாடல் அரசு அமல் படுத்த தயாரா?


GSR
டிச 17, 2024 00:29

நாம் பெருமை மட்டுமே பேசுகிறோம். அவர்கள் செயல் முனைப்பு காட்டுகின்றனர். செயல்படுத்துகின்றனர்.


rama adhavan
டிச 17, 2024 00:17

தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம். பிச்சைக்காரர்களையும் பிடித்து கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் உதியம் இன்றி உணவு, உடை, தற்காலிக்க இருப்பிடம், மருத்துவ வசதி மட்டும் வழங்கி வேலை வாங்கலாம். பிச்சை போடுபாவர்களையும் இதே போன்று தண்டனை தரலாம்


K V Ramadoss
டிச 16, 2024 23:38

வரவேற்கிறேன். காசி, கயா, பிரயாகை, அயோத்தியா நகரங்களுக்கு யாத்திரையாக நான் சென்றபோது நான் அனுபவப்பட்ட நிகழ்சசிகள் இன்னும் என் மனதை உலுக்குகின்றன. எங்கு சென்றாலும் பிசை எடுக்கும் சிறு வயதினர், சிறு வயது பெண்களும் பிள்ளைகளும் உங்களை விடாமல் துறத்துகின்றனர். அவர்கள் சுயமாக எடுக்கின்றனறா அல்லது அவர்களை வேலைக்கமர்த்தி பிச்சை எடுக்க வைக்கின்றனரா என்றுதெரியவில்லை. எதுவாக இருந்தாலும் ஏழ்மை எவ்வளவு இன்னும் உ.பி.இ ல் இருக்கிறது என்று தெளிவாக தெரிகிறது. வேதனை


Anantharaman Srinivasan
டிச 16, 2024 23:35

தெருவில் செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை பிடித்து தண்டிப்பதற்கு பதிலாக நகையணிந்து செல்பவர்களுக்கு அபராதம் விதிப்பதுபோலுள்ளது.


RAJ
டிச 16, 2024 22:51

Very good


m.arunachalam
டிச 16, 2024 22:28

இந்த முடிவை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். கீழ்த்தரமான செயல் என்ற உணர்வு இல்லாமல் இதை தொழிலாக செய்கின்றனர். ஆனால் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. நல்ல முயற்சி .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை